Tuesday, 10 December 2024

யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு


       வருகிற செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 13 ம்தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையும், அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 14 புதன் கிழமை தமிழ் புத்தாண்டும் பிறக்க இருக்கிறது. image.png

    யுகாதி பண்டிகை சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் பிறக்கும் புது ஆண்டாகும். அது பங்குனி மாத அமாவாசை அடுத்த பிரதமை திதியில் உதிப்பதாகும். அமாவாசை அடுத்த நாளும்  தொடரும் பட்சத்தில் சிறிதளவு இருந்தாலும் அந்த நாளைத் தவிர்த்து அடுத்த நாளிலேயே தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்படுகிறது. பங்குனி அமாவாசை இன்றைய தினம் ஞாயிறு மட்டுமின்றி நாளைய தினம் திங்கட்கிழமையும் பிச்சம் இருப்பதால் ,இந்த 'பிலவ' வருடத்திய யுகாதி பண்டிகை செவ்வாயன்று வருகிறது அதற்கு அடுத்த நாளே தமிழ் வருடப் பிறப்பும் வந்து விடுகின்றது. 


தமிழ் அறுபது வருடங்களில் 'பிலவ' 35 ஆவது வருடமாகும்.
யுகாதி பண்டிகை எந்த கிழமையில் வருகிறதோ அந்த கிழமையே அந்த வருடத்திய 'ராஜாவாக' அதிக்கம் செலுத்துவார்  அதனால் பிலவ வருடத்திய அரசனாக செவ்வாயின் ஆதிக்கமும், தமிழ் புத்தாண்டு பிறக்கும் கிழமை மந்திரியாக அதாவது பிலவ வருடத்திய மந்திரியாக 'புதன்' கிரகத்தின் ஆதிக்கமும் இருக்கும்.

  உலகின் ஜீவாதாரமாகவும், ஆத்மகாரகனாகவும் சூரிய தேவனே விளங்குவதால், சூரிய தேவன் மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு மாறக் கூடிய அதாவது ஜோதிட ரீதியாக, சூரியன் மேஷத்தில் உச்சம் பெறும் தினமான தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய பஞ்சாங்கமும் தொடங்குகிறது. 

   ஏனெனில், மனிதனின்  வாழ்க்கைப் பயணம், பலன்கள் எல்லாமே சூரியனின் சஞ்சாரத்தை பொறுத்தே அமைவதால், சூரிய பயணத்தை கணக்கில் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. அதிலும் மேஷ ராசியில் சூரியன் பிறக்கும் அவ்வேளையிலேயே வசந்த காலமும் பிறப்பதால், தமிழ் வருடப் பிறப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 
           யுகாதி என்பதன் பொருளும் புதிய வருடம் என்பதேயாகும். வாழ்க்கை என்பது இன்ப, துன்பம் மற்றும் இன்னபிற பல்வகை அனுபவங்களைக் கொண்டதுஎனும் வாழ்க்கைத் தத்துவத்தை குறிப்பால் உணர்த்தும் விதமாகவே புது வருட தினத்தில்   'அறுசுவை'  உணவு வகைகளைச் சமைத்து இறைவனுக்கு படைத்து நாமும் உண்டு மகிழ்ந்து கொண்டாடுகிறோம். இதில் முக்கிய இடம் பெறுவது 'வேப்பம்பூ பச்சடி'. வேப்பம்பூ பச்சடியை ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக சாப்பிடவேண்டும்.இது வஜ்ரம் போன்ற உடல், மன ஆரோக்கியத்தையும், சகல செல்வத்தையும் அளிக்கக் கூடியது என்று இதன் பெருமையை உணர்த்தும் விதமான தமிழ்ப் பழமொழி :
வேம்பு செய்வதை வேறு எவரும் செய்யார்,
 மா பழுத்தால் கிளிக்காம் வேம்பு பழுத்தால் காக்கைக்காம். வடமொழி ஸ்லோகம்:
சதாயுர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |
சர்வாரிஷ்ட விநாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம்|| 

என வேம்பின் பெருமையை பறைசாற்றுகின்றன.


No comments:

Post a Comment