Friday 21 January 2022

அஸ்ஸாம் பயண அனுபவம்.பகுதி 1.


 அடேடே ! வாங்கோ வாங்கோ! எல்லாருக்கும் வணக்கம்.எங்கே கொஞ்ச நாளா காணோம்னு கேட்கிறேளா?


இரண்டு வருட கொரோனா தாக்கத்தில் சோர்ந்திருந்த சமயம், இரண்டு தடுப்பூசி போட்டாயிற்று, கொரோனா பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, லாக்டௌண் அனேகமாக, எல்லா மாநிலங்களிலும் தளர்வுற்ற நிலையில், கொஞ்சம் தைரியம் வந்து, வழக்கமாக சுற்றுப் பயணம் செல்லும் நட்பு வட்டாரக் குடும்பத் தலைகள்,
எங்காவது நாம் சுற்றுப் பயணம் போகலாமா? என்று மெதுவாக ஆரம்பிக்க, எங்கு செல்லாலாம்? என்பது போன்ற ஆலோசனையில், 
சரி "அஸ்ஸாம்" போகலாம்!. என தீர்மானித்து  அதில் புகழ் பெற்ற முக்கிய இடங்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்து,அடுத்தடுத்த ஊர், தங்குமிடம், செலவுகள் என்பது போன்ற விவர பட்டியலை பக்காவாக தயார் செய்து, எங்கள் நட்பு வட்டார "வாட்ஸ்அப்" குழுவில் பகிர்ந்து யாரெல்லாம் வருகிறீர்கள் என்பது போன்ற சுற்றரிக்கையெல்லாம் விட்டனர்.
         நான், நீ 👈👉👆என ஆவலோடு கிட்டத்தட்ட 50 பேர் வரை பயணம் மேற்கொள்ள சம்மதித்தனர். ஆனால், நாளாக ஆக, வருடக் கடைசி விடுமுறை கிடைக்கவில்லை, உடல் நலக்குறைவு, அத்துடன், தடுப்பூசி போடாத 18 வயதிற்குட்பட்டவர்கள் என பற்பல காரணங்களால், ஆட்குறைப்பு பதினாறு பேர்கள் மட்டுமே மிஞ்சினர். 
{எங்களது கூட்டுக் குடும்பத்தில்  மொத்த நபர்களில் 9  பேர் மட்டும் + 1 (எனது பெரிய மைத்துனரின், சம்பந்தி மாமியும் இந்த ஜோதியில் கலந்து கொள்ள விரும்பினார்) = 10 நபர்களும், நட்புக் குழுவில் இரு குடும்பங்கள் 6 நபர்கள்.}
   சரி! நாமளும் போகவேண்டாம் என ஒரு சாரார் சொல்ல, இல்லையில்லை,போகலாம் என சிலர் [நான் உட்பட] குரல் கொடுக்க, சரி வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். என முடிவெடுத்து, எங்களை 🛫✈வானூர்தி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல, எனது பெரிய மைத்துனர், சிற்றுந்து [மினி பஸ்] 🚐ஏற்பாடு செய்திருந்தார்.
27 12.2021 திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில், அஸாமிற்கு  வானூர்தியில் பறப்பதற்கு, அதிகாலை 🕓 4 மணிக்கே எல்லாரும் கிளம்பி கீழே இறங்கி விடவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியும் 😠😠 [கட்டளையிட்டு]😳 😛 அதிகாலை 4 மணிக்கு எனது இரண்டாவது மைத்துனைர் பெண் 'சங்கீதா' , 
ஹாய் !👩  எல்லாரும் என்னா... பண்றீங்க? என அப்பொழுது தான் தூங்கி எழுந்து பல் துலக்கி கையில் காபி டம்ப்ளருடன் செல்லமாய் சிணுங்கியவாறு நிதானமாக வர, 
அவளைப் பார்த்து அதிர்ந்த என் பெண் மாதங்கி, அடியேய் ! ஓடு 4 மணிக்கு கிளம்பனும்னு சொன்னா நீ இன்னும் கிளம்பவேயில்லையா?!  😠😖 பற்களைக் கடிக்காத குறையாய் [அவளையும் தான்] , அப்பா கண்ல படுறதுக்கு முன்னாடி ஓடு இங்கேர்ந்து என விரட்ட,🙇
ஐயய்யோ! 🙆அப்படியா! என😥 துள்ளீ...க் குதித்து ஓடியவள் ,🏃 சமத்தாய் 😍 வெகு விரைவில் தயாராகி வந்தாள். 😇

 தாமதத்திற்கு யார் காரணம்!?😕😖😫😪 என்ற சிறு சலசலப்பிற்கு நடுவே வானூர்தி நிலையத்திற்கு கொஞ்சம் மனத் தாங்கலுடன்,😔😕 மூஞ்சி தூக்கலுடன், ஆயினும் ஒரு சந்தோஷ மன நிலையுடன், தாமதமாகாமல், சரியான நேரத்திற்கு சென்றடைந்தோம்!! 😛🤗😇.அங்கே சம்பந்தி மாமி எங்களுக்கு முன்பே வந்து காத்திருந்து எங்களை வரவேற்றார்.
    இப்படியாக பயணத்தை மேற்கொண்ட அஸாம் மாநில அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இக்கட்டுரை எழுத முற்படுகிறேன். 
உஸ்...ஸ்... அப்பாடா!! இருங்கோ! கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்... 🤣🤣🤣
      வானூர்தி நிலையம் அடைந்த சிறிது நேரத்தில், சரி சரி அவரவர் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு, பயணச்சீட்டுடன் வரிசையில் வாங்கோ! பரிசோதகரிடம் காண்பிக்கவேண்டும் என கூப்பிடவும், வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. நான் ஆதார் அட்டையையும், பயணச்சீட்டையும் அவரிடம் அளித்தேன்.அதை கையில் வாங்கியதும், பரிசோதகர் கையை  உயர்த்தி எனக்கு வணக்கம் சொன்னார். நானும் அவருக்கு தலை அசைத்து கை தூக்கி வணக்கம் சொன்னேன். திரும்பவும் அவர் அதுபோல் செய்யவும், ஒன்றும் புரியாமல் நானும் அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தலையை ஆட்டினேன். என் பின்னால் நின்று கொண்டிருந்த என் பெண், இதை கவனித்து, அம்மா! அவர் உனக்கு வணக்கம் சொல்லலை!📿😷🙋 [மாஸ்கை] முக கவசத்தை நம் புகைப்படத்துடன் ஒப்பிடுவதற்காக இறக்கச் சொல்கிறார் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய், கூறினாள்.
    ஓ! அப்படியா! என்று அசடு வழிந்து கொண்டே முக கவசத்தை இறக்கினேன். 
இது போதாதா!  வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி போல் அம்மா அவருக்கு வணக்கம் சொல்லிண்டிருக்கா! அம்மா தான் அப்படி பண்றான்னு பார்த்தா பெரிப்பாவும் அதே மாதிரி தான் பண்ணிண்டிருக்கா! என அனைவரிடமும் கூறி கேலி சித்திரமே வரைந்து விட்டாள்.😅😄😂😂😂😂😂
  இப்படியாக, இன்னபிற பரிசோதனை வகையறாக்கள் எல்லாம் முடிந்து அனைவரும் எங்களது வானூர்தியில் ஏறினோம். பயணிகள் அனைவருமே வந்துவிட்ட காரணத்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வானூர்தி கிளம்பி விட்டது. ஜன்னல் வழியாக ரசித்த வண்ணம் செல்லுகையில், வானூர்தியின் நிழல் அழகாக தெரிய 'சங்கீதா" அதை படம் பிடித்து காணொளியாக எங்களுக்கு அனுப்பிய பதிவு இங்கே!.
     ஒருவழியாக, "கௌஹாத்தி" வந்தடைந்தோம். ஆங்! சொல்ல மறந்து விட்டேனே!. எங்கள் நட்பு வட்டார இரு குடும்பங்களும்  கோவையிலிருந்து டெல்லி வழியாக, கௌஹாத்தி வந்தனர். அதனால் அவர்கள் வரும்வரை காத்திருந்து, அனைவருமாக முன்கூட்டியே பதிவு செய்திருந்த "ஹோட்டல் நந்தன்" தங்கும் விடுதியை அடைந்தோம். {4 வாடகை மகிழுந்து [கார்] வண்டிகள் எங்களது இந்த பயணம் முடியும்வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது }
சிறிது சிரமப் பரிகாரம், பின் குளியல், ஒப்பனை மற்றும் சிற்றுண்டி எல்லாம் முடித்து, முதல் இடமாக
     புகழ் பெற்ற சக்தி தலங்களுள் ஒன்றான "காமாக்யா தேவி" கோயில் தரிசனம் செய்யலாம் என கிளம்பினோம்.
        தக்ஷன் கடுந்தவம் செய்து ஆதிபராசக்தியே தனக்கு மகளாக வேண்ட , அவ்வண்ணமே அவருக்கு மகளாக'தாட்சாயணியாக அவதரித்தாள் அன்னை. ஆனால், தக்ஷனின் தந்தையான பிரம்மாவின் தவறுக்காக அவரது ஐந்து தலையில் ஒரு தலையை சிவன் கிள்ளி எறிந்ததால் அவரிடம் விரோதம் கொண்டான். இந்நிலையில்   தாட்சாயணி சிவபெருமானை விரும்பி மணந்து கொண்டதால், மகள் மாப்பிள்ளை இருவரையும் தவிர்த்து, தேவர்களுக்கு அவிர்பாகம் வழங்கும் யாகத்தை நடத்தினான் தக்ஷன்.

இதற்கு நியாயம் கேட்கச் சென்ற தன் மகளையும் அலட்சியம் செய்து அவமானப்படுத்தினான் தக்ஷன்.

  இதனால், கோபங்கொண்ட அன்னை தாட்சாயணி  அந்த வேள்வியை தடுக்கும் நோக்கத்தோடு உன்னால் பெறப்பட்ட என் இன்னுயிரும் தேவையில்லை என தானே அந்தத் தீயில் விழுந்து உயிரைத் துறந்தாள். மஹா பதிவிரதையான அன்னையின் உடலை அக்னி பகவானால் சுட்டு எரிக்க முடியாததால், அன்னையின் உடலை ஈசனிடம் ஒப்படைத்தான். இதனால், மிகுந்த கோபங்கொண்ட சிவன் அன்னையின் உடலை தன் தோளில் தாங்கியவாறு 'ருத்ர தாண்டவம்' ஆடத் தொடங்கினார். இதனால் அகில உலகமும் நிலைகுலைந்தது. 

உடனே, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் அன்னையின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவியெங்கும் விழச் செய்தார். அவைகளே 108 சக்தி பீடங்களாயின. அவற்றில் 51 மிக பிரசித்தி பெற்றவை.

அன்னையின் உடல் உறுப்புகளில், 'யோனி' எனப்படும் பிறப்புறுப்பு, விழுந்த இடமே கௌஹாத்தி. இதுவே "காமாக்யா கோயில்" என புகழ் பெற்றது.

வழக்கம் போல் கட்டண தரிசனம், தர்ம தரிசனம் என மாற்றி மாற்றி வரிசையாக மக்களை வழிநடத்துகின்றனர். வழியெங்கும் மின்சார விளக்குகள் அமைத்து இருந்தாலும், அன்னையின் 

  அன்னையின் கர்ப்பகிரஹம் குகைக்குள்  'கும்மென்ற ' இருட்டில்,  கீழே படிக்கட்டுகளில் பெரிய பெரிய தீப விளக்கு வெளிச்சத்தில் இறங்கி, ஒரு தொட்டி போன்ற அமைப்பில், நீருக்குள் இங்கு பாறை போன்ற அமைப்பில் யோனி அமைந்துள்ளது அதற்கு வஸ்திரம், மலர்கள் மஞ்சள் குங்குமம் என பூஜா திரவியங்களால் அலங்கரிக்கப்பட்டதையே நம்மால் தரிசிக்க இயலும். இதற்கு பின்புறம், லக்ஷ்மி, சரஸ்வதி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

நாம் கொண்டு செல்லும் பூஜா திரவியம், வஸ்திரம் இவற்றை அக்கற்சிலையின் மேல் வைத்து, திரும்பவும் நம்மிடமே கொடுத்து விடுகிறார்கள். அப்புனித நீரை குனிந்து நம்மையே எடுத்து தெளித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
கருவறைக்குச் செல்வதற்கு முன், அன்னையின் உருவச்சிலை ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டு, அதற்கு பக்தர்களுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு அன்னைக்கு நேர்ந்து கொண்டு,  பலி கொடுக்கப்படுகிறது. அன்னையின் தரிசனத்திற்காக வரிசையில் செல்லும் சமயம், பக்கவாட்டு கதவின் அருகே பலி கொடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை வைத்திருப்பதைக் கண்டோம். 
ஆனி மாதத்தில், அன்னைக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் எனும் உதிரப்போக்கு ஏற்படுகிறது.அச்சமயம், பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. 
இந்த மூன்று நாட்களில் அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியிலும், குருதியாக சிவப்பு நிறத்தில் ஓடுகிற அதிசயம் இன்றளவிலும் நிகழ்கிறது
   நமது இந்தியத் திரு நாட்டில் ஓடும் பல புண்ணிய நதிகளில், "பிரம்மபுத்திரா' மட்டுமே ஆண் நதியாகும். 














No comments:

Post a Comment