Saturday 22 January 2022

சண்டிகேச நாயனார்.

              சண்டிகேச நாயனார். 


சிவனடியார்கள் எனப்படும் நாயன்மார்கள் அறுபத்து மூவரில் மிக முக்கியமானவர் சண்டிகேஸ்வரர்" எனலாம். அனைத்து சிவன் கோயில்களிலும், சிவ சன்னதியின் அபிஷேகத் தீர்த்தம் வழியும், கோமுகிக்கும், துர்க்கை அம்மனுக்கும் இடையில் இவரது சன்னதி தெற்கு நோக்கி அமையப் பெற்றிருக்கும். சிவன் சொத்துக்களை சரிபார்ப்பவர் என்றும், கண்டிப்பு மிகுந்தவர் என்றும் இவரைப் பற்றிக் குறிபபிடுவர். பிராகாரம் சுற்றி வந்து இவரையும் வழிபாடு செய்வதால் மட்டுமே சிவ வழிபாடு பூர்த்தியடையும். 

சிலர், சண்டிஸ்வரரை செவிடு என நினைத்து, கைகளை தட்டியும், விரல்களால் சொடுக்கு போட்டும் வழிபடுவர். இது மிகப் பெரிய தவறான செயலாகும். அவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதால், அவரது தவ நிலைக்கு இடையூறு ஏற்படாவண்ணம், நம் கைகளை விரித்துக் காண்பித்து அமைதியாக வழிபட்டு வருவதே சாலச் சிறந்தது. 
அதாவது, சிவனாரது சொத்துக்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறி, சிவ வழிபாட்டின் பூரண பலனை அருளும் படியும் வேண்டிக் கொள்ளவேண்டும்.
   சரியான கறாரான கண்டிப்பு பேர்வழியான   சண்டிகேஸ்வரரது   குருபூஜை 'தை மாத'  உத்திரம் நக்ஷத்திரம் ஜனவரி 23 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆகும்.
       கும்பகோணம் அருகிலுள்ள, 'திருசேய்ஞலூரில்' அந்தண குலத்தில் அவதரித்தார். இவரது, இயற்பெயர் விசாரசருமர். முற்பிறவியின் ஞானம் தொடரப்  பெற்றவராய், எந்தவொரு ஆசானிடத்திலும் கல்வி பயிலாமலே, இயல்பாகவே, வேதம் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவருக்கு 7 வயதிலேயே 'உப நயனம்' செய்விக்கப்பட்டது. 
    தன்னை வழி நடத்த சிவபெருமான் ஒருவராலேயே முடியும் என பரிபூரணமாக நம்பி, நித்தம் சிவ சிந்தனை மற்றும் சிவ பூஜையிலேயே நாட்டம் கொண்டிருந்தார். சிவனடியார்கள் எனப்படும் நாயன்மார்கள் அறுபத்து மூவரில் மிக முக்கியமானவர் சண்டிகேஸ்வரர்" எனலாம். அனைத்து சிவன் கோயில்களிலும், சிவ சன்னதியின் அபிஷேகத் தீர்த்தம் வழியும், கோமுகிக்கும், துர்க்கை அம்மனுக்கும் இடையில் இவரது சன்னதி தெற்கு நோக்கி அமையப் பெற்றிருக்கும். சிவன் சொத்துக்களை சரிபார்ப்பவர் என்றும், கண்டிப்பு மிகுந்தவர் என்றும் இவரைப் பற்றிக் குறிபபிடுவர். பிராகாரம் சுற்றி வந்து இவரையும் வழிபாடு செய்வதால் மட்டுமே சிவ வழிபாடு பூர்த்தியடையும். 

சிலர், சண்டிஸ்வரரை செவிடு என நினைத்து, கைகளை தட்டியும், விரல்களால் சொடுக்கு போட்டும் வழிபடுவர். இது மிகப் பெரிய தவறான செயலாகும். அவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதால், அவரது தவ நிலைக்கு இடையூறு ஏற்படாவண்ணம், நம் கைகளை விரித்துக் காண்பித்து அமைதியாக வழிபட்டு வருவதே சாலச் சிறந்தது. 

அதாவது, சிவனாரது சொத்துக்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறி, சிவ வழிபாட்டின் பூரண பலனை அருளும் படியும் வேண்டிக் கொள்ளவேண்டும்.

   சரியான கறாரான கண்டிப்பு பேர்வழியான   சண்டிகேஸ்வரரது   குருபூஜை 'தை மாத'  உத்திரம் நக்ஷத்திரம் ஜனவரி 23 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆகும்.

       கும்பகோணம் அருகிலுள்ள, 'திருசேய்ஞலூரில்' அந்தண குலத்தில் அவதரித்தார். இவரது, இயற்பெயர் விசாரசருமர். முற்பிறவியின் ஞானம் தொடரப்  பெற்றவராய், எந்தவொரு ஆசானிடத்திலும் கல்வி பயிலாமலே, இயல்பாகவே, வேதம் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவருக்கு 7 வயதிலேயே 'உப நயனம்' செய்விக்கப்பட்டது. 

    தன்னை வழி நடத்த சிவபெருமான் ஒருவராலேயே முடியும் என பரிபூரணமாக நம்பி, நித்தம் சிவ சிந்தனை மற்றும் சிவ பூஜையிலேயே நாட்டம் கொண்டிருந்தார். 


தன் நண்பன் மாடு மேய்க்கும் பொழுது, பசு மாட்டை அடிப்பதைக் கண்டு மனம் பதறி, கோமாதாவின் பெருமைகளை    எடுத்துக் கூறி, இனி, தானே மாடுகளை   மேய்த்து தருவதாக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது பொறுமையான  அன்பான கவனிப்பால், மாடுகள் அதிக அளவில் பால் கறந்தன. 

      விசார சருமன், ஆற்றங்கரையிலேயே அத்தி மரத்தினடியில், ஆற்று மணலைக் கொண்டு, சிவலிங்கம் அதனைச் சுற்றி மதில் சுவர் என மணற்கோயில் அமைத்து, அனைத்து பசுவிடமிருந்தும் பால் கறந்து,அதை சிவனுக்கு அபிஷேகம் செய்யலானார். 


. ஊரார் இவரது செயலை, அவன் தந்தையிடம் முறையிட, அவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு , இனி நான் அவனை கண்டித்து, இதுபோல் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

  பின், தன் மகனை அழைத்து, ஆகம சாஸ்திர சம்பிரதாயம் விதிப்படி கோயில் கட்டி வழிபடவேண்டுமே தவிர, இப்படி உன் இஷ்டப்படி மணலாற் கோயில் அமைக்கக்கூடாது என நயமாகவும், கடுமையாகவும் அவனிடத்தில் அறிவுறுத்தியும், எச்சரித்தும் பார்த்தார். ஆனால், சிறுவனோ எதையும் காதில் வாங்காமல், தன்   செயலைத்   தொடர்ந்தான். 


அவன் தன் பூஜையை தொடர்வதைக் கேள்வியுற்ற அவன் தந்தை 'யக்ஞதத்தன்'  அவ்விடம் விரைந்து, அவனை கோபத்துடன் பலமுறை,  அழைத்தும், பிரம்பால் அடித்தும், அவன் எதற்கும் மனம் சிதறாமல், தான் எண்ணிய செயலை சிவபூஜையை கருத்தாக செய்து கொண்டிருந்தான். 
இதனால் வெகுண்ட யக்ஞதத்தன், பூஜை பொருட்களையெல்லாம் காலால் எட்டி உதைக்க, அப்பொழுது தான் சுய நினைவு வரப்பெற்றவராய், தன் செயலால் சீற்றம் அடைந்தான். 

 சிவ அபராதம் செய்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு தக்க தண்டனை வழங்குவேன்  எனக் கூறி, அருகே இருந்த, ஒரு மரக்கொம்பை  எடுத்து, ஐந்தெழுத்து, மந்திரம் ஜபித்து, தன் தந்தையின் மேல் ஏவினான். அக்கொம்பு 'மழுவாக மாறி, தந்தையின் கால்களை வெட்டியது. 

உடன் பார்வதி பரமேஸ்வரர் காட்சியளித்து, அவரது தந்தையையும் உயிர்ப்பித்து, எனது தொண்டர்கள் அனைவருக்கும் உன்னையே தலைவன்  ஆக்கினோம்.  அத்துடன், எனது அமிர்தம் , மலர்கள் மற்றும் பரிவட்டம்'  அனைத்தையும் உனக்கே தந்தோம் எனஆசியளித்து, தன் ஜடாமுடியிலிருந்து  கொன்றை மாலையை எடுத்து விசாரசருமருக்கு அணிவித்து, 'சண்டேசப் பதவியை' வழங்கினார்.

இப்பதவியை விசாரசருமருக்கு  அளித்ததால், சிவபிரானுக்கு, "சண்டேச அனுகிரஹ மூர்த்தி" என்ற பெயர் உண்டாயிற்று.



           



Friday 21 January 2022

திருவையாறு தியாகராஜர் ஆராதனைவிழா 22.1.2022 சனிக்கிழமை.

 


தை மாதம் பௌர்ணமியை அடுத்து வரும் புஷ்யபகுள   பஞ்சமி    திதியில் திருவையாறில் 'தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக "ஸ்ரீ தியாகப்ரம்ம மஹோத்சவ சபை' சார்பில் வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. இது 175 ஆவது  வருட ஆராதனை ஆகும்



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள், திருவாரூர் ராமபிரும்மம் மற்றும் சாந்தாதேவிக்கும் மூன்றாவது மகனாக அவதரித்தவர். தன் எட்டு வயதிலேயே தன் தந்தையிடம் ராம காயத்ரி தாரக மந்திரம் உபதேசம் பெற்று தந்தையிடமிருந்த "ராமர் சிலையை "வாங்கி வழிபடலானார். அவரது தாயிடம் ராமதாசர், புரந்தர தாசர் முதலான கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். கல்லூரியில்  ராமாயணம் பயின்றதும் ராமர் மீது பக்தி கூடியது.



 தினமும் ஒருலட்சத்து 25,000 'ராம நாமம்' ஜபித்து பாராயணம் செய்து தனது 36 வது வயதிற்குள் 96 கோடி ராம நாம ஜபத்திற்கு பின், ராமனைக்   குறித்து    பாடல்கள்  மனமுருகி பாடி  முடிக்கவும், அவரது வீட்டு வாசல் கதவை யாரோ தட்டுவது போன்று சத்தம் கேட்கவும், யார்?   எனச்    சென்று   பார்த்தார்.   




அங்கே ராம, லக்ஷ்மணர் தரிசனக் காட்சி கிடைக்கப்பெற்றார். 

அதன்பின், சதாசர்வ காலமும்  ராம  சிந்தனையிலே அவர் இயற்றிய  பாடல்கள் யாவும் இன்றளவிலும் புதிதாக சங்கீதம் பயில்பவர்களுக்கு, இசை மற்றும் பக்தி ஞானத்தை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.


  அத்தகைய மகான் திருவையாறில் வசித்து, காவிரிக் கரையில் ஐக்கியமான இடத்தில், அவரது சமாதியின் மேல்  பிருந்தாவனம் அமைத்து  இத்தகைய  ஆராதனை சங்கீத வழிபாட்டிற்கு  வித்திட்டவரான, 'பெங்களூர்   நாகரத்தினம்மாள்'    சிலையும்  அங்கே நிறுவப்பட்டுள்ளது.     



 இது பௌர்ணமி அடுத்த பிரதமை திதி தொடங்கி பஞ்சமி திதி வரை ஐந்து நாள் விழாவாக கொண்டாடப்படும் முதல் நாள் பிரதமை திதியில் மாலை ஐந்து மணியளவில் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்படும். பல்வேறு கர்னாடக இசைக்கலைஞர்களும் இதில் பங்கு பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். பலவித வாய்ப்பாட்டு மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களும்  தியாகராஜ சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது  பாடல்களைப் பாடி வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், வயலின், மாண்டலின்  இன்னபிற இசைக் கச்சேரிகள் நடத்துவர். இளம் கலைஞர்களும் இங்கே தங்களுக்கு  வாய்ப்பு கிடைப்பதை தனது வாழ்நாள் புண்ணியமாகக் கருதுவர்


ஒரு மேடையில் கச்சேரி நடந்து கொண்டு இருக்கும் போது மற்றொரு மேடையில் வேறொரு குழு அடுத்த கச்சேரிக்கு தயாராவதற்கு வசதியாக அங்கே இரு மேடைகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சங்கீத கலை நிகழ்ச்சி தொய்வில்லாமல் கால விரயமின்றி தொடர்ந்து நடைபெறும்.



நிறைவு நாளான பஞ்சமி திதியன்று ஜன. 22 ஆம் தேதி  2022 சனிக்கிழமை  காலை எட்டு மணியளவில்  தியாகராஜ  ஸ்வாமிகளின் இல்லத்திலிருந்து அவரது   திருவுருவச்   சிலையினை   ஊர்வலமாக தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி வளாகத்திற்கு பஜனையுடன்   எடுத்து வந்து   அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். 



அச்சமயம் அனைத்து இசை மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் கலந்து  கொண்டு,  தியாகராஜஸ்வாமிகள் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ராகத்தில் இயற்றிய  பஞ்ச  ரத்ன  கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செய்வர். தியாகராஜ ஸ்வாமிகள் இந்த பஞ்சரத்தின கிருதிகளை பாடிய பின்னரே அவருக்கு ராமபிரானின் தரிசனம் கிடைத்தது. அதனாலேயே அவரது ஆராதனை தினத்தில் அனைத்து சங்கீத விதவானகளும் ஒன்று கூடி   பஞ்ச    ரத்தின    கீர்த்தனையை இசையஞ்சலியாகச் செலுத்துகின்றனர்


அதன் பின், இரவு "ஆஞ்சனேயர் உற்சவத்துடன்" நிகழ்ச்சி நிறைவுபெறும். 


தியாகராஜ ஸ்வாமிகள் கணபதி முதல் முருகன், சிவன் ஸ்ரீரங்க நாதர், ஆஞ்சனேயர் என அனைத்து தெய்வங்களின் மேலும் மொத்தம் 24,000 பாடல்கள் இயற்றியுள்ளார். அவற்றில் நமக்கு கிடைக்கப்பெற்றது வெறும் 750 பாடல்கள் மட்டுமே!.



தியாகராஜ ஸ்வாமி சிலையின் பின்புறம் அவர் வழிபட்டு வந்த "சிவலிங்கம்" பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரியில் தியாகராஜர் சிவபிரான் மீது இயற்றிய பாடல்கள் 'அகண்ட கானமாக' அதாவது இடைவிடாது பாடப்பெறும். 




அஸ்ஸாம் பயண அனுபவம்.பகுதி 1.


 அடேடே ! வாங்கோ வாங்கோ! எல்லாருக்கும் வணக்கம்.எங்கே கொஞ்ச நாளா காணோம்னு கேட்கிறேளா?


இரண்டு வருட கொரோனா தாக்கத்தில் சோர்ந்திருந்த சமயம், இரண்டு தடுப்பூசி போட்டாயிற்று, கொரோனா பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, லாக்டௌண் அனேகமாக, எல்லா மாநிலங்களிலும் தளர்வுற்ற நிலையில், கொஞ்சம் தைரியம் வந்து, வழக்கமாக சுற்றுப் பயணம் செல்லும் நட்பு வட்டாரக் குடும்பத் தலைகள்,
எங்காவது நாம் சுற்றுப் பயணம் போகலாமா? என்று மெதுவாக ஆரம்பிக்க, எங்கு செல்லாலாம்? என்பது போன்ற ஆலோசனையில், 
சரி "அஸ்ஸாம்" போகலாம்!. என தீர்மானித்து  அதில் புகழ் பெற்ற முக்கிய இடங்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்து,அடுத்தடுத்த ஊர், தங்குமிடம், செலவுகள் என்பது போன்ற விவர பட்டியலை பக்காவாக தயார் செய்து, எங்கள் நட்பு வட்டார "வாட்ஸ்அப்" குழுவில் பகிர்ந்து யாரெல்லாம் வருகிறீர்கள் என்பது போன்ற சுற்றரிக்கையெல்லாம் விட்டனர்.
         நான், நீ 👈👉👆என ஆவலோடு கிட்டத்தட்ட 50 பேர் வரை பயணம் மேற்கொள்ள சம்மதித்தனர். ஆனால், நாளாக ஆக, வருடக் கடைசி விடுமுறை கிடைக்கவில்லை, உடல் நலக்குறைவு, அத்துடன், தடுப்பூசி போடாத 18 வயதிற்குட்பட்டவர்கள் என பற்பல காரணங்களால், ஆட்குறைப்பு பதினாறு பேர்கள் மட்டுமே மிஞ்சினர். 
{எங்களது கூட்டுக் குடும்பத்தில்  மொத்த நபர்களில் 9  பேர் மட்டும் + 1 (எனது பெரிய மைத்துனரின், சம்பந்தி மாமியும் இந்த ஜோதியில் கலந்து கொள்ள விரும்பினார்) = 10 நபர்களும், நட்புக் குழுவில் இரு குடும்பங்கள் 6 நபர்கள்.}
   சரி! நாமளும் போகவேண்டாம் என ஒரு சாரார் சொல்ல, இல்லையில்லை,போகலாம் என சிலர் [நான் உட்பட] குரல் கொடுக்க, சரி வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். என முடிவெடுத்து, எங்களை 🛫✈வானூர்தி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல, எனது பெரிய மைத்துனர், சிற்றுந்து [மினி பஸ்] 🚐ஏற்பாடு செய்திருந்தார்.
27 12.2021 திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில், அஸாமிற்கு  வானூர்தியில் பறப்பதற்கு, அதிகாலை 🕓 4 மணிக்கே எல்லாரும் கிளம்பி கீழே இறங்கி விடவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியும் 😠😠 [கட்டளையிட்டு]😳 😛 அதிகாலை 4 மணிக்கு எனது இரண்டாவது மைத்துனைர் பெண் 'சங்கீதா' , 
ஹாய் !👩  எல்லாரும் என்னா... பண்றீங்க? என அப்பொழுது தான் தூங்கி எழுந்து பல் துலக்கி கையில் காபி டம்ப்ளருடன் செல்லமாய் சிணுங்கியவாறு நிதானமாக வர, 
அவளைப் பார்த்து அதிர்ந்த என் பெண் மாதங்கி, அடியேய் ! ஓடு 4 மணிக்கு கிளம்பனும்னு சொன்னா நீ இன்னும் கிளம்பவேயில்லையா?!  😠😖 பற்களைக் கடிக்காத குறையாய் [அவளையும் தான்] , அப்பா கண்ல படுறதுக்கு முன்னாடி ஓடு இங்கேர்ந்து என விரட்ட,🙇
ஐயய்யோ! 🙆அப்படியா! என😥 துள்ளீ...க் குதித்து ஓடியவள் ,🏃 சமத்தாய் 😍 வெகு விரைவில் தயாராகி வந்தாள். 😇

 தாமதத்திற்கு யார் காரணம்!?😕😖😫😪 என்ற சிறு சலசலப்பிற்கு நடுவே வானூர்தி நிலையத்திற்கு கொஞ்சம் மனத் தாங்கலுடன்,😔😕 மூஞ்சி தூக்கலுடன், ஆயினும் ஒரு சந்தோஷ மன நிலையுடன், தாமதமாகாமல், சரியான நேரத்திற்கு சென்றடைந்தோம்!! 😛🤗😇.அங்கே சம்பந்தி மாமி எங்களுக்கு முன்பே வந்து காத்திருந்து எங்களை வரவேற்றார்.
    இப்படியாக பயணத்தை மேற்கொண்ட அஸாம் மாநில அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இக்கட்டுரை எழுத முற்படுகிறேன். 
உஸ்...ஸ்... அப்பாடா!! இருங்கோ! கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்... 🤣🤣🤣
      வானூர்தி நிலையம் அடைந்த சிறிது நேரத்தில், சரி சரி அவரவர் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு, பயணச்சீட்டுடன் வரிசையில் வாங்கோ! பரிசோதகரிடம் காண்பிக்கவேண்டும் என கூப்பிடவும், வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. நான் ஆதார் அட்டையையும், பயணச்சீட்டையும் அவரிடம் அளித்தேன்.அதை கையில் வாங்கியதும், பரிசோதகர் கையை  உயர்த்தி எனக்கு வணக்கம் சொன்னார். நானும் அவருக்கு தலை அசைத்து கை தூக்கி வணக்கம் சொன்னேன். திரும்பவும் அவர் அதுபோல் செய்யவும், ஒன்றும் புரியாமல் நானும் அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தலையை ஆட்டினேன். என் பின்னால் நின்று கொண்டிருந்த என் பெண், இதை கவனித்து, அம்மா! அவர் உனக்கு வணக்கம் சொல்லலை!📿😷🙋 [மாஸ்கை] முக கவசத்தை நம் புகைப்படத்துடன் ஒப்பிடுவதற்காக இறக்கச் சொல்கிறார் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய், கூறினாள்.
    ஓ! அப்படியா! என்று அசடு வழிந்து கொண்டே முக கவசத்தை இறக்கினேன். 
இது போதாதா!  வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி போல் அம்மா அவருக்கு வணக்கம் சொல்லிண்டிருக்கா! அம்மா தான் அப்படி பண்றான்னு பார்த்தா பெரிப்பாவும் அதே மாதிரி தான் பண்ணிண்டிருக்கா! என அனைவரிடமும் கூறி கேலி சித்திரமே வரைந்து விட்டாள்.😅😄😂😂😂😂😂
  இப்படியாக, இன்னபிற பரிசோதனை வகையறாக்கள் எல்லாம் முடிந்து அனைவரும் எங்களது வானூர்தியில் ஏறினோம். பயணிகள் அனைவருமே வந்துவிட்ட காரணத்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வானூர்தி கிளம்பி விட்டது. ஜன்னல் வழியாக ரசித்த வண்ணம் செல்லுகையில், வானூர்தியின் நிழல் அழகாக தெரிய 'சங்கீதா" அதை படம் பிடித்து காணொளியாக எங்களுக்கு அனுப்பிய பதிவு இங்கே!.
     ஒருவழியாக, "கௌஹாத்தி" வந்தடைந்தோம். ஆங்! சொல்ல மறந்து விட்டேனே!. எங்கள் நட்பு வட்டார இரு குடும்பங்களும்  கோவையிலிருந்து டெல்லி வழியாக, கௌஹாத்தி வந்தனர். அதனால் அவர்கள் வரும்வரை காத்திருந்து, அனைவருமாக முன்கூட்டியே பதிவு செய்திருந்த "ஹோட்டல் நந்தன்" தங்கும் விடுதியை அடைந்தோம். {4 வாடகை மகிழுந்து [கார்] வண்டிகள் எங்களது இந்த பயணம் முடியும்வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது }
சிறிது சிரமப் பரிகாரம், பின் குளியல், ஒப்பனை மற்றும் சிற்றுண்டி எல்லாம் முடித்து, முதல் இடமாக
     புகழ் பெற்ற சக்தி தலங்களுள் ஒன்றான "காமாக்யா தேவி" கோயில் தரிசனம் செய்யலாம் என கிளம்பினோம்.
        தக்ஷன் கடுந்தவம் செய்து ஆதிபராசக்தியே தனக்கு மகளாக வேண்ட , அவ்வண்ணமே அவருக்கு மகளாக'தாட்சாயணியாக அவதரித்தாள் அன்னை. ஆனால், தக்ஷனின் தந்தையான பிரம்மாவின் தவறுக்காக அவரது ஐந்து தலையில் ஒரு தலையை சிவன் கிள்ளி எறிந்ததால் அவரிடம் விரோதம் கொண்டான். இந்நிலையில்   தாட்சாயணி சிவபெருமானை விரும்பி மணந்து கொண்டதால், மகள் மாப்பிள்ளை இருவரையும் தவிர்த்து, தேவர்களுக்கு அவிர்பாகம் வழங்கும் யாகத்தை நடத்தினான் தக்ஷன்.

இதற்கு நியாயம் கேட்கச் சென்ற தன் மகளையும் அலட்சியம் செய்து அவமானப்படுத்தினான் தக்ஷன்.

  இதனால், கோபங்கொண்ட அன்னை தாட்சாயணி  அந்த வேள்வியை தடுக்கும் நோக்கத்தோடு உன்னால் பெறப்பட்ட என் இன்னுயிரும் தேவையில்லை என தானே அந்தத் தீயில் விழுந்து உயிரைத் துறந்தாள். மஹா பதிவிரதையான அன்னையின் உடலை அக்னி பகவானால் சுட்டு எரிக்க முடியாததால், அன்னையின் உடலை ஈசனிடம் ஒப்படைத்தான். இதனால், மிகுந்த கோபங்கொண்ட சிவன் அன்னையின் உடலை தன் தோளில் தாங்கியவாறு 'ருத்ர தாண்டவம்' ஆடத் தொடங்கினார். இதனால் அகில உலகமும் நிலைகுலைந்தது. 

உடனே, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் அன்னையின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவியெங்கும் விழச் செய்தார். அவைகளே 108 சக்தி பீடங்களாயின. அவற்றில் 51 மிக பிரசித்தி பெற்றவை.

அன்னையின் உடல் உறுப்புகளில், 'யோனி' எனப்படும் பிறப்புறுப்பு, விழுந்த இடமே கௌஹாத்தி. இதுவே "காமாக்யா கோயில்" என புகழ் பெற்றது.

வழக்கம் போல் கட்டண தரிசனம், தர்ம தரிசனம் என மாற்றி மாற்றி வரிசையாக மக்களை வழிநடத்துகின்றனர். வழியெங்கும் மின்சார விளக்குகள் அமைத்து இருந்தாலும், அன்னையின் 

  அன்னையின் கர்ப்பகிரஹம் குகைக்குள்  'கும்மென்ற ' இருட்டில்,  கீழே படிக்கட்டுகளில் பெரிய பெரிய தீப விளக்கு வெளிச்சத்தில் இறங்கி, ஒரு தொட்டி போன்ற அமைப்பில், நீருக்குள் இங்கு பாறை போன்ற அமைப்பில் யோனி அமைந்துள்ளது அதற்கு வஸ்திரம், மலர்கள் மஞ்சள் குங்குமம் என பூஜா திரவியங்களால் அலங்கரிக்கப்பட்டதையே நம்மால் தரிசிக்க இயலும். இதற்கு பின்புறம், லக்ஷ்மி, சரஸ்வதி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

நாம் கொண்டு செல்லும் பூஜா திரவியம், வஸ்திரம் இவற்றை அக்கற்சிலையின் மேல் வைத்து, திரும்பவும் நம்மிடமே கொடுத்து விடுகிறார்கள். அப்புனித நீரை குனிந்து நம்மையே எடுத்து தெளித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
கருவறைக்குச் செல்வதற்கு முன், அன்னையின் உருவச்சிலை ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டு, அதற்கு பக்தர்களுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு அன்னைக்கு நேர்ந்து கொண்டு,  பலி கொடுக்கப்படுகிறது. அன்னையின் தரிசனத்திற்காக வரிசையில் செல்லும் சமயம், பக்கவாட்டு கதவின் அருகே பலி கொடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை வைத்திருப்பதைக் கண்டோம். 
ஆனி மாதத்தில், அன்னைக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் எனும் உதிரப்போக்கு ஏற்படுகிறது.அச்சமயம், பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. 
இந்த மூன்று நாட்களில் அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியிலும், குருதியாக சிவப்பு நிறத்தில் ஓடுகிற அதிசயம் இன்றளவிலும் நிகழ்கிறது
   நமது இந்தியத் திரு நாட்டில் ஓடும் பல புண்ணிய நதிகளில், "பிரம்மபுத்திரா' மட்டுமே ஆண் நதியாகும்.