Friday, 21 November 2025

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.

 

        முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

       MUTTHU SWAMI DEEKSHIDAR.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களின் ஜயந்தி, பங்குனி மாத கிருத்திகை நக்ஷத்திரத்தன்று கொண்டாடப்படும்.

ராமசாமி தீக்ஷிதரும் அவர்தம் துணைவியாரான சுப்புலக்ஷ்மி அம்மையாரும் குழந்தை வரம் வேண்டி, வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார ஸ்வாமியை த்யானித்து, தவமான தவமிருந்து பிறந்த குழந்தை. அதனால் திருமுருகனது நாமமான " முத்துஸ்வாமி' என்ற பெயரையே தம் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர். இவருக்கு பின், இரு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தனர்.

   முத்துஸ்வாமி அவர்கள், தன் தந்தையிடமே சங்கீதம்,  சமஸ்கிருதம், தெலுங்கு, காவியம்,  நாடகம் மற்றும் இலக்கணம் என அனைத்தையுமே கற்றுத் தேர்ந்தார்.

கர்நாடக சங்கீதம் தவிர, இந்துஸ்தானி சங்கீதமும் கற்றார். வீணை இசைப்பதிலும் வித்தகர்.

இவரது குரு. 'சிதம்பரநாத யோகி, ' முத்துஸ்வாமிக்கு " மஹாவித்யா" தீட்சை மந்திர உபதேசம் செய்ததோடு தன்னுடனேயே காசி விஸ்வநாதரை தரிசிக்கவும் அழைத்துச் சென்றார்.

அதுசமயம், தீக்ஷிதருக்கு கங்கையில் அழகிய 'வீணை' கிடைத்தது. அந்த வீணையின் 'யாழி' வழக்கத்ட்ஜிற்கு மாறாக மேல் நோக்கி இருந்தது. அத்துடன் அவ்வீணையில் 'ராமா' என்றும் பொறிக்கப்பட்டு இருந்ததாம்.

(தீக்ஷிதருக்கு கங்கையில் கிடைத்த வீணை)

இவரது அளப்பரிய ஞானம் கண்டு  மகிழ்வுற்ற குருவும் தன் இறுதிக் காலத்தில் தீக்ஷிதரிடம், திருத்தணி முருகனை தரிசித்து, அவன் அருள் பெற்று சங்கீதத்தை பரவச் செய்யப் பணித்தார்.
அவ்வண்ணமே, இவரும் திருத்தணி முருகனை தரிசிக்க மலைமேல் ஏறிச் செல்லும் போது, வயதானவர் ஒருவர் எதிரில் வந்து, 
முத்துஸ்வாமி! வாயைத் திற! 
என்று கூறி 'கல்கண்டை' வாயில் போட்டு மறைந்தார்.
கல்கண்டை மென்ற மாத்திரத்தில் மயில் மேல் முருகன் ஏறிச் செல்லும் காட்சியை தரிசனம் பெற்றார். அதன்பின், நாவண்மை பெற்றவராய் பற்பல அற்புத இசைப்பாடல்கள் புனைந்து பாடும் திறம் பெற்றார்.



அதன்பின், பல திருத்தலங்களுக்கும் சென்று அற்புதமான பாடல்களை இயற்றி, இசைத்தொண்டு புரிந்தார். இவரது பாடல்களில் அப்பாடலின் ராகத்தின் பெயரும், இவரது முத்திரையான 'குருகுஹ' என்ற பதமும் இடம் பெற்றிருக்கும்.
குஹனே குருவாக வந்து ஞானம் அளித்ததால், அதையே தன் முத்திரையாக வைத்துக் கொண்டார்.


மேலும் "ஷோடஸ கணபதி" என்று  பதினாறு கணபதிகள் பெயரில் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
அதில், 
"வாதாபி கணபதிம் பஜே"
என்ற கிருதியும்,
" ஸ்ரீமஹா கணபதி
என்ற கிருதியும் உலகப் பிரசித்தி பெற்றவை.

இவரது பாடல்கள் அனைத்தும் புதிதாக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள் எளிதாகப் பயிலும் வகையிலும், அதே சமயம் சங்கீத மேதைகள் தங்களது திறமையை எடுத்துக்காட்டும் வகையிலும் அமைந்திருப்பது இவரது கிருதிகளின் தனி சிறப்பம்சமாகும். இவரது கிருதிகளை  'இளநீர் போல தித்திக்கும்' என வர்ணிப்பர்.

இவரது தம்பி 'பாலு தீக்ஷிதர்' எட்டயபுர சமஸ்தான மன்னரிடம் சங்கீத வித்வானாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அச்சமயம் பாலுஸ்வாமிக்கு, மன்னரே திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார். அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு தம்பியைக் காண எட்டயபுரம் புறப்பட்டார். வழியில், மழையின்றி  பாளம்பாளமாக வெடித்துக் காணப்பட்ட வறண்ட நிலப்பகுதிகளைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார்.
உடனேயே, அவ்விடத்திலேயே அம்பிகையை நினைத்து உருகி, அம்ருதவர்ஷிணி ராகத்தில் 
"ஆனந்தாம்ருதவர்ஷிணி என்ற பாடலை இயற்றிப் பாடினார். உடனே எங்கிருந்தோ கருமேகங்கள் திரண்டு மழை பொழிந்தது. மக்கள் மனம் மகிழ்ந்து அவரைக் கொண்டாடினர். மன்னரும் அவரைப் பணிந்து, எட்டயபுரத்திலேயே தங்கி தனக்கு 'குருவாகவும்', அரண்மனையின் வித்வானாகவும் இருக்க அன்போடு வேண்டினார். மன்னரின் வேண்டுகோளை ஏற்று முத்துஸ்வாமி தீக்ஷிதரும் தன் இறுதிக் காலம் வரை அங்கேயே வாழ்ந்தார்.

தீபாவளித் திருநாளில் மன்னன் தன் பட்டத்து யானைக்கு 'கஜபூஜை' செய்வது வழக்கம். அதற்காக, யானைப்பாகன் 'காங்கேயன்' எனும் அந்த யானையை நீராட்டுவதற்க்காக தெப்பக் குளத்திற்கு அழைத்துச் சென்றான்.
எப்பொழுதும் குளத்தில் குளித்து விளையாடி மகிழும் யானை, அன்று குளத்தில் இறங்க மறுத்து, நிலைகொள்ளாமல் தவித்து, சுடுகாட்டை நோக்கி ஓடி மணலில் புரண்டு பெருங்குரலெடுத்துப் பிளிறியது.

செய்வதறியாது திகைத்து நின்ற பாகன், உடனே விரைந்து சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினான். இத்சிக் கேட்ட மன்னன்!  அதிர்ந்து, இது அபசகுனமாயிற்றே!! இதனால் என்ன தீங்கு நேரிடுமோ?! என அஞ்சினார். உடன் ராணியாரின் அறிவுரைப்படி, தனது குருவான முத்துஸ்வாமி தீக்ஷிதரை நாடி அதற்கான தீர்வினைக் காணச் சென்றார்.

அவரது வீட்டில், தீக்ஷிதர் இயற்றிய, " மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியை சீடர்கள் பாட ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். மன்னனின் வருகையும், கலங்கிய முகமும் அவரது பரபரப்பையும் கண்டு, தீக்ஷிதர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து, மன்னனின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்தார்.
பின், மன்னனைப் பார்த்து, கவலைப்படாதே!  இந்த அபசகுனத்தால், உனக்கோ, உன் குடும்பத்திற்கோ, உன் நாட்டு மக்களுக்கோ எந்தவித தீங்கும் நேராது! யானை அமைதி பெற்று திரும்பும் என ஆசிர்வதித்தார்.
இதனால் மனம் நிம்மதி அடைந்தவராய், அரண்மனை திரும்ப, தீக்ஷிதர் கூறியபடி யானையும் அமைதி பெற்று அரண்மனை திரும்பியது.
மன்னனை அமைதிபெறச் செய்து அனுப்பிய பின், தீக்ஷிதர் தன் சீடர்களிடம், இன்று சதுர்த்தசி திதி. அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். அதனால் நீங்கள் " மீனாக்ஷி மேம்முதம் தேஹி" என்ற கிருதியைப் பாடுங்கள் எனக் கூறி, அதைக் கேட்டவாறே, அன்னலட்சுமி முன் ஏற்றிய தீபத்தின் ஜோதியோடு ஐக்கியமாகி விட்டார்.
தீக்ஷிதர் சித்தி அடைந்ததைக் கேட்ட மன்னன், அடக்கடவுளே! எங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று கேட்டு நிம்மதி அடைந்த நான், தங்களை எப்படி மறந்தேன்? எனக் கதறினார்.
பின்,  வைதீக முறைப்படி அவருக்கான இறுதிக் காரியங்களை செய்து, 'அட்டகுளம் கரையில்' தீக்ஷிதருக்கு சமாதி எழுப்பி வழிபாடு செய்தார்.




Saturday, 15 November 2025

தட்டு நிறைய பூ கொணர்ந்து

         இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்கை தொடவும்.

https://youtu.be/Y6-0zRg9m3A?si=4ZTxuTe1K_QCL7De

  

               பல்லவி


தட்டு நிறைய பூ கொணர்ந்து பூஜிப்பேன் தேவி ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே... ( த) 

             அனுபல்லவி

இஷ்டமுடன் நல்ல பூக்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்வேன் - ஒரு             கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே.

                  சரணம்  - 1

மல்லிகை முல்லை மருவுடன் ரோஜா          மகிழம்பூ   பாதிரியும்                                               ப

அல்லி அரளியும் பச்சை வதனமும் அழகுள்ள   பாரிஜாதம்     

ஈஸ்வரியே ஜகதீஸ்வரியே த்ரிபுரேஸ்வரியே ராஜேஸ்வரியே (தட்டு)

                 சரணம்  - 2

சம்பங்கி ரோஜா ஸரஸிஜ மலரால் ஸஹஸ்ரார்ச்சனை செய்வேன்

வாணி ஸரஸ்வதி வந்தென்னை ஆதரி வாசாம கோசரியே

ஸ்ரீகரியே சுபகரியே க்ருபாகரியே ப்ரபாகரியே (தட்டு)

              சரணம் - 3                

பக்ஷமதாகவே பரிமளப் பொடியினால் லக்ஷார்ச்சனை செய்வேன்

அக்ஷய சம்பத்தை அனுக்ரஹித்து என்னை ஆதரித்தருள்வாயே            

ஏகாக்ஷரியே த்ரையாக்ஷரியே பஞ்சாக்ஷரியே ஷடாக்ஷரியே      ( தட்டு)                 

தட்டு நிறைய பூச்சர கொணர்ந்து பூஜிப்பேன் தேவி ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே.

இஷ்டமுடன் நல்ல பூக்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்வேன்                          

ஒரு கஷ்டமும் வாராமல்   உன் கடமை கருணாஸாகரியேஇஷ்டமுடன் நல்ல பூக்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்வேன்                          

ஒரு கஷ்டமும் வாராமல் காப்பது உன் கடமை கருணாஸாகரியே

மல்லிகை முல்லை மருவுடன் ரோஜா மகிழம்பூ பாதிரியும்
அல்லி அரளியும் பச்சைவதனமும் அழகுள்ள பாரிஜாதம்
ஈஸ்வரியே ஜகதீஸ்வரியே த்ரிபுரேஸ்வரியே ராஜேஸ்வரியே.

சம்பங்கி ரோஜா ஸரஸிஜ மலரால் ஸஹஸ்ரார்ச்சனை செய்வேன்.
வாணி சரஸ்வதி வந்தென்னை ஆதரி வாசாமகோசரியே.
ஸ்ரீகரியே சுபகரியே க்ருபாகரியே ப்ரபாகரியே

பக்ஷமதாகவே பரிமளப் பொடியினால் லக்ஷார்ச்சனை செய்வேன்.
அக்ஷய சம்பத்தை அனுக்கிரகித்து என்னை ஆதரித்தருள்வாயே.
ஏகாக்ஷரியே த்ரயாக்ஷரியே பஞ்சாக்ஷரியே ஷடாக்ஷரியே

Thursday, 13 November 2025

தேவி ஸ்ரீ காமாக்ஷி - பைரவி ராக கிருதி

            


        ஸ்யாமா சாஸ்திரிகள்

பைரவி                           ஆதி

                      பல்லவி

தேவி ஸ்ரீகாமாக்ஷி தருணமிதம்மா  த்ருபுரசுந்தரி தனயுநி ப்ரோசுடகு 

                  அனுபல்லவி

ஆவிர்பவஸ்ரீ ஆனந்தரூபிணி ஆனந்தரூபிணி ஆதிபராசக்தி ( தேவி)

                    சரணம்

மணிமந்த்ர ஹாரிணி மங்கள ரூபிணி        மதுகர பாஷிணி மரகதாங்கனி              ராணி சிவுநிகி ராணி கல்யாணி கருணாகரி சிவசங்கரி ஸ்ரீஹரி ஸ்யாமக்ருஷ்ண ஸோதரி ( தேவி)

         ஸ்யாமா சாஸ்திரிகள் க்ருதி

பைரவி                           ஆதி

                      பல்லவி

1. தநி ஸ் , ; ரி* ஸ்நிரி*ஸ்நிதபா | ; நிநீதபா |     தே .வி     ஸ்ரீ    கா மா   .    .  க்ஷி | தருணமீ  |

                                பாதப தநி ; ||                                                                   தம்     மா.  . ||

2.நிஸ்நிஸ்*ரிஸ்*ரீ - நிஸ் ரீக்*ரி ஸ் ,ரிஸ்நித|-     ----           -----                    -----                    -----        --

 தே   .    . வி   .    . ஸ்ரீ கா .  மா.   .  .  . .............     |

        பா நிநீதபா |பாதப தநீத,  ||                                           ----                   -----                                                         க்ஷி  தருணமீ| தம் .  . மா.. ||

; மா மா மா பா ; தா*ரிஸ் | நி தாதநிஸ் *ரீ |                                                 -----      -----        -------------             த்ரு     பு     ர.    சுந்  த ரி... | . . .த ன யு நி    |

                        ரி* ஸ் நீ  தபாத. ||                                                           ப்  ரோ  .  சு ட கு  || (தேவி)

                      அனுபல்லவி

; பதாநி தாபா ; பதநித | பம பபாதரி*ஸ் |           -----------------             -------- 

   ஆ. .  விர் ப வ.   ஸ்ரீ  .  . | .   .   கலச.  ரூ.  |       

                   நி த நீ  ஸ்  ,  ;  ||                                                               .     .   பி  ணி   ||

த நி ஸ் ,  ; ரீ*  ஸ்நிரி* ஸ்நிதபா | ; பதாநிதா | ------        -----              -------     --------                                      ஆ . னந்த.       பை ...              ர  வி |  ஆ . தி   ப. |  

                பா ,  ம பா  தா ||                                                              ரா  .   ச க்   தி   || ( தேவி)

                       சரணம் 

ம ம மா ; மா  பமகரி கா  மா | ; க பா ம பா |        மணி  மந்த்ர.   ஹா.   .ரிணி|    ம ங் க ள.  |                         ம க ப ம கா ரீ ||                                                              ரூ.     .  . பிணி||

; ரிகாமபா   மகபம கரி ஸா | ; ரி கா ரி மா |         ம து க. ர.   பா  .  .  ஷி. ணி|   ம. ர. க.   தா|                                    , ப தா பா ; ||                                                                      . ங் கி னி  ||

பா தா ரி* ஸ் நி தா,  நி நீ த பா| பா ; தா நீ |    ரா  .  ணி  .       .    .      சிவு நி கி | ரா ணி கல்|                                                  ; ஸ் ,  ஸ்  ,  ;  ||                                                                       யா ணி     ||

தநிஸ்,  ரி* ஸ்   ரி* க் ரீ* ஸ்ஸ் ஸ்நிதப |               க ரு ணா க ரி   சி வ ச ங் கரிஸ்ரீ . ஹரி |             ; ஸ் ,  ஸ்   பா   ப.    | பா த ம பா தா ||                     ஸ்யாமக்ருஷ்ண |  ஸோ.   .  த ரி || (தேவி)


Tuesday, 3 June 2025

My daughter's wedding dress for relations

தேவி கனகதுர்கா
முகப்பேர்.



               தேவி காமாட்சி & தேவி விசாலாட்சி
                           முகப்பேர்.


ஸ்ரீகணபதி.





















 

Tuesday, 13 May 2025

Arabhi jathiswaram aathi thalam

 ஆரபி ஜதிஸ்வரம் ஆதிதாளம்.

1.

ஸ் ; ,  ஸ்நி ததப பம க ரி ரீ | ஸ , , ,  : ஸரி | ஸ பம தப மபத||

2.

ஸ்ஸ்ரி ததஸ் பபத மமப மக ரிரி |ஸ „ ; பமா ,| தபா „

, மபத||

3.

பா தப மகரிம பா தப ஸரிமம| பாதப மமபத| பாதப ஸ்நிதத||

பாதப ரி*ஸ்நித பா த மபா த ரிமா ப ஸரீ மப மபத மபத பத||


4.

ஸ், ;  ;ஸ்ரி*ம்க்ரி*ரி* ஸ்நிதத| ஸ் ; ஸ் ; ஸ்ஸ்|ரி* ததஸ் பபதத||

ஸ் ; ரிஸ், ஸ்நித, தபா ,மக | ரீ ரிஸா „ஸநி | த ;

                                                                            *       *

 ஸரிமபத||

Saturday, 29 March 2025

Pandava's kula deivam - gujarath

 


                             Hingala matha

                      Pandava's kula deivam









Durga devi





 பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு வந்து வழிபட்டதாகவும், சிவபெருமானை குறித்து தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
"ஹிங்கலா மாதா" கோயில் குகையினுள் குறுகிய படிக்கட்டுகள் கொண்ட அமைப்புடன் காணப்படுகின்றன.

                                 
                                 திரௌபதி


சித்தநாத மஹாதேவ்



பஞ்ச பாண்டவர்கள்.



திரௌபதி
Draupathi



Tuesday, 25 March 2025

GIR NATIONAL PARK.


கிர் தேசிய பூங்கா - குஜராத்
கிர் ஸோம்நாத் மாவட்டம்.
1412 கிலோமீட்டர் பரப்பளவு










Safary


 

                             Forest entry.





                              Neel gai - நீல் கை




ஆசிய அளவில் புகழ் வாய்ந்த சிங்கங்களின்
சரணாலயம்.

குடும்பத்துடன் ஓய்வாக சிங்கங்கள்.
உண்ட களைப்பு!😉😂



சிறுத்தைகள்

இந்த சிறுத்தைகள் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு ஒரு காம்பவுண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. காரணம் : கிராமத்திற்குள் நுழைந்து மனிதர்களை வேட்டையாடி மனித ரத்தம் ருசி கண்டதால், இது மிகவும் ஆபத்தானது என்று சுதந்திரமாக இல்லாமல் தனியே வைத்திருக்கிறார்கள்.
ஒரு வருடம் இதுபோல் வைத்து மனித ரத்த வாடையை மறக்கடிக்கச் செய்வார்களாம். அதன் பின், சுமார் ஒரு மாத காலம்சோதனை செய்து பிறகே காட்டினில் சுதந்திரமாக விடுவார்களாம்.






























                     Indian STONE CURLEW
                      INDIAN THICK KNEE

"INDIAN THICK KNEE" 

 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பறவை

 இனம் வருடத்திற்கு ஒருமுறை தான் 

தண்ணீர் அருந்துமாம் . அதுவும் மழை நீரைத் தான் அருந்தும் என்று எங்கள் " கைடு" கூறினார்.