Friday 21 January 2022

திருவையாறு தியாகராஜர் ஆராதனைவிழா 22.1.2022 சனிக்கிழமை.

 


தை மாதம் பௌர்ணமியை அடுத்து வரும் புஷ்யபகுள   பஞ்சமி    திதியில் திருவையாறில் 'தியாகராஜர் ஆராதனை விழா வெகு விமரிசையாக "ஸ்ரீ தியாகப்ரம்ம மஹோத்சவ சபை' சார்பில் வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. இது 175 ஆவது  வருட ஆராதனை ஆகும்



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள், திருவாரூர் ராமபிரும்மம் மற்றும் சாந்தாதேவிக்கும் மூன்றாவது மகனாக அவதரித்தவர். தன் எட்டு வயதிலேயே தன் தந்தையிடம் ராம காயத்ரி தாரக மந்திரம் உபதேசம் பெற்று தந்தையிடமிருந்த "ராமர் சிலையை "வாங்கி வழிபடலானார். அவரது தாயிடம் ராமதாசர், புரந்தர தாசர் முதலான கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். கல்லூரியில்  ராமாயணம் பயின்றதும் ராமர் மீது பக்தி கூடியது.



 தினமும் ஒருலட்சத்து 25,000 'ராம நாமம்' ஜபித்து பாராயணம் செய்து தனது 36 வது வயதிற்குள் 96 கோடி ராம நாம ஜபத்திற்கு பின், ராமனைக்   குறித்து    பாடல்கள்  மனமுருகி பாடி  முடிக்கவும், அவரது வீட்டு வாசல் கதவை யாரோ தட்டுவது போன்று சத்தம் கேட்கவும், யார்?   எனச்    சென்று   பார்த்தார்.   




அங்கே ராம, லக்ஷ்மணர் தரிசனக் காட்சி கிடைக்கப்பெற்றார். 

அதன்பின், சதாசர்வ காலமும்  ராம  சிந்தனையிலே அவர் இயற்றிய  பாடல்கள் யாவும் இன்றளவிலும் புதிதாக சங்கீதம் பயில்பவர்களுக்கு, இசை மற்றும் பக்தி ஞானத்தை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.


  அத்தகைய மகான் திருவையாறில் வசித்து, காவிரிக் கரையில் ஐக்கியமான இடத்தில், அவரது சமாதியின் மேல்  பிருந்தாவனம் அமைத்து  இத்தகைய  ஆராதனை சங்கீத வழிபாட்டிற்கு  வித்திட்டவரான, 'பெங்களூர்   நாகரத்தினம்மாள்'    சிலையும்  அங்கே நிறுவப்பட்டுள்ளது.     



 இது பௌர்ணமி அடுத்த பிரதமை திதி தொடங்கி பஞ்சமி திதி வரை ஐந்து நாள் விழாவாக கொண்டாடப்படும் முதல் நாள் பிரதமை திதியில் மாலை ஐந்து மணியளவில் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்படும். பல்வேறு கர்னாடக இசைக்கலைஞர்களும் இதில் பங்கு பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். பலவித வாய்ப்பாட்டு மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களும்  தியாகராஜ சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது  பாடல்களைப் பாடி வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், வயலின், மாண்டலின்  இன்னபிற இசைக் கச்சேரிகள் நடத்துவர். இளம் கலைஞர்களும் இங்கே தங்களுக்கு  வாய்ப்பு கிடைப்பதை தனது வாழ்நாள் புண்ணியமாகக் கருதுவர்


ஒரு மேடையில் கச்சேரி நடந்து கொண்டு இருக்கும் போது மற்றொரு மேடையில் வேறொரு குழு அடுத்த கச்சேரிக்கு தயாராவதற்கு வசதியாக அங்கே இரு மேடைகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சங்கீத கலை நிகழ்ச்சி தொய்வில்லாமல் கால விரயமின்றி தொடர்ந்து நடைபெறும்.



நிறைவு நாளான பஞ்சமி திதியன்று ஜன. 22 ஆம் தேதி  2022 சனிக்கிழமை  காலை எட்டு மணியளவில்  தியாகராஜ  ஸ்வாமிகளின் இல்லத்திலிருந்து அவரது   திருவுருவச்   சிலையினை   ஊர்வலமாக தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி வளாகத்திற்கு பஜனையுடன்   எடுத்து வந்து   அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். 



அச்சமயம் அனைத்து இசை மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் கலந்து  கொண்டு,  தியாகராஜஸ்வாமிகள் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ராகத்தில் இயற்றிய  பஞ்ச  ரத்ன  கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செய்வர். தியாகராஜ ஸ்வாமிகள் இந்த பஞ்சரத்தின கிருதிகளை பாடிய பின்னரே அவருக்கு ராமபிரானின் தரிசனம் கிடைத்தது. அதனாலேயே அவரது ஆராதனை தினத்தில் அனைத்து சங்கீத விதவானகளும் ஒன்று கூடி   பஞ்ச    ரத்தின    கீர்த்தனையை இசையஞ்சலியாகச் செலுத்துகின்றனர்


அதன் பின், இரவு "ஆஞ்சனேயர் உற்சவத்துடன்" நிகழ்ச்சி நிறைவுபெறும். 


தியாகராஜ ஸ்வாமிகள் கணபதி முதல் முருகன், சிவன் ஸ்ரீரங்க நாதர், ஆஞ்சனேயர் என அனைத்து தெய்வங்களின் மேலும் மொத்தம் 24,000 பாடல்கள் இயற்றியுள்ளார். அவற்றில் நமக்கு கிடைக்கப்பெற்றது வெறும் 750 பாடல்கள் மட்டுமே!.



தியாகராஜ ஸ்வாமி சிலையின் பின்புறம் அவர் வழிபட்டு வந்த "சிவலிங்கம்" பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரியில் தியாகராஜர் சிவபிரான் மீது இயற்றிய பாடல்கள் 'அகண்ட கானமாக' அதாவது இடைவிடாது பாடப்பெறும். 




5 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்
    திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா பற்றி தாங்கள் எழுதிய கட்டுரையிலிருந்து தியாகராஜ பாகவதர் எவ்வாறு ராம பக்தர் ஆனார் என்றும்

    ராம (லட்சுமணர்கள்) தியாகராஜ பாகவதரின் வீட்டின் கதவைத் தட்டி தியாகராஜ பாகவதருக்கு தரிசனம் அளித்தார் என்பதையும்

    இப்போது நடப்பது 175வது உற்சவம் என்றும்

    தியாகராஜர் திருவையாறில் வசித்த அங்கேயே ஐக்கியமாகி அந்த இடத்திலேயே அவருடைய சமாதி எழுப்பப்பட்டது என்றும்

    இந்த சங்கீத உற்சவத்திற்கு வித்திட்டவர் பெங்களூர் ரத்தினம் அம்மாள் என்பதும் அவருக்கும் அங்கேயே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றும்

    ஒரு மேடைக்கு இரு மேடைகள் ஆக கச்சேரி தொய்வில்லாமல் நடக்க ஏற்பாடுகள் இருக்கிறது என்றும்

    இன்று நிறைவு நாள் என்றும் அறிந்தோம் (22.1.22)

    மிக்க நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  2. திருமதி வசந்தி பாலு மேடம்
    திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா பற்றி தாங்கள் எழுதிய கட்டுரையிலிருந்து தியாகராஜ பாகவதர் எவ்வாறு ராம பக்தர் ஆனார் என்றும்

    ராம (லட்சுமணர்கள்) தியாகராஜ பாகவதரின் வீட்டின் கதவைத் தட்டி தியாகராஜ பாகவதருக்கு தரிசனம் அளித்தார் என்பதையும்

    இப்போது நடப்பது 175வது உற்சவம் என்றும்

    தியாகராஜர் திருவையாறில் வசித்த அங்கேயே ஐக்கியமாகி அந்த இடத்திலேயே அவருடைய சமாதி எழுப்பப்பட்டது என்றும்

    இந்த சங்கீத உற்சவத்திற்கு வித்திட்டவர் பெங்களூர் நாகரத்தினம்மாள் என்பதும் அவருக்கும் அங்கேயே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றும்

    ஒரு மேடைக்கு இரு மேடைகள் ஆக கச்சேரி தொய்வில்லாமல் நடக்க ஏற்பாடுகள் இருக்கிறது என்றும்

    இன்று நிறைவு நாள் என்றும் அறிந்தோம் (22.1.22)

    மிக்க நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  3. மிக்க நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete