Saturday 22 January 2022

சண்டிகேச நாயனார்.

              சண்டிகேச நாயனார். 


சிவனடியார்கள் எனப்படும் நாயன்மார்கள் அறுபத்து மூவரில் மிக முக்கியமானவர் சண்டிகேஸ்வரர்" எனலாம். அனைத்து சிவன் கோயில்களிலும், சிவ சன்னதியின் அபிஷேகத் தீர்த்தம் வழியும், கோமுகிக்கும், துர்க்கை அம்மனுக்கும் இடையில் இவரது சன்னதி தெற்கு நோக்கி அமையப் பெற்றிருக்கும். சிவன் சொத்துக்களை சரிபார்ப்பவர் என்றும், கண்டிப்பு மிகுந்தவர் என்றும் இவரைப் பற்றிக் குறிபபிடுவர். பிராகாரம் சுற்றி வந்து இவரையும் வழிபாடு செய்வதால் மட்டுமே சிவ வழிபாடு பூர்த்தியடையும். 

சிலர், சண்டிஸ்வரரை செவிடு என நினைத்து, கைகளை தட்டியும், விரல்களால் சொடுக்கு போட்டும் வழிபடுவர். இது மிகப் பெரிய தவறான செயலாகும். அவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதால், அவரது தவ நிலைக்கு இடையூறு ஏற்படாவண்ணம், நம் கைகளை விரித்துக் காண்பித்து அமைதியாக வழிபட்டு வருவதே சாலச் சிறந்தது. 
அதாவது, சிவனாரது சொத்துக்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறி, சிவ வழிபாட்டின் பூரண பலனை அருளும் படியும் வேண்டிக் கொள்ளவேண்டும்.
   சரியான கறாரான கண்டிப்பு பேர்வழியான   சண்டிகேஸ்வரரது   குருபூஜை 'தை மாத'  உத்திரம் நக்ஷத்திரம் ஜனவரி 23 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆகும்.
       கும்பகோணம் அருகிலுள்ள, 'திருசேய்ஞலூரில்' அந்தண குலத்தில் அவதரித்தார். இவரது, இயற்பெயர் விசாரசருமர். முற்பிறவியின் ஞானம் தொடரப்  பெற்றவராய், எந்தவொரு ஆசானிடத்திலும் கல்வி பயிலாமலே, இயல்பாகவே, வேதம் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவருக்கு 7 வயதிலேயே 'உப நயனம்' செய்விக்கப்பட்டது. 
    தன்னை வழி நடத்த சிவபெருமான் ஒருவராலேயே முடியும் என பரிபூரணமாக நம்பி, நித்தம் சிவ சிந்தனை மற்றும் சிவ பூஜையிலேயே நாட்டம் கொண்டிருந்தார். சிவனடியார்கள் எனப்படும் நாயன்மார்கள் அறுபத்து மூவரில் மிக முக்கியமானவர் சண்டிகேஸ்வரர்" எனலாம். அனைத்து சிவன் கோயில்களிலும், சிவ சன்னதியின் அபிஷேகத் தீர்த்தம் வழியும், கோமுகிக்கும், துர்க்கை அம்மனுக்கும் இடையில் இவரது சன்னதி தெற்கு நோக்கி அமையப் பெற்றிருக்கும். சிவன் சொத்துக்களை சரிபார்ப்பவர் என்றும், கண்டிப்பு மிகுந்தவர் என்றும் இவரைப் பற்றிக் குறிபபிடுவர். பிராகாரம் சுற்றி வந்து இவரையும் வழிபாடு செய்வதால் மட்டுமே சிவ வழிபாடு பூர்த்தியடையும். 

சிலர், சண்டிஸ்வரரை செவிடு என நினைத்து, கைகளை தட்டியும், விரல்களால் சொடுக்கு போட்டும் வழிபடுவர். இது மிகப் பெரிய தவறான செயலாகும். அவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதால், அவரது தவ நிலைக்கு இடையூறு ஏற்படாவண்ணம், நம் கைகளை விரித்துக் காண்பித்து அமைதியாக வழிபட்டு வருவதே சாலச் சிறந்தது. 

அதாவது, சிவனாரது சொத்துக்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறி, சிவ வழிபாட்டின் பூரண பலனை அருளும் படியும் வேண்டிக் கொள்ளவேண்டும்.

   சரியான கறாரான கண்டிப்பு பேர்வழியான   சண்டிகேஸ்வரரது   குருபூஜை 'தை மாத'  உத்திரம் நக்ஷத்திரம் ஜனவரி 23 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆகும்.

       கும்பகோணம் அருகிலுள்ள, 'திருசேய்ஞலூரில்' அந்தண குலத்தில் அவதரித்தார். இவரது, இயற்பெயர் விசாரசருமர். முற்பிறவியின் ஞானம் தொடரப்  பெற்றவராய், எந்தவொரு ஆசானிடத்திலும் கல்வி பயிலாமலே, இயல்பாகவே, வேதம் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவருக்கு 7 வயதிலேயே 'உப நயனம்' செய்விக்கப்பட்டது. 

    தன்னை வழி நடத்த சிவபெருமான் ஒருவராலேயே முடியும் என பரிபூரணமாக நம்பி, நித்தம் சிவ சிந்தனை மற்றும் சிவ பூஜையிலேயே நாட்டம் கொண்டிருந்தார். 


தன் நண்பன் மாடு மேய்க்கும் பொழுது, பசு மாட்டை அடிப்பதைக் கண்டு மனம் பதறி, கோமாதாவின் பெருமைகளை    எடுத்துக் கூறி, இனி, தானே மாடுகளை   மேய்த்து தருவதாக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது பொறுமையான  அன்பான கவனிப்பால், மாடுகள் அதிக அளவில் பால் கறந்தன. 

      விசார சருமன், ஆற்றங்கரையிலேயே அத்தி மரத்தினடியில், ஆற்று மணலைக் கொண்டு, சிவலிங்கம் அதனைச் சுற்றி மதில் சுவர் என மணற்கோயில் அமைத்து, அனைத்து பசுவிடமிருந்தும் பால் கறந்து,அதை சிவனுக்கு அபிஷேகம் செய்யலானார். 


. ஊரார் இவரது செயலை, அவன் தந்தையிடம் முறையிட, அவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு , இனி நான் அவனை கண்டித்து, இதுபோல் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

  பின், தன் மகனை அழைத்து, ஆகம சாஸ்திர சம்பிரதாயம் விதிப்படி கோயில் கட்டி வழிபடவேண்டுமே தவிர, இப்படி உன் இஷ்டப்படி மணலாற் கோயில் அமைக்கக்கூடாது என நயமாகவும், கடுமையாகவும் அவனிடத்தில் அறிவுறுத்தியும், எச்சரித்தும் பார்த்தார். ஆனால், சிறுவனோ எதையும் காதில் வாங்காமல், தன்   செயலைத்   தொடர்ந்தான். 


அவன் தன் பூஜையை தொடர்வதைக் கேள்வியுற்ற அவன் தந்தை 'யக்ஞதத்தன்'  அவ்விடம் விரைந்து, அவனை கோபத்துடன் பலமுறை,  அழைத்தும், பிரம்பால் அடித்தும், அவன் எதற்கும் மனம் சிதறாமல், தான் எண்ணிய செயலை சிவபூஜையை கருத்தாக செய்து கொண்டிருந்தான். 
இதனால் வெகுண்ட யக்ஞதத்தன், பூஜை பொருட்களையெல்லாம் காலால் எட்டி உதைக்க, அப்பொழுது தான் சுய நினைவு வரப்பெற்றவராய், தன் செயலால் சீற்றம் அடைந்தான். 

 சிவ அபராதம் செய்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு தக்க தண்டனை வழங்குவேன்  எனக் கூறி, அருகே இருந்த, ஒரு மரக்கொம்பை  எடுத்து, ஐந்தெழுத்து, மந்திரம் ஜபித்து, தன் தந்தையின் மேல் ஏவினான். அக்கொம்பு 'மழுவாக மாறி, தந்தையின் கால்களை வெட்டியது. 

உடன் பார்வதி பரமேஸ்வரர் காட்சியளித்து, அவரது தந்தையையும் உயிர்ப்பித்து, எனது தொண்டர்கள் அனைவருக்கும் உன்னையே தலைவன்  ஆக்கினோம்.  அத்துடன், எனது அமிர்தம் , மலர்கள் மற்றும் பரிவட்டம்'  அனைத்தையும் உனக்கே தந்தோம் எனஆசியளித்து, தன் ஜடாமுடியிலிருந்து  கொன்றை மாலையை எடுத்து விசாரசருமருக்கு அணிவித்து, 'சண்டேசப் பதவியை' வழங்கினார்.

இப்பதவியை விசாரசருமருக்கு  அளித்ததால், சிவபிரானுக்கு, "சண்டேச அனுகிரஹ மூர்த்தி" என்ற பெயர் உண்டாயிற்று.



           



3 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    சண்டிகேஸ்வரர் பற்றி எத்தனை விஷயங்கள் !
    சண்டிகேஸ்வரர் ஒரு நாயன்மார் என்று அறிந்தோம்
    சண்டிகேஸ்வரர் முன் கை தட்டியோ சுடக்கு போட்டோ செய்யக்கூடாது
    சிவனாரின் எந்த சொத்துக்களையும் நாம் எடுத்துச் செல்லவில்லை என்று கையை விரித்து காட்டினால் போதும் என்று அறிந்தோம்.

    சிவன் கோயில் பிரகாரம் வலம் வந்து சண்டிகேஸ்வரரையும் வழி பட்டால் தான்
    சிவவழிபாடு பூர்த்தியடையும் என்றறிந்தோம்.
    சண்டிகேஸ்வரர் அந்தணர் குலத்தில் பிறந்தவர் என்றும்
    அவர் இயற்பெயர் விசாரசருமர் என்றும் முற்பிறவியின் ஞானம் இப்பிறவியிலும் தொடர எதையும் கற்காமலேயே வேதம் அறியும் ஆற்றல் பெற்றவராக இருந்தார் என்றும்
    இன்னும் பல விஷயங்களையும் அறிந்தோம்

    மிக்க நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
    Replies
    1. Superb akka..evalu nal nan sodaku potten..enemel correct oannikeren..om shivaya namaha

      Delete
  2. Thanks bro 🙏🏻🙏🏻🙏🙏🙏

    ReplyDelete