Monday 24 February 2020

சந்திர தரிசனம் 25.02.2020




                                     சந்திர தரிசனம்.
                                  

                                        25.2.2020 செவ்வாயன்று சந்திர தரிசனம்.
                           
image.png

                         
    
  இந்து, பௌத்தம்,சமணம், இஸ்லாம் மற்றும் கிறித்தவம் என அனைத்து மதத்தினருமே இந்த மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றனர். எதனால் தெரியுமா? 

அழகினால் கர்வம் கொண்டு  சாபம் பெற்ற சந்திரன் ,பின் சிவபெருமானின் அருளால் தேய்ந்து வளரும் வரம் பெற்றதுடன் மூன்றாம் பிறையாக இறைவனின் ஜடாமகுடத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றவன் அல்லவா?. அதனால் அமாவாசையை அடுத்து வரும் இந்த மூன்றாம் பிறையை தெய்வீகப் பிறை என்றே கூறலாம்.

     அமாவாசைக்கு அடுத்த நாள் சந்திரன் வானில் தெரியாது. அதற்கு அடுத்த இரண்டாம் நாளான த்விதியை திதியில் மெல்லிய வெள்ளிக் கம்பி போல் அதுவும் சில மணித் துளிகளே காட்சி தரும். .இதை அவ்வளவு எளிதாக பார்த்து விடவும் முடியாது. 
                                இது வெறும் சாதாரண சந்திர தரிசனம் அல்ல. 

சந்திர மௌலீஸ்வரராய் காட்சி தரும் சாட்சாத் எம்பெருமான் சிவபிரானின்  ஜடாமுடி தரிசனம் ஆகும்.


image.png

அதனால் திவிதியை திதி அன்று விரதம் இருந்து அன்று மாலை 6.30 மணியளவில் மெல்லிய கீற்றாக பிரகாசமாகத் தோன்றும் நிலவினை தரிசிக்க, நம் மனக்குறைகள் நீங்கி, பேரானந்தமும் மன நிறைவும் உண்டாகும். அதோடு, சந்திர தேவன் மஹாலக்ஷ்மியுடன் பாற்கடலில் அவதரித்தவர் ஆதலால், தேவியை 'சந்த்ர சகோதரி' என அழைப்பர். அதனால் சந்திர விரத வழிபாட்டினால் மஹாலக்ஷ்மியின் அருளையும் நாம் பெறலாம்.

image.png
     இப்படி எண்பது வயது நிறைந்தவர்களுக்கு ஆயிரம் பிறை கண்டவர்கள் என  "சதாபிஷேகம்" செய்து கொண்டாடுகிறோம் அல்லவா?.சந்திரனை ஒவ்வொரு மாதமும் இந்த மூன்றாம் பிறையை தரிசிப்பதனால் நம் முன்வினை பாவங்களும் அகலும்  என ஜோதிடமும் இதை வலியுறுத்துகிறது.





            சந்திரனை "மனோகாரகன்" என்பர். நம் மனோ திடத்தையும், புத்தி பலத்தையும் , நீண்ட ஆயுளையும் அருள்பவர் சந்திரன்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். 'மதி' என்ற சொல் சந்திரன் மற்றும் அறிவு என இரு பொருளையும் குறிக்கும் அல்லவா?.

ஜாதகத்தில் சிலருக்கு அவர்கள் ஜனன லக்னப்படி எந்தவொரு நல்ல பலனும் இருக்காது. அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் லக்னத்தை விடுத்து சந்திரனை லக்னமாகக் கொண்டு ஜாதக பலன் கணித்துக் கூறவேண்டும் என்பது ஜோதிட விதி. . 

  பொதுவாக, யாராவது முட்டாள்தனமான காரியத்தைச் செய்தால், மதி கெட்டவனே என திட்டுவார்கள் அல்லவா? 
அதனால் ஒருவரின் புத்தி கூர்மைக்கும் சந்திரனின் அருள் வேண்டும் என்பது இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் சூரிய சந்திரனை இறைவனின் இரு கண்களாக ஞானிகள் கூறுவர். இடது கண் சந்திரனைக் குறிக்கும்  அதனால் இந்த சந்திர தரிசனம் எப்பேர்ப்பட்ட கண் நோயையும் நாளடைவில் குணப்படுத்தும் என்பது உறுதி.