Friday 14 April 2023

பிரதோஷ கால வழிபாட்டு முறை & மஹாசிவராத்திரி.

 . 



28.2.2022 திங்கட்கிழமை விசேஷமான ஸோமவார பிரதோஷம். சிவபெருமான்   ஆலகால  விஷத்தை உண்டு உலகை காத்த அந்த குறிப்பிட்ட காலமே  'பிரதோஷ காலமாகும்  சாயங்காலம் 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலான பிரதோஷ காலத்தில் சிவனையும்    நந்தியையும் தரிசித்து வணங்குவது  விசேஷ பலன்களைத் தரும்.இப்பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடும் முறையை  "கடம்பவன புராணம்' விளக்குகிறது. 


அதாவது, நாம் பொதுவாக, இறைவனை முதலில் தரிசித்த பின் கோயில் பிராகாரம் முழுவதும் வலப்புறமிருந்து இடமாக சுற்றி வருவது வழக்கம் அல்லவா!ஆனால்,


       இந்த பிரதோஷ காலத்தில் முதலில் நந்தியை தரிசித்தபின், இடப்புறமாகச் சென்று, 'சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். பின் திரும்பி வந்த வழியே திரும்பி நந்தியை தரிசித்து, வலப்புறமாகச் சிவன் சன்னதியை சுற்றிச் சென்று சிவலிங்க அபிஷேக நீர் வழியும் " கோமுகி" வரை சென்று அதன் துவார வழியாக சிவ தரிசனம் செய்து பின், திரும்பவும் வந்த வழியே வந்து நந்திகேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். இம்மாதிரி இரண்டு முறை இடமும், வலமுமாக நந்தி,சண்டிகேசர், நந்தி , கோமுகி , நந்தி என இதே வரிசைப்படி தரிசனம் செய்யவேண்டும். மூன்றாவது முறையாக நந்தி மற்றும் சண்டிகேஸ்வரரை தரிசித்ததும்   திரும்பவும்  நந்தியை தரிசனம் செய்த பின்னரே சுவாமியை தரிசனம் செய்து வழிபடவேண்டும்


இப்பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடும் முறையை  "கடம்பவன புராணம்' விளக்குகிறது. 


அதாவது, நாம் பொதுவாக, இறைவனை முதலில் தரிசித்த பின் கோயில் பிராகாரம் முழுவதும் வலப்புறமிருந்து இடமாக சுற்றி வருவது வழக்கம் அல்லவா!ஆனால்,

       இந்த பிரதோஷ காலத்தில் முதலில் நந்தியை தரிசித்தபின், இடப்புறமாகச் சென்று, 'சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். பின் திரும்பி வந்த வழியே திரும்பி நந்தியை தரிசித்து, வலப்புறமாகச் சிவன் சன்னதியை சுற்றிச் சென்று சிவலிங்க அபிஷேக நீர் வழியும் " கோமுகி" வரை சென்று அதன் துவார வழியாக சிவ தரிசனம் செய்து பின், திரும்பவும் வந்த வழியே வந்து நந்திகேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். இம்மாதிரி இரண்டு முறை இடமும், வலமுமாக நந்தி,சண்டிகேசர், நந்தி , கோமுகி , நந்தி என இதே வரிசைப்படி தரிசனம் செய்யவேண்டும். மூன்றாவது முறையாக நந்தி மற்றும் சண்டிகேஸ்வரரை தரிசித்ததும்   திரும்பவும்  நந்தியை தரிசனம் செய்த பின்னரே சுவாமியை தரிசனம் செய்து வழிபடவேண்டும்.

   இருபது வகை பிரதோஷ காலங்கள் உள்ளன. 
தினந்தோறும் நிகழும் 4.30 மணி முதல் 7 மணி வரையிலான காலம் 
"நித்ய பிரதோஷம்" எனப்படுகிறது. இந்நேரத்தில் சிவவழிபாடு உகந்தது.

                                                மஹாசிவராத்திரி.
அடுத்த நாள் மார்ச் 1 ஆம் தேதி செவ்வாயனறு மஹாசிவராத்திரி.     ஒருமுறை சண்டன் எனும் வேடன் தன் குலவழக்கப்படி வேட்டைக்குச் சென்ற இடத்தில் வில்வ மரத்தினடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். இனம் புரியாத பரவச நிலையில் தன்னை மறந்து லிங்கத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறு   இருந்தான். 
அச்சமயம் வேட்டைக்கு சிங்ககேது எனும் மன்னன் தன் படை பரிவாரங்களை தவற விட்டு வழி தெரியாமல், சண்டனைக் கண்டதும் தான் வந்து நிற்பது கூட அறியாமல் பிரமை பிடித்தவாறு இருக்கும்   சண்டனை உலுக்கி, அவனிடம் வழி கேட்டான். திடுக்கிட்டு சுய நினைவு கொண்டு விவரம் அறிந்து  பின்,   மன்னனுக்கு வழி காட்டியபடி செல்லும் வழியில் மன்னனிடம் லிங்கம் பற்றியும் அதற்கு பூஜை செய்யும் முறை பற்றியும் விளக்கமளிக்க வேண்டினான். மிகவும் களைத்து வாடியிருந்த மன்னன், எரிச்சலுடன், உன் தோல்   பையில்   நீரை நிரப்பி லிங்கத்திற்கு அபிஷேகம் செய். சுடுகாட்டுச் சாம்பலை எடுத்து வந்து சிவனுக்கு பூசு. கையில் கிடைத்த மலரை யெல்லாம் பறித்துக் கொண்டு சிவலிங்கத்தின் தலையில் வை. அதன்பின், நீ தினமும் உண்பதையே அவருக்கும் நிவேதனம் செய். அப்புறம் ஒரு கும்பிடு போடு. அவ்வளவு தான்! என்று எரிச்சலுடன் கூறினான்.
அந்த வேடனும் அதுதான் பூஜை முறை போலும் என்று கருதி அவ்வண்ணமே தினமும் செய்து வந்தான். ஒரு நாள் சுடுகாட்டில் பிணம் எதுவும் எரியவில்லை.சுடுகாட்டுச் சாம்பல் இல்லாததால் பூஜை தடைபடுகிறதே! என்று கவலையுற்றான். 
அப்பொழுது அவன் மனைவி சண்டிகா   கவலைப்படாதீர்கள்!  நம் குடிசையை எரித்து விடுங்கள் எரியும் தீயில் நான் விழுந்து எரித்து விட்டால் தங்களுக்கு சாம்பல் கிடைத்துவிடும். அதை எடுத்து சிவனுக்கு பூசுங்கள் பெருமானும் அகம் மகிழ்வார் என்று வெள்ளந்தியாகக் கூறவும், சிவபூஜையே பெரிது!! எனக் கருதி  அதுவே சரியென்று, வேடனும் அவ்வாறே செய்தான். அன்றைய தினம் சிவராத்திரி என்பது அவன் அறியாதது.
 இவ்விருவரின் கள்ளங்கபடமில்லாத தூய அன்பு நிறைந்த பக்தியால் மனம் உருகிய இறைவனும் வேடனுக்கு காட்சி கொடுத்ததோடு, சண்டிகாவையும் உயிர்ப்பித்து, வேடனுக்கும் சகல ஞானத்தையும் வழங்கி, பின் அவர்களது இறுதிக் காலத்தில் சிவ கணங்கள் எதிர் அழைத்துச் செல்ல, இறவாப் பேரின்ப நிலை எனும் முக்தியை அளித்தார். 
 சண்டனின் பக்தியை உலகிற்கு வெளிக்காட்டும் விதமாகவே அவர் சுடுகாட்டுச் சாம்பலை மனமுவந்து பூசிக் கொண்டார்.


No comments:

Post a Comment