Friday 14 April 2023

தவன உற்சவம். 7.3.2023. 'காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் & ஸ்ரீவரதராஜ பெருமாள்

 

காஞ்சி சுந்தராம்பிகை சமேத ஸ்ரீ கச்சபேஸ்வரர்.


செவ்வாய் மார்ச் 7 ஆம்தேதி [மாசி 23]  மாசி பௌர்ணமி திதியில் காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீவரதராஜ பெருமாள்   கோயிலிலும், 'தவன உற்சவம்' விமரிசையாக நடக்கும். தவனம் என்றால் மருக்கொழுந்து.


மாசி மாத இலையுதிர்க் காலம் முடிந்து, தாவரங்கள் எல்லாம் திரும்பவும் துளிர்விடத் தொடங்கும். அது சமயம் செடி கொடி மரங்களுக்கு அருள் செய்யும் விதமாக, ஊரையே தன் நறுமணத்தால் மயக்கும் மருக்கொழுந்து மலர்களால் மாலை , தோரணங்கள் கட்டி இறைவனை அலங்கரித்து, கோயில்    நந்தவனத்தில் எழுந்தருளச் செய்வர். மருக்கொழுந்து வாட வாட அதன் நறுமணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அதுபோல், இறைவனை நாம் சரணாகதி அடைய அடைய, நம் கஷ்டங்கள் மனத்துயரம் தீர்ந்து, நிம்மதி பெருகும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக 'தவன உற்சவம்' கொண்டாடப்படுகிறது. 

அமிர்தத்திற்காக, தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது, மத்தாகப் பயன்பட்ட, மந்தர மலை கடலில் மூழ்க ஆரம்பிக்க, உடன் மஹாவிஷ்ணு, ஆமையாக வடிவெடுத்து மலையை தன் முதுகில் தாங்கி அருள் புரிந்தார்! அல்லவா?  தன்னால் தான் அமிர்தம் கிடைத்தது என்ற மமதையில், ஆமை வடிவோடு  அக்கடலையே கலக்கி உயிரினங்களை அச்சுறுத்தினார்.

இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், ஆமையைப் பிடித்து, மேல் ஓட்டை உடைத்து எடுத்து,. தான் அணிந்திருக்கும் எலும்பு மாலையின் இடையில் கோர்த்துக் கொண்டார்.

தன் தவறுணர்ந்த மஹாவிஷ்ணுவும், காஞ்சியை வந்தடைந்து, சிவபிரானை வழிபட்டு, திரும்பவும் வைகுண்டத்தை கைவரப் பெற்றார். கச்சபம் என்றால் ஆமை. கச்சபம் வடிவில் விஷ்ணு இத்தலத்தில் சிவனை   பூஜித்ததால், இத்தலம் 'கச்சபேசம்' எனவும், இறைவனார், "கச்சபேஸ்வரர்" எனத் திரு நாமம் தாங்கியும் அருள்பாலிக்கிறார். அத்துடன் நீர் வாழ் உயிரினங்களுக்கு அருள் புரியும் விதமாக, மாசி மாதத்தில் ''தெப்ப உற்சவமும்" நடத்தப்படுகிறது.




No comments:

Post a Comment