Friday 31 May 2019

ஆதித்ய ஹ்ருதயம். with tamil meaning

                               ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் தமிழ் அர்த்தத்துடன்               

                       

                                                        த்யானம்
                                       
                                 
ப்ரத்னஸ்ய விஷ்ணோ ரூபஞ்ச ஸத்யர்தஸ்ய ச ப்ரஹ்மண:/
அம்ருதஸ்ய ச ம்ருத்யோச் ச ஸூர்ய - மாத்மான- மீமஹி//

அர்த்தம் :

விஷ்ணுவின் புராதன ப்ரத்யக்ஷ ரூபமும்,சத்தியம் ருதம் அழிவு, அழியாமை என்ற இரண்டு நிலையிலும் உள்ள ப்ர்ம்மத்தின் மூர்த்தியுமாகிய சூரியனைப் போற்றுகின்றேன்.

                                      ஸ்தோத்ரம்

1.ததோ யுத்தபரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்/
   ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்//
2.தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம் /
   உபாகம்யாப்ரவீத் ராம - மகஸ்த்யோ பகவான் ருஷி: //

அர்த்தம் :

ஸ்ரீராமருக்கும், ராவணனுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தைக் காண தேவர்கள் கூட்டம் திரளாகச் சூழ்ந்துள்ளது. தேவர்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்த அகஸ்திய முனிவர், கவலையுடன் நின்று கொண்டிருக்கும் ராவணனைக் கண்டு, பின் போர் புரிய தயார் நிலையில் உள்ள ஸ்ரீராமரை நோக்கிச் செல்கிறார்.

3.ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம் /
   யேன ஸர்வா ந அரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி //

அர்த்தம் :

மகனே!

திண்மையான தோள் வலிமை கொண்டவனே! இப்போரில் எதிரிகள் அனைவரையும் நீ வெற்றி கொள்வதற்கு உண்டான புராதன ரகசியத்தை நான் உனக்குக் கூறுகிறேன் கேள். என்கிறார்.


4.ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு - விநாசனம்/
   ஜயாவஹம் ஜபேந்நித்யம் - மக்ஷய்யம் பரமம் சிவம் //

அர்த்தம் :

ஆதித்ய ஹ்ருதயம் புண்ணியத்தைத் தருவதோடு நமக்கு பகைவர்களே இல்லாமல் செய்து வெற்றியை அளிக்கவல்லது. அழிவற்ற நிலையான இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் ஜபம் செய்தால், மங்களத்தைத் தரக்கூடியது.

5.ஸர்வமங்கல- மாங்கல்யம் ஸர்வபாப - ப்ரணாசனம் /
   சிந்தா - சோக - ப்ரசமன - மாயுர்- வர்த்தன - முத்தமம் //

அர்த்தம் :

மங்கலத்துக்கெல்லாம் மங்கலம் நிறைந்ததும், அனைத்து பாவங்களையும் நாசம் செய்வதும், கவலையையும், துன்பங்களையும் களையக்கூடியதும், ஆயுளை வளர்க்கக் கூடியதுமான இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை ஜபிப்பது உத்தமமாகும்.

6.ரச்மிமந்தம்ஸமுத்யந்தம் தேவாஸுர - நமஸ்க்ருதம் /
  பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேச்வரம்.//

 அர்த்தம் :

தன் கதிர்களுடன் உதிக்கின்ற சூரியனை தேவர்கள் மட்டுமின்றி அசுரர்களும் வணங்குகின்றனர். அப்படி ஒளியைத் தருகின்ற உலக நாதனாகிய பாஸ்கரனை நீ பூஜிப்பாயக!.

7.சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன: /
   ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி : //

அர்த்தம் :

இவர் அனைத்து தேவர்களின் வடிவானவர், தேஜஸ் மிக்கவர். தன் கிரணம் எனும் கதிர்களைப் பொழிந்து, தேவர் கூட்டங்கள், அசுரர் கூட்டங்கள் மட்டுமின்றி அனைத்து உலகங்களையும் காப்பாற்றுகின்றார்.

8.ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த : ப்ரஜாபதி :/
   மஹேந்த்ரோ தனத : காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: //

அர்த்தம் :

ப்ரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், பிரஜாபதி, மஹேந்திரன், குபேரன், காலதேவன், யமன், சந்திரன் மற்றும் வருணன் என அனைத்து வடிவினரும் இவரே!.

9.பிதரோ வஸவ : ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு : /
   வாயுர் வஹ்னி : ப்ரஜாப்ராண: ருதுகர்த்தா ப்ரபாகர :  //

அர்த்தம் :

 பிதுருக்கள் (முன்னோர்கள்), வஸுக்கள், ஸாத்தியர்கள்,அஸ்வினி தேவர்கள்,மருத்துகள் இவர்களுடன் மனு, வாயு, அக்னி தவிர உலக மக்களின் உயிரும், ருதுக்களைப் படைப்பவரும் தன் பிரபையின் மூலம் ஒளியைத் தருபவரும் இவர் தான்.

10.ஆதித்ய : ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் /
     ஸுவர்ண - ஸத்ருசோ பானுர் - ஹிரண்யரேதோ திவாகர : //

 அர்த்தம் :

ச்ருஷ்டிகளின் கிரியைகளை ( கடமை அல்லது வேலை) செய்யத் தூண்டுபவரும், வான் வெளியில் சஞ்சரிப்பவரும், மழையை போஷிப்பவரும், தங்கம் போன்று ஜொலிப்பவரும், ப்ரம்மாண்டத்தை உண்டாக்கியவரும் பகலை ஆக்குபவருமான சூரியன், அதிதியின் புத்திரன் இவரே!.

11.ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி : ஸப்தஸப்திர்-மரீசிமான் /
     திமிரோன்மதன: சம்புஸ்த்வஷ்டா மார்த்தண்ட அம்சுமான் //

அர்த்தம் :'

பச்சை நிறக் குதிரைகளையுடையவரும், ஆயிரம் கிரணங்களையுடையவரும் ( ஜய, அஜய, விஜய,ஜிதப்ராண, ஜிதக்ராண, மனோஜப மற்றும் ஜிதக்ரோத ) என்ற ஏழு குதிரைகளைக் கொண்டவரும்,தன் ஒளிக்கற்றைகளால் இருளை ஒழிப்பவரும், மங்களத்தையளிப்பவரும், அனைத்தையும் அழிப்பவரும், அழித்தவற்றை மீண்டும் படைக்குமாறு தோன்றுவிப்பவரும், பிரகாசத்தின் அம்சமாகவும் விளங்குகிறார்.

12.ஹிரண்யகர்ப்ப: சிசிரஸ் -தபனோ பாஸ்கரோ ரவி : /
     அக்னிகர்ப்போs திதே: புத்ர : சங்க: சிசிர நாசன: //
அர்த்தம் :

ப்ரம்மாண்டத்தின் நடுவில் வீற்றிருப்பவரும், தன்னைப் பணிந்தவர்களின் இதயத்தை குளிரச் செய்பவரும், உஷ்ணத்தால் எரிப்பவரும், ஒளியைத் தருபவரும், அக்னியைத் தன்னிடத்திலே வைத்துக் கொண்டிருப்பவரும், சாயங்கால நேரத்தில் தண்மையாய் இருப்பவரும், 'பனியை' நாசம் செய்பவரும் அதிதியின் புத்திரரும் இவரே.

13.வ்யோமநாத - ஸ்தமோ- பேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக : /
     கனவ்ருஷ்டி - ரபாம் மித்ரோ விந்தயவீதி ப்லவங்கம : //

அர்த்தம் :

ஆகாயத்தை ஆட்சி செய்பவரும், ராஹுவை பிளப்பவரும்,ருக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களின் சாராம்சத்தை அல்லது கரை கண்டவரும், பெரும் மழையை உருவாக்குபவரும், வருணனின் நண்பரும், விந்திய மலை வழியாகச் செல்பவரும், ஆகாய மார்க்கமாகச் செல்பவரும் இவரே.

14.ஆதபி மண்டலீ ம்ருத்யு : பிங்கல : ஸர்வதாபன : /
     கவிர் விச்வோ மஹாதேஜா ரக்த : ஸர்வபவோத்பவ : //

அர்த்தம் :

வெப்பம் மிகுந்த வெயிலாய் காய்பவரும், வட்ட வடிவினரும், பகைவர்களை அழிப்பவரும்,பொன் நிறம் கொண்டவரும், அனைத்தையும் எரிப்பவரும், அனைவராலும் துதிக்கப்படுபவரும், இவ்வுலகை ஆள்பவரும், மிகுந்த காந்தி அல்லது தேஜஸ் நிறைந்தவரும்,சிவந்த நிறமுடைய இவர் உலகனைத்தும் தோற்றுவிக்கும் காரணியாய் திகழ்கிறார்.

15.நக்ஷத்ரக்ரஹதாராணா- மதிபோ விச்வபாவன : / 
     தேஜஸாமபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே //

அர்த்தம் :

விண்மீன்கள், நக்ஷத்திரங்கள்), கிரகங்கள் முதலிய (தாரா கணங்களுக்கு) கூட்டங்களுக்கு தலைவனும், உலகனைத்தையும் நிலைநிறுத்தி  உலகமயமாய் இருப்பவரும்,ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய் தேஜோமயமாய் ஒளிர்பவரும், பன்னிரண்டு ஆதித்ய நாமங்களை உடையவரான [ விஷ்ணு (12 ஆதித்யர்களின் தலைவர்), இந்திரன், தாதா, பகன், புஷ்யா, மித்திரன், வருணன், அர்யமன், அர்ச்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா மற்றும் சவித்ரி}, பன்னிரு வடிவங்கள் கொண்டவருக்கு நமஸ்காரங்கள்.

16.நம : பூர்வாய கிரயேபச்சிமாயாத்ரயே நம : /
     ஜ்யோதிர் - கணானாம் பதயே தினாதிபதயே நம : //       
                  
அர்த்தம் :

கிழக்கு மலையில் உதிக்கும் உமக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உமக்கு நமஸ்காரம். ஒளிக் கூட்டங்களுக்கு அதிபதியே உமக்கு நமஸ்காரம்.பகலவனுக்கு அதிபதியே உமக்கு நமஸ்காரம்.

17.ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோனம : /
     நமோ நம : ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம : //

அர்த்தம் :

வெற்றியை அளிப்பவரும், வெற்றிக்குப் பின் ஷேமத்தை அளிப்பவரும், பச்சை நிறக் குதிரையை உடையவருமான் உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஆயிரம் கிரணக் கதிர்களை உடையவரே! அதிதியின் புத்திரராகிய உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

18.நம : உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம :/
     நம : பத்மப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம : //

அர்த்தம் :

கொடியோரிடத்தில் உக்ரமாய் அதாவது கடுமையாய் இருப்பவரும், வீரருமாகிய உமக்கு நமஸ்காரம். வானவீதியி8ல் வேகமாய் சஞ்சரிப்பவருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். தாமரையை மலரச் செய்பவருக்கு நமஸ்காரம். மார்த்தண்டருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

19.ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயதித்ய வர்ச்சஸே /
     பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நம : //

அர்த்தம் :

ப்ரம்மா, ருத்ரன்,விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளாகவும் ஈசனாகவும், சூரியன் எனவும், ஆதித்யன் எனவும் ஒளி மிகுந்து விளங்குபவரும், காந்தி பொருந்தியவரும், சர்வம் அனைத்தையும் விழுங்குபவரும், ருத்ரமூர்த்தியாய் திகழ்பவருக்கும் நமஸ்காரம்.

20. தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே /                        
     க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம : //

அர்த்தம் :

காரிருளைப் போக்குபவரும், பனியை நீக்குபவரும், பகைவரை அழிப்பவரும், இன்னதென்று அளவிடற்கரிய வடிவம் உடையவரும், தீயகுணம் கொண்ட நன்றி மறந்தவர்களை நாசம் செய்பவரும், தேவதேவனும், ஒளிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பவருக்கு நமஸ்காரம்.

21.தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மனே /
     நமஸ்தமோsபிநிக்னாய ருசயே லோக ஸாக்ஷிணே //   

அர்த்தம் :

உருக்கிய பொன் போல 'தகதகவென' ஒளிர்பவரும், அக்னி ஸ்வரூபமாய் உள்ளவரும், உலகத் தொழிலனைத்தையும் புரிபவரும், அஞ்ஞான இருளை அகற்றுபவனும், ஒளிவடிவினரும், உலக ஸாக்ஷியாய் விளங்குபவருக்கு நமஸ்காரம். 

22.நாசயத்யேஷ வை பூதம் த்தேவ ஸ்ருஜதி ப்ரபு : /
     பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி : //

அர்த்தம் :

உண்டாக்கிய உலகை இவரே அழிக்கிறார். பின்பு அதை மீண்டும் சிருஷ்டிக்கும் பிரபுவாகவும் விளங்குகிறார். தமது கதிர்களால் நீரைப் பருகுகிறார். இவரே காய்கிறார். இவரே மழையையும் பொழிகிறார்.

23.ஏஷ ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்டித : /
     ஏஷ ஏவாக்னிஹோத்ரஞ் ச பலம் சைவாக்னிஹோத்ரிணாம் //

அர்த்தம் :

உயிரினங்கள் உறங்கும் பொழுது,அதன் உள்ளிருந்து அந்தர்யாமியாக இவர் விழித்திருக்கிறார்.இவரே அக்னிஹோத்ரம் ஆகவும், அக்னிஹோத்திரத்தின் பயனாகவும் இருக்கிறார்.

24.வேதாச்ச க்ரதவச்சைவ க்ரதூனாம்பலமேவ ச /
     யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி : ப்ரபு : //

அர்த்தம் :

வேதங்கள், யாகங்கள், யாகத்தின் பயன்கள் மற்றும் உலகத்தில் உள்ள காரண காரியங்கள் எவையோ மற்றெல்லாவற்றிற்க்கும் இந்த சூரிய பகவானே ப்ரபுவாக விளங்குகிறார். 

                                      பலச்ருதி :

25.ஏன - மாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச /
     கீர்த்தயன் புருஷ : கச்சிந்நாவஸீததி ராகவ //

அர்த்தம் :                  ஜபத்தின் பலன்

ஹே ராகவா ! எவன் ஒருவனாயினும், ஆபத்து காலங்களிலும், கஷ்டகாலங்களிலும், வனாந்தரங்களிலும் மற்றும் பயம் ஏற்பட்ட சமயங்களிலும் இதை ஓதுவானாயின் அவன் துன்பத்தில் தளர்வுறமாட்டான்.

26.பூஜயஸ்வைந மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் /
    ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி //

அர்த்தம் :

ஒருமைப்பட்ட மனதுடன் தேவதேவரும் உலகாளும் நாதனுமாகிய இவரை பூஜிப்பாயாக !. இதை மூன்று முறை ஜபித்து போர்களில் வெற்றி பெறுவாயாக!.

27.அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி /
     ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் //

அர்த்தம் :

பெருந்தோள் படைத்தவனே ! இந்த க்ஷணத்திலேயே நீ ராவணனை வதம் செய்வாய். என்று இவ்வாறாகக் கூறிவிட்டு அகத்திய முனிவர் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

28.ஏதத்ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ sபவத் ததா /
     தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ : ப்ரயதாத்மவான் //

அர்த்தம் :

மஹாதேஜஸ்வியான ஸ்ரீராமர் இதைக் கேட்டு அப்பொழுதே கவலை நீங்கியவராக ஆனார்.உடன் மிகுந்த ப்ரீதியுடனும், தன்னடக்கத்துடனும் அதை மனதில் தாரணை செய்துகொண்டார்.

29.ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் /                 
த்ரிராசம்ய சுசிர் - பூத்வா தனுராதாய வீர்யவான் //

அர்த்தம் :

வீர்யவானகிய ஸ்ரீராமர், மும்முறை ஆசமனம் செய்து அங்கசுத்தம் செய்து பரிசுத்தராயிருந்து  வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை அடைந்தார். 

30.ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய சமுபாகமத் /
     ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ அபவத் //

அர்த்தம்

உள்ளத்தில் உவகை பெருக்கோடு ராவணனை நோக்கி போருக்கு 
 சென்றார். எல்லாவகையிலும் முழு முயற்சியுடன் ராவணன் வதத்தில் திண்மை உடையவரானார்.



31.அத ரவி-ரவதந் - நிரீக்ஷ்ய ராமம் முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண : /
      நிசிசரபதி- ஸம் க்ஷயம் விதித்வா ஸுரகண-மத்யகதோ வசஸ்தவரேதி//

அர்த்தம் :

அப்பொழுது தேவகணங்களின் மத்தியில் இருந்த சூரிய தேவன், உவகையடைந்து ஸ்ரீராமரை நோக்கி "ராவண வதத்தை ஆசிர்வதித்து 'துரிதமாய் முடி' என்ற வார்த்தையை கூறியருளினார். 

32.சூர்யம் சுந்தர லோக நாதம் அம்ருதம் வேதாந்த ஸாரம் சிவம் /
     ஞான ப்ரஹ்ம்மமயம் சுரேச அமலம் லோகைக சித்தஸ்வயம் /
     இந்தராதித்ய நராதிபம் சுரகுரும் த்ரைலோக்ய சூடாமணிம்/
   ப்ரஹ்மா-விஷ்ணு-சிவஸ்வரூப ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்//

அர்த்தம் :

அழகிய சூரியனை உலக நாதரை அமிர்தம் போன்றவரை வேதத்தின் சாரமாகவும் மங்களமானவரை ஞானம் ப்ரம்ம மயமானவரை உலக நலனையே சித்தத்தில் கொண்டிருப்பவரை, இந்திரன் முதலான தேவர்கள் நரன் மற்றும் மூவுலகிற்கும் சூடாமணியாய் திகழ்பவரை, ப்ரம்மா விஷ்ணு சிவன் மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாய் விளங்கும் பாஸ்கரனை ஹ்ருதயத்தில் எப்பொழுதும் வணங்குகிறேன்.

33.பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்டரஸ்மீ திவாகர : /
     ஆயுராரோக்யம் ஐஸ்வர்யம் ஸ்ரியம் புத்ராம்ஸ் ச வித்யாம்ஸ் ச தேஹி மே //

அர்த்தம் :

பானு, பாஸ்கரன், மார்த்தாண்டன் கிரணங்களை பொழியும் திவாகரன் என பலவாறாக போற்றப்படும் சூரியனே எனக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், கல்வி மற்றும் சந்ததி ஆகியவற்றைக் கொடுக்கட்டும்.

இத்யார்த்தே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகியே ஆதிகாவ்யே
 யுத்தகாண்டே ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தர சததம : சர்க்க ://

அர்த்தம் :

என்று இப்படியாக வால்மீகியால் எழுதப்பட்ட ஆதிகாவியமான  ஸ்ரீமத் ராமாயணத்தின் உத்தர பாகமான ஏழாவது சர்க்கத்தில் யுத்தகாண்டத்தில் 'ஆதித்யஹ்ருதயம்' உபதேசிக்கப்பட்டது.