Sunday 19 July 2020

ஸோமவார பிரதக்ஷிண அமாவாசை 20.7.2020

20. 7.2020 திங்கட்கிழமை அமாவாசை. இதை ஸோமவார அமாவாசை என்றும் பிரதக்ஷிண அமாவாசை என்றும் கூறுவர். திங்கட்கிழமை அமாவாசை வருவது சிவனுக்கு உகந்த விசேஷமான நாளாகும். அனேகமாக வருடத்திற்கு இருமுறை மட்டுமே திங்கட்கிழமை அன்று அமாவாசை வரும்.இச்சமயம் கோயில், குளங்களில், நதிதீரங்களில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்யவேண்டும்., பொதுவாக , அனைத்து ஆலயங்களிலும் அரசமரமும் வேப்பமரமும் பின்னிப் பிணைந்தவாறு இருக்கும்.அதனைச் சுற்றி வினாயகர், அம்மன், முக்கியமாக நாகதேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். மரங்களின் அரசன் ஆனதால் இதை "அரச மரம் " என்றே கொண்டாடுகிறோம். இந்த ஸோமவார அமாவசையன்று அதிகாலை தலைமுழுகி, பயபக்தியுடன் அரசமரத்தை பால், சந்தணம், தேன், மஞ்சள் இன்னபிற மங்கல திரவியங்களைக் கொண்டு பூஜித்தும் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து நிவேதனம் செய்து, பின் 108 முறை வலம் வருவதால் பூர்வ ஜன்ம வினைகள் தீரும் வம்ச விருத்தி அத்துடன் நாகதோஷம் நிவர்த்தியாகும். இதைத் தவிர இதில் மருத்துவ குணமும் அடங்கியிருக்கிறது. குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு இந்த அரச மரத்தை வலம் வருதல் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். எப்படி எனில், அரசமரம் பகல் நேரங்களில் அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளிவிடும். வேப்பமரம் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை சுத்தப்படுத்தித் தரும்.இதன் காரணமாகவே வலம் வருவதால் சுத்தமான காற்று நம் உள் இழுக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். அதிலும் பெண்களின் கர்ப்பப்பை விரிவடைந்து, அதில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு கர்ப்பப்பையும் பலம் பெறும். விரைவில் அவர்கள் தாய்மை அடையும் பாக்கியமும் அடைவர்.

Sunday 19 April 2020

ஸ்ரீமஹாலக்ஷ்மி சுப்ரபாதம்.

           श्रीमहालक्ष्मीसुप्रभातम् 
श्रीलक्ष्मि श्रीमहालक्ष्मि क्षीरसागरकन्यके
उत्तिष्ठ हरिसम्प्रीते भक्तानां भाग्यदायिनि ।
उत्तिष्ठोत्तिष्ठ श्रीलक्ष्मि विष्णुवक्षस्थलालये
उत्तिष्ठ करुणापूर्णे लोकानां शुभदायिनि ॥ १॥
ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீ மஹாலக்ஷ்மி க்ஷீர ஸாகர கன்யகே

உத்திஷ்ட ஹரிஸம்ப்ரீதே பக்தானாம் பாக்யதாயினி |
உத்திஷ்டோத்திஷ்ட ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவக்ஷஸ்தலாலயே
உத்திஷ்ட கருணாபூர்ணே லோகாணாம் சுபதாயினி || 1
श्रीपद्ममध्यवसिते वरपद्मनेत्रे
श्रीपद्महस्तचिरपूजितपद्मपादे ।
श्रीपद्मजातजननि शुभपद्मवक्त्रे
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २॥
ஸ்ரீ பத்மமத்ய வசிதே வரபத்ம நேத்ரே
ஸ்ரீ பத்ம ஹஸ்தசிரபூஜித பத்மபாதே |
ஸ்ரீபத்ம ஜாத ஜனனீ சுப பத்மவக்த்ரே
ஸ்ரீலக்ஷ்மி பக்தவரதே தவ சுப்ரபாதம் || 2

जाम्बूनदाभसमकान्तिविराजमाने
तेजोस्वरूपिणि सुवर्णविभूषिताङ्गि ।
सौवर्णवस्त्रपरिवेष्टितदिव्यदेहे
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ३॥

ஜாம்பூனதாப ஸம காந்தி விராஜமானே
தேஜோஸ்வரூபிணி ஸுவர்ண விபூஷிதாங்கி |
ஸௌவர்ண வஸ்த்ர பரிவேஷ்டித திவ்ய தேஹே
ஸ்ரீலக்ஷ்மி பக்தவரதே தவ சுப்ரபாதம் || 3

सर्वार्थसिद्धिदे विष्णुमनोऽनुकूले
सम्प्रार्थिताखिलजनावनदिव्यशीले ।
दारिद्र्यदुःखभयनाशिनि भक्तपाले
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ४॥
ஸர்வார்த்த ஸித்திதே விஷ்ணுமனோனுகூலே
ஸம்ப்ரார்த்திதாகில ஜனாவன திவ்ய ஸீலே |
தாரித்ரய துக்க பய நாஸினி பக்தபாலே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 4

चन्द्रानुजे कमलकोमलगर्भजाते
चन्द्रार्कवह्निनयने शुभचन्द्रवक्त्रे ।
हे चन्द्रिकासमसुशीतलमन्दहासे
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ५॥

சந்த்ரானுஜே கமல கோமல கர்ப ஜாதே
சந்த்ரார்க வஹ்னி நயனே சுபசந்த்ர வக்த்ரே |
ஹே! சந்த்ரிகா ஸமஸுஸீதல மந்த ஹாஸே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 5

श्रीआदिलक्ष्मि सकलेप्सितदानदक्षे
श्रीभाग्यलक्ष्मि शरणागत दीनपक्षे ।
ऐश्वर्यलक्ष्मि चरणार्चितभक्तरक्षिन्
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ६॥

ஸ்ரீ ஆதிலக்ஷ்மி ஸகலேப்ஸித தான தக்ஷே
ஸ்ரீ பாக்யலக்ஷ்மி சரணாகத தீன பக்சே |
ஐஸ்வர்ய லக்ஷ்மி சரணார்ச்சித பக்த ரக்ஷின்
ஸ்ரீ லக்ஷ்மி பக்தவரதே தவ சுப்ரபாதம் || 6

श्रीधैर्यलक्ष्मि निजभक्तहृदन्तरस्थे
सन्तानलक्ष्मि निजभक्तकुलप्रवृद्धे ।
श्रीज्ञानलक्ष्मि सकलागमज्ञानदात्रि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ७॥

ஸ்ரீ தைர்யலக்ஷ்மி நிஜபக்த ஹ்ருதாந்த ரஸ்தே
ஸந்தானலக்ஷ்மி நிஜ பக்த குலப்ரவ்ருத்தே |
ஸ்ரீஞானலக்ஷ்மி ஸகலாகம ஞானதாத்ரி
ஸ்ரீலக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 7

सौभाग्यदात्रि शरणं गजलक्ष्मि पाहि
दारिद्र्यध्वंसिनि नमो वरलक्ष्मि पाहि ।
सत्सौख्यदायिनि नमो धनलक्ष्मि पाहि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ८॥

சௌபாக்யதாத்ரி சரணம் கஜலக்ஷ்மி பாஹி
தாரித்ரிய த்வம்ஸினி நமோ வரலக்ஷ்மி பாஹி |
ஸத்ஸௌக்யதாயினி நமோ தனலக்ஷ்மி பாஹி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 8

श्रीराज्यलक्ष्मि नृपवेश्मगते सुहासिन्
श्रीयोगलक्ष्मि मुनिमानसपद्मवासिन् ।
श्रीधान्यलक्ष्मि सकलावनिक्षेमदात्रि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ९॥

ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி ந்ருபவேஸ்மகதே சுஹாசிந்
ஸ்ரீ யோகலக்ஷ்மி முனி மானஸ பத்ம வாஸின் |
ஸ்ரீ தான்யலக்ஷ்மி ஸகலாவனிக்ஷேம தாத்ரி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 9

श्रीपार्वती त्वमसि श्रीकरि शैवशैले
क्षीरोदधेस्त्वमसि पावनि सिन्धुकन्या ।
स्वर्गस्थले त्वमसि कोमले स्वर्गलक्ष्मी
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १०॥

ஸ்ரீபார்வதி த்வமஸி ஸ்ரீகரி சைவசைலே  
க்ஷீரோததேஸ் த்வமஸி பாவனி ஸிந்து கன்யா |
ஸ்வர்கஸ்தலே த்வமஸி கோமளே ஸ்வர்கலக்ஷ்மி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 10

गङ्गा त्वमेव जननी तुलसी त्वमेव
कृष्णप्रिया त्वमसि भाण्डिरदिव्यक्षेत्रे ।
राजगृहे त्वमसि सुन्दरि राज्यलक्ष्मी
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ ११॥

கங்கா த்வமேவ ஜனனி துளஸி த்வமேவ
க்ருஷ்ணப்ரியா த்வமஸி பாந்திரதிவ்ய க்ஷேத்ரே |
ராஜக்ருஹே த்வமஸி ஸுந்தரி ராஜ்யலக்ஷ்மி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 11

पद्मावती त्वमसि पद्मवने वरेण्ये
श्रीसुन्दरी त्वमसि श्रीशतशृङ्गक्षेत्रे ।
त्वं भूतलेऽसि शुभदायिनि मर्त्यलक्ष्मी
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १२॥
பத்மாவதி த்வமஸி பத்மவனே வரேண்யே
ஸ்ரீ சுந்தரீ த்வமஸி ஸ்ரீஷத ஸ்ருங்க க்ஷேத்ரே |
த்வம் பூதலே 'ஸி ஸுபதாயினி மர்த்ய லக்ஷ்மி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 12

चन्द्रा त्वमेव वरचन्दनकाननेषु
देवि कदम्बविपिनेऽसि कदम्बमाला ।
त्वं देवि कुन्दवनवासिनि कुन्ददन्ती
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १३॥

சந்த்ரா த்வமேவ வரசந்தர கானநேஷு
தேவி கதம்பவிபினே 'ஸி கதம்பமாலா |
த்வம் தேவி குந்தவன வாஸினி குந்ததந்தீ
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 13.

श्रीविष्णुपत्नि वरदायिनि सिद्धलक्ष्मि
सन्मार्गदर्शिनि शुभङ्करि मोक्षलक्ष्मि ।
श्रीदेवदेवि करुणागुणसारमूर्ते
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १४॥

ஸ்ரீவிஷ்ணுபத்னி வரதாயினி சித்தலக்ஷ்மி
ஸன்மார்க்க தர்ஷினி ஸுபங்கரி மோக்ஷலக்ஷ்மி |
ஸ்ரீதேவதேவி கருணாகுண ஸாரமூர்த்தே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 14.

अष्टोत्तरार्चनप्रिये सकलेष्टदात्रि
हे विश्वधात्रि सुरसेवितपादपद्मे ।
सङ्कष्टनाशिनि सुखङ्करि सुप्रसन्ने
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १५॥

அஷ்டோத்தரார்ச்சன ப்ரியே ஸகலேஷ்டதாத்ரி
ஹே! விஷ்வதாத்ரி ஸுரஸேவித பாதபத்மே |
ஸங்கஷ்ட நாஸினி ஸுகங்கரி ஸுப்ரஸன்னே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 15.

आद्यन्तरहिते वरवर्णिनि सर्वसेव्ये
सूक्ष्मातिसूक्ष्मतररूपिणि स्थूलरूपे ।
सौन्दर्यलक्ष्मि मधुसूदनमोहनाङ्गि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १६॥

ஆத்யந்த ரஹிதே வரவர்ணினி ஸர்வஸேவ்யே
ஸுக்ஷ்மாதிஸுக்ஷ்மதர ரூபிணி ஸ்தூலரூபே |
ஸௌந்தர்யலக்ஷ்மி மதுஸூதன மோஹனாங்கி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 16.

सौख्यप्रदे प्रणतमानसशोकहन्त्रि
अम्बे प्रसीद करुणासुधयाऽऽर्द्रदृष्ट्या ।
सौवर्णहारमणिनूपुरशोभिताङ्गि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १७॥

ஸௌக்யப்ரதே ப்ரணத மானஸ சோகஹந்த்ரி
அம்பே ப்ர ஸீத கருணாஸுதயா 'ர்த்ர த்ருஷ்ட்யா |
சௌவர்ண ஹார மணி நூபுர ஸோபிதாங்கி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 17.

नित्यं पठामि जननि तव नाम स्तोत्रं
नित्यं करोमि तव नामजपं विशुद्धे ।
नित्यं शृणोमि भजनं तव लोकमातः
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १८॥

நித்யம் படாமி ஜனனி தவ நாம ஸ்தோத்ரம்
நித்யம் கரோமி த வ நாம ஜபம் விஸுத்தே |
நித்யம் ஸ்ருணோமி பஜனம் தவ லோகமாத:
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 18.

माता त्वमेव जननी जनकस्त्वमेव
देवि त्वमेव मम भाग्यनिधिस्त्वमेव ।
सद्भाग्यदायिनि त्वमेव शुभप्रदात्री
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ १९॥

மாதா த்வமேவ ஜனனி ஜனகஸ் த்வமேவ
தேவி த்வமேவ மம பாக்யநிதிஸ் த்வமேவ |
சத்பாக்யதாயினி த்வமேவ ஸுபப்ரதாத்ரி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ ஸுப்ரபாதம் || 19.

वैकुण्ठधामनिलये कलिकल्मषघ्ने
नाकाधिनाथविनुते अभयप्रदात्रि ।
सद्भक्तरक्षणपरे हरिचित्तवासिन्
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २०॥

வைகுந்ததான நிலயே கலிகல்மஶக்னே
நாகாதிநாதவினுதே அபயப்ரதாத்ரி |
சத்பக்த ரக்ஷணபரே ஹரிஸித்தவாஸின்
ஸ்ரீலக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 20

निर्व्याजपूर्णकरुणारससुप्रवाहे
राकेन्दुबिम्बवदने त्रिदशाभिवन्द्ये ।
आब्रह्मकीटपरिपोषिणि दानहस्ते
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २१॥

நிர்வ்யாஜ பூர்ண கருணாரஸ ஸுப்ரவாஹே
ராகேந்துபிம்ப வதனே த்ரிதஸாபி வந்த்யே |
ஆப்ரஹ்மகீட பரிபோஷிணி தானஹஸ்தே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 21

लक्ष्मीति पद्मनिलयेति दयापरेति
भाग्यप्रदेति शरणागतवत्सलेति ।
ध्यायामि देवि परिपालय मां प्रसन्ने
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २२॥

லக்ஷ்மீதி பத்ம நிலயேதி தயாபரேதி
பாக்யப்ரதேதி சரணாகத வத்ஸலேதி |
த்யாயாமி தேவி பரிபாலய மாம் ப்ரஸன்னே
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 22

श्रीपद्मनेत्ररमणीवरे नीरजाक्षि
श्रीपद्मनाभदयिते सुरसेव्यमाने ।
श्रीपद्मयुग्मधृतनीरजहस्तयुग्मे
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २३॥

ஸ்ரீ பத்ம நேத்ர ரமணீவரே நீரஜாக்ஷி 
ஸ்ரீ பத்மநாபதயிதே ஸுரஸேவ்யமானே |
ஸ்ரீ பத்மயுக்மத்ருத நீரஜஹஸ்த யுக்மே 
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 23

इत्थं त्वदीयकरुणात्कृतसुप्रभातं
ये मानवाः प्रतिदिनं प्रपठन्ति भक्त्या ।
तेषां प्रसन्नहृदये कुरु मङ्गलानि
श्रीलक्ष्मि भक्तवरदे तव सुप्रभातम् ॥ २४॥

இத்தம் த்வதீய கருணாத்க்ருத சுப்ரபாதம் 
யே மானவாஹ் ப்ரதிதினம் ப்ரபதந்தி பக்த்யா |
தேஸாம் ப்ரஸன்ன ஹ்ருதயே குரு மங்களானி
ஸ்ரீ லக்ஷ்மி பக்த வரதே தவ சுப்ரபாதம் || 24

जलधीशसुते जलजाक्षवृते जलजोद्भवसन्नुते दिव्यमते ।
जलजान्तरनित्यनिवासरते शरणं शरणं वरलक्ष्मि नमः ॥ २ ५॥

ஜலதீஸஸுதே ஜலஜாக்ஷவ்ருதே 
ஜலஜோத்பவ ஸன்னுதே திவ்யமதே |
ஜலஜாந்தர நித்ய நிவாஸரதே 
சரணம் சரணம் வரலக்ஷ்மி நம: || 25

प्रणताखिलदेवपदाब्जयुगे भुवनाखिलपोषण श्रीविभवे ।
नवपङ्कजहारविराजगले शरणं शरणं गजलक्ष्मि नमः ॥ २ ६॥

ப்ரணதாகில தேவ பதாப்ஜயுகே
புவனாகில போஷண ஸ்ரீவிபவே |
நவபங்கஜ ஹார விராஜகலே 
சரணம் சரணம் கஜலக்ஷ்மி நம: || 26

घनभीकरकष्टविनाशकरि निजभक्तदरिद्रप्रणाशकरि ।
ऋणमोचनि पावनि सौख्यकरि शरणं शरणं धनलक्ष्मि नमः ॥ २ ७॥

கனபீகர கஷ்ட விநாஸகரி
நிஜபக்த தரித்ர ப்ரநாசகரி |
ருணமோசனி பாவனி ஸௌக்யகரி
சரணம் சரணம் தனலக்ஷ்மி நம: || 27

अतिभीकरक्षामविनाशकरि जगदेकशुभङ्करि धान्यप्रदे ।
सुखदायिनि श्रीफलदानकरि शरणं शरणं शुभलक्ष्मि नमः ॥ २ ८॥

அதிபீகரக்ஷாமவிநாசகரி 
ஜகதேக ஸுபங்கரி தான்யப்ரதே |
ஸுகதாயினி ஸ்ரீபலதானகரி
சரணம் சரணம் சு ப லக்ஷ்மி நம : || 28

सुरसङ्घशुभङ्करि ज्ञानप्रदे मुनिसङ्घप्रियङ्करि मोक्षप्रदे ।
नरसङ्घजयङ्करि भाग्यप्रदे शरणं शरणं जयलक्ष्मि नमः ॥ २९॥

ஸுரஸங்க ஸுபங்கரி ஞானப்ரதே
முனிஸங்கப்ரியங்கரி மோக்ஷப்ரதே |
நரஸங்க ஜயங்கரி பாக்யப்ரதே
சரணம் சரணம் ஜயலக்ஷ்மி நம : || 29

परिसेवितभक्तकुलोद्धरिणि परिभावितदासजनोद्धरिणि ।
मधुसूदनमोहिनि श्रीरमणि शरणं शरणं तव लक्ष्मि नमः ॥ ३०||

பரிஸேவித பக்த குலோத்தரிணி
பரிபாவித தாஸ ஜனோத்தரிணி |
மதுஸூதன மோஹிணி ஸ்ரீரமணி
சரணம் சரணம் தவ லக்ஷ்மி நம : ||30

शुभदायिनि वैभवलक्ष्मि नमो वरदायिनि श्रीहरिलक्ष्मि नमः ।
सुखदायिनि मङ्गललक्ष्मि नमो शरणं शरणं सततं शरणं ॥३१॥
ஸுபதாயினி வைபவலக்ஷ்மி நமோ 
வரதாயினி ஸ்ரீஹரி லக்ஷ்மி நம : |
ஸுகதாயிணி மங்கல லக்ஷ்மி நமோ
சரணம் சரணம் ஸததம் சரணம் || 31

वरलक्ष्मि नमो धनलक्ष्मि नमो जयलक्ष्मि नमो गजलक्ष्मि नमः ।
जय षोडशलक्ष्मि नमोऽस्तु नमो शरणं शरणं सततं शरणं॥३२॥
 
வரலக்ஷ்மி நமோ தனலக்ஷ்மி நமோ
ஜயலக்ஷ்மி நமோ கஜலக்ஷ்மி நம 
ஜய ஷோடஸ லக்ஷ்மி நமோ'ஸ்து நமோ
சரணம் சரணம் ஸததம் சரணம் || 32|

नमो आदिलक्ष्मि नमो ज्ञानलक्ष्मि नमो धान्यलक्ष्मि नमो भाग्यलक्ष्मि ।
महालक्ष्मि सन्तानलक्ष्मि प्रसीद नमस्ते नमस्ते नमो शान्तलक्ष्मि ॥ ३३॥

நமோ ஆதி லக்ஷ்மி நமோ ஞானலக்ஷ்மி
நமோ தான்யலக்ஷ்மி நமோ பாக்யலக்ஷ்மி |
மஹாலக்ஷ்மி ஸந்தானலக்ஷ்மி ப்ரஸீத
நமஸ்தே நமஸ்தே நமோ ஸாந்தலக்ஷ்மி || 33

नमो सिद्धिलक्ष्मि नमो मोक्षलक्ष्मि
नमो योगलक्ष्मि नमो भोगलक्ष्मि ।
नमो धैर्यलक्ष्मि नमो वीरलक्ष्मि
नमस्ते नमस्ते नमो शान्तलक्ष्मि ॥३४॥
நமோ ஸித்திலக்ஷ்மி நமோ மோக்ஷலக்ஷ்மி
நமோ யோகலக்ஷ்மி நமோ போகலக்ஷ்மி |
நமோ தைர்யலக்ஷ்மி நமோ வீரலக்ஷ்மி
நமஸ்தே நமஸ்தே நமோ ஸாந்தலக்ஷ்மி || 34
अज्ञानिना मया दोषान
शेषान्विहितान् रमे ।
क्षमस्व त्वं क्षमस्व त्वं
अष्टलक्ष्मि नमोऽस्तुते ॥ ३५॥
அக்ஞானினா மயா தோஷாண
ஷேஷான் விஹிதான் ரமே |
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ தவம் 
அஷ்டலக்ஷ்மி நமோஸ்துதே || 35
देवि विष्णुविलासिनि शुभकरि दीनार्तिविच्छेदिनि
सर्वैश्वर्यप्रदायिनि सुखकरि दारिद्र्यविध्वंसिनि ।
नानाभूषितभूषणाङ्गि जननि क्षीराब्धिकन्यामणि
देवि भक्तसुपोषिणि वरप्रदे लक्ष्मि सदा पाहि माम् ॥ ३६॥॥
தேவி விஷ்ணு விலாஸினி ஸுபகரி தீனார்த்திவிச்சேதினி 
ஸர்வைஸ்வர்ய ப்ரதாயினி ஸுககரி தாரித்ரியவித்வம்ஸினி |
நாநாபூஷித பூஷணாங்கி ஜனனி க்ஷீராப்தி கன்யாமணி
தேவி பக்த ஸுபோஷினி வரப்ரதே லக்ஷ்மி ஸதா பாஹி மாம் || 36 
सद्यःप्रफुल्लसरसीरुहपत्रनेत्रे
हारिद्रलेपितसुकोमलश्रीकपोले ।
पूर्णेन्दुबिम्बवदने कमलान्तरस्थे
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ३७॥
ஸத்யாஹ்ப்ரபுல்ல ஸரஸீருஹ பத்ர நேத்ரே
ஹாரித்ரலேபிடசுகோமள ஸ்ரீகபோலே |
பூர்ணேந்து பிம்பவதனே கமலாந்தரஸ்தே
லக்ஷ்மி த்வதீய சரணௌ சரணம் ப்ரபத்யே || 37
भक्तान्तरङ्गगतभावविधे नमस्ते
रक्ताम्बुजातनिलये स्वजनानुरक्ते ।
मुक्तावलीसहितभूषणभूषिताङ्गि
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ३८॥
பக்தாந்தரங்ககதபாவவிதே நமஸ்தே
ரக்தாம்புஜா த நிலயே ஸ்வஜனானுரக்தே |
முக்தாவளீ ஸகித பூஷணாபூஷிதா ~ ங் கி
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 38
क्षामादितापहारिणि नवधान्यरूपे
अज्ञानघोरतिमिरापहज्ञानरूपे ।
दारिद्र्यदुःखपरिमर्दितभाग्यरूपे
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ३९॥
க்ஷாமாதிதாபஹாரிணி நவதான்யரூபே
அக் ~ ஞான கோரதிமிராபஹக் ~ ஞானரூபே |
தாரித்ரிய து:க்க பரிமர்தித பாக்யரூபே
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 39
चम्पालताभदरहासविराजवक्त्रे
बिम्बाधरेषु कपिकाञ्चितमञ्जुवाणि ।
श्रीस्वर्णकुम्भपरिशोभितदिव्यहस्ते
लक्ष्मि त्त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४०॥
சம்பாலதாபதர ஹாஸ விராஜ வக்த்ரே
பிம்பாதரேஷூ கபி கா ~ ஞ்சிதமஞ்சுவாணி |
ஸ்ரீஸ்வர்ணாகும்பபரி ஸோபித திவ்யஹஸ்தே 
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 40
स्वर्गापवर्गपदविप्रदे सौम्यभावे
सर्वागमादिविनुते शुभलक्षणाङ्गि ।
नित्यार्चिताङ्घ्रियुगले महिमाचरित्रे
लक्ष्मि त्त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४१॥
ஸ்வர்காபவர்கபதவிப்ரதே சௌம்யபாவே
ஸர்வாகமாதி வினுதே ஸுபலக்ஷணா ~ ங்கி |
நித்யார்ச்சிதாங்கிரியுகளே மஹிமா சரித்ரே
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 41
जाज्ज्वल्यकुण्डलविराजितकर्णयुग्मे
सौवर्णकङ्कणसुशोभितहस्तपद्मे ।
मञ्जीरशिञ्जितसुकोमलपावनाङ्घ्रे
लक्ष्मि त्त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४२॥
ஜாஜ்ஜ்வல்ய குண்டல விராஜித கர்ணயுக்மே
ஸௌவர்ண கங்கண ஸுஸோபித ஹஸ்தபத்மே|
மஞ்ஜீர சிஞ்ஜித  ஸுகோமள பாவணாங்க்ரே
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 42
सर्वापराधशमनि सकलार्थदात्रि
पर्वेन्दुसोदरि सुपर्वगणाभिरक्षिन् ।
दुर्वारशोकमयभक्तगणावनेष्टे
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४३॥
ஸர்வாபராதஷமனி ஸகலார்த்ததாத்ரீ 
பர்வேந்து ஸோதரி ஸுபர்வகணாபிரக்ஷின் |
துர்வார ஸோகமய பக்தகணாவனேஷ்டே 
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 43
बीजाक्षरत्रयविराजितमन्त्रयुक्ते
आद्यन्तवर्णमयशोभितशब्दरूपे ।
ब्रह्माण्डभाण्डजननि कमलायताक्षि
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४४॥
பீஜாக்ஷரத்ரயா விராஜித மந்த்ரயுக்தே
ஆத்யந்தவர்ணமய ஸோபித ஸப்தரூபே |
ப்ரஹ்மாண்டபாண்டஜனனி கமலாயதாக்ஷி
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே || 44
श्रीदेवि बिल्वनिलये जय विश्वमातः वर  वसुदायिनि
आह्लाददात्रि धनधान्यसुखप्रदात्रि ।
श्रीवैष्णवि द्रविणरूपिणि दीर्घवेणि
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४५॥
ஸ்ரீதேவி பில்வ நிலயே ஜய விஸ்வமாத: வர வஸுதாயினி
ஆஹ்லாததாத்ரி த னதான்ய சுகப்ரதாத்ரி |
ஸ்ரீவைஷ்ணவி ட்ரவிணாரூபிணி தீர்க்கவேணி
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சர ண ம் ப்ரபத்யே || 45
आगच्छ तिष्ठ तव भक्तगणस्य गेहे
सन्तुष्टपूर्णहृदयेन सुखानि देहि ।
आरोग्यभाग्यमकलङ्कयशांसि देहि
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४ ६॥
ஆகச்ச  திஷ்ட  தவ பக்த கணஷ்ய கேஹே 
ஸந்துஷ்ட பூர்ண  ஹ்ருதயேன ஸுகானி தேஹி |
ஆரோக்ய பாக்யமகலா ~ ன்கயஷாம்ஸி தேஹி
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம் ப்ரபத்யே  || 46
श्रीआदिलक्ष्मि शरणं शरणं प्रपद्ये
श्रीअष्टलक्ष्मि शरणं शरणं प्रपद्ये ।
श्रीविष्णुपत्नि शरणं शरणं प्रपद्ये
लक्ष्मि त्वदीयचरणौ शरणं प्रपद्ये ॥ ४७॥
ஸ்ரீ ஆதிலக்ஷ்மி ஷரணம் ஷரணம் ப்ரபத்யே
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஷரணம் ஷரணம் ப்ரபத்யே |
ஸ்ரீ விஷ்ணுபத்னி ஷரணம் ஷரணம் ப்ரபத்யே 
லக்ஷ்மி த்வதீய ஷரணௌ சரணம்  ப்ரபத்யே  || 47
मङ्गलं करुणापूर्णे मङ्गलं भाग्यदायिनि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ४८॥
மங்களம்  கருணாபூர்ணே மங்களம் பாக்யதாயினி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் ||  48
अष्टकष्टहरे देवि अष्टभाग्यविवर्धिनि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥४९॥
அஷ்டகஷ்ட ஹரே தேவி அஷ்டபாக்யவிவர்திணி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 49
क्षीरोदधिसमुद्भूते विष्णुवक्षस्थलालये ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५०॥

க்ஷீரோததிஸமுத்பூதே விஷ்ணுவக்ஷஸ்தலாலயே |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 50
धनलक्ष्मि धान्यलक्ष्मि विद्यालक्ष्मि यशस्करि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५१॥
தனலக்ஷ்மி தான்யலக்ஷ்மி விதயாலக்ஷ்மி யசஸ்கரி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 51
सिद्धलक्ष्मि मोक्षलक्ष्मि जयलक्ष्मि शुभङ्करि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५२॥
சித்தலக்ஷ்மி மோக்ஷலக்ஷ்மி ஜயலக்ஷ்மி சுபங் ~ கரி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 52 
सन्तानलक्ष्मि श्रीलक्ष्मि गजलक्ष्मि हरिप्रिये ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५३॥
சந்தானலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி கஜலக்ஷ்மி ஹரிப்ரியே | 
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 53
दारिद्र्यनाशिनि देवि कोल्हापुरनिवासिनि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५४ ॥
தாரித்ரிய நாசினி தேவி கோலாபுரநிவாசினி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 54
वरलक्ष्मि धैर्यलक्ष्मि श्रीषोडशभाग्यङ्करि ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५५ ||
 வரலக்ஷ்மி தைர்யலக்ஷ்மி ஸ்ரீ ஷோடஸ பாக்ய ~ ங்கரி |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்களம் சுபமங்களம் || 55
मङ्गलं मङ्गलं नित्यं मङ्गलं जयमङ्गलं ।
मङ्गलं श्रीमहालक्ष्मि मङ्गलं शुभमङ्गलम् ॥ ५६॥
மங்களம் மங்களம் நித்யம் மங்களம் ஜயமங்களம் |
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்கம் சுபமங்களம் || 56
மங்களம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மங்கம் சுபமங்களம் || 56
इति श्रीमहालक्ष्मीसुप्रभातं सम्पूर्णम् ।

    இதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி சுப்ரபாதம் ஸம்பூர்ணம் ||




Saturday 7 March 2020

காரடையான் நோன்பு.14..3.2020

image.png


       

காரடையான் நோன்பு.14..3.2020 



   சத்தியவான் அவரது மனைவி சாவித்திரி இருவரும் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர். சாவித்ரி நித்யம் "கௌரி பூஜை" செய்து தன் கணவன் மற்றும் தன் மாமன் மாமியையும் வணங்கி, அன்போடு பணிவிடை செய்து கவனித்து  இல்லற  தர்மத்தை கடைபிடித்தாள்.
    
    ஆயினும் சத்தியவானின் ஆயுட்காலம் குறுகிய காலத்திலேயே முடிவுற்றதால், எமதர்ம ராஜன் அவன் உயிரைக் கவர்ந்து சென்றார்.

 மஹாபதிவ்ரதையானதால் சாவித்ரியின் கண்களுக்கு எமராஜன் தென்படவும், நடக்கும் நிகழ்வினை புரிந்து கொண்டு, எமதர்மனிடன் தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்கும்படி, எமராஜனை பின் தொடர்ந்து சென்றாள். 
  
தன்னை பின் தொடர்ந்து ஒரு பெண் வருவதை அறிந்து, எமராஜன் திரும்பிப் பார்க்கவும், உடனே அவர் கால்களில் பணிந்து வணங்கினாள். எமதர்மனும் '"தீர்க்க சுமங்கலி பவ" என வாழ்த்தினார். 

என் கணவரின் ஆயுட்காலம் முடிவுற்றதால் அவர் உயிரை பறித்துவிட்டு, என்னை தீர்க்க சுமங்கலியாக வாழ்த்தும் தங்கள் வாக்கு பொய்க்கலாமா? என வாதிட்டு, தன் ஆயுட்காலத்தில் பாதியை தன் கணவருக்கு அளிக்கும்படி வேண்டி, தன் கணவரை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டு வந்தாள்.

                   {இதன் காரணமாகவே,  பெரியவர்களைக் கண்டதும் நாம் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கவேண்டும். அவர்களின் ஆசி மொழி நம் தீவினை எல்லாவற்றிற்கும் அருமருந்தாகும்.}

இதையே பங்குனி மாதப் பிறப்பன்று "காரடையான் நோன்பு" என திருமணமான பெண்கள், ஒருக்காலும் என் கணவர் எனைப் பிரியாது இருக்கவேண்டும் எனவும், கன்னிப் பெண்கள்  சத்தியவானைப் போல் நல்ல குணவான் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்றும் மஞ்சள் சரடினை கட்டிக் கொண்டு நோன்பு இருப்பர். 

சனிக்கிழமை மார்ச் 14 2020 அன்று பங்குனி முதல் நாள் காலை 10.45 முதல் 12 மணிக்குள் 
நோன்பு நூற்க வேண்டும்.   

காமதகனம் மற்றும் ஹோலி பண்டிகை.9.3.2020 திங்கட்கிழமை

image.png


   
















 நாளைய தினம் மார்ச் 9 ம்தேதி திங்கட்கிழமையன்று காமதகனம் மற்றும் ஹோலி பண்டிகை.
    காதல் தெய்வமாக கருதப்படும் காமதேவன் எனும் மன்மதன் மஹாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மியின் மகன் ஆவார். இவரது மனைவி ரதி தேவி இவரது வாஹனம் 'கிளி'. இவரது நண்பனாக விளங்குபவர் வசந்த காலத்தின் அதிபதியான 'வசந்தன் ஆவார். இவரது ஆயுதம் கரும்பு வில்லும், வெண்தாமரை, அசோக மலர், மல்லிகை, மாம்பூ மற்றும் நீலத் தாமரை என்ற ஐந்து வகையான மலர் அம்புகளையும் தாங்கியிருப்பார்.

    உலக வாழ்வியலுக்கான தேவனாக விளங்கிய இவர், ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவனையும் பார்வதி தேவியையும் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்காக இந்திரனால் பணிக்கப்பட்டார். அப்பொறுப்பை சிரமேற்கொண்டு, சிவ யோகிக்கு பணிவிடை செய்ய பார்வதி வந்த சமயம் இவர் சிவன் மேல் மலரம்பை விட, முதலில் தடுமாறிய சிவபெருமான் பின் கோபங்கொண்டு காம தேவனை தன் நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டார்.
image.png
 சாம்பலாகிப் போன தன் கணவனைக் கண்டுகதறிய ரதிக்காக மனமிறங்கி, அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படியும் மற்றவர்கள் உணரும் வகையில் உருவமின்றி அருவமாக இருப்பான் எனவும் கூறினார்.
   அத்துடன் மஹாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில், அவருக்கும் ருக்மினிக்கும் மகனாக "பிரத்யும்னன்" என்ற பெயருடன் இழந்த தன் தேகத்தை திரும்பப் பெறுவான் எனவும் சாப விமோசனம் அளித்தார்.

image.png

இப்படி சிவனால் எரிக்கப்பட்டு அருவமாக உயிர் பெற்றதையே "ஹோலி பண்டிகையாக" கொண்டாடுகின்றனர்.


Sunday 1 March 2020

ஸ்ரீகச்சியப்பர் சிவாச்சாரியார் ஆராதனை. 3.3.2020 மாசி மாதம் 20 செவ்வாயன்று






              ஸ்ரீகச்சியப்பர் சிவாச்சாரியார் ஆராதனை.



4 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சி மாநகரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. அதன் பின் சோழ மன்னர்களால் கைபப்பற்றப்பட்டு "ஜெயங்கொண்ட சோழமண்டலம்" என்ற பெயருடன் திகழ்ந்தது. 
சோழர்களின் காலமே தமிழ் இலக்கிய வரலாற்றின் சிறந்த காலப் பகுதியாய் திகழ்ந்துள்ளது. 

  
மஹாபாரதம் இயற்றிய  "வேத வியாசரால்"  சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட 18 புராணங்களில் "ஸ்காந்தம்" சிறப்பு வாய்ந்தது.

வியாசர் இயற்றியதில் 17 புராணங்கள் சேர்த்து  மூன்று லக்ஷம் கிரந்த எண்களைக் கொண்டது. ஆனால் ஸ்காந்தம் மட்டும் ஒரு லக்ஷம் கிரந்த எண்கள் கொண்டதாக உள்ளது.  இந்த திருமுருகன் புகழ் பாடும் 'ஸ்காந்தம்' தமிழில் முருகனின் அருளால் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பட்டது. கந்தபுராணத்தில் கூறப்படாத விஷயங்களே இல்லை என்ற சொலவடை உண்டு 
       பதினொறாம் நூற்றாண்டில் காஞ்சி ஸ்ரீகுமரக்கோட்ட முருகனுக்கு பூசாரியாக இருந்த காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு அந்த முருகன் அருளால் பிறந்த அருட்குழந்தை தான் இந்த "கச்சியப்ப சிவாச்சாரியார்".  
       சிறுவயதிலேயே வேதாந்தம், ஜோதிடம், சமஸ்கிருதம், தமிழ் என பன்முகத் திறமையுடன் விளங்கிய கச்சியப்பர், தந்தைக்கு ஓய்வளித்து கந்தனுக்கு திருத் தொண்டு செய்யும் பணியை தாமே ஏற்றார். ஒரு திருநாள் அன்று திருப் பணி முடிந்து முருகனை கண்ணார தரிசித்தவாறே கோயிலிலிலேயே கண்ணயர்ந்து விட்டார். அப்பொழுது, முருகப் பெருமான் அவர்தம் கனவில் தோன்றி, வடமொழியில் உள்ள ஸ்காந்தத்தை தமிழில் "கந்த புராணம்" என பெயரிட்டு இயற்றுமாறு கட்டளையிட்டு, "திகடச் சக்கரம்" என முதல் அடியையும் இறைவனே கூறியருளினார்.image.png


     இவ்வளவு பெரிய சமுத்திரம் போன்ற பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த முருகனின் அருள் திறத்தை வியந்தும், பணிவோடும், தினமும் நூறு பாடல்களாக இயற்றி, இரவில் அர்த்தஜாம பூஜை முடித்து, முருகன் சன்னதியில் வைத்துவிட்டு அடுத்த நாள் அதிகாலையில் சன்னதி திறந்து ஓலைச்சுவடியை எடுத்து பார்த்தால் அதில் உள்ள பிழைகள் திருத்தி எழுதப்பட்டிருக்குமாம்!.
         இப்படியாக 141 படலமாக 10,345 பாடல்களாக உருவான கந்தபுராணம் அரங்கேற்ற வேண்டிய நாளும் வந்தது. அனைத்து புலவர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. கச்சியப்பரின் இந்த நூலைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த பெரும் ஞானிகள், கவிஞர்களோடு பாமரர்களும் ஆவலுடன் கந்தக்கோட்டத்தில் பெருந் திரளாய் குவிந்தனர்.    
 
கந்தபுராண ஓலைச்சுவடியை முறைப்படி பூஜித்து, கடவுள் வாழ்த்து பாயிரமான இறைவன் எடுத்துக் கொடுத்த "திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்" எனத் தொடங்கும் கணபதி துதியைப் பாடி விளக்கம் கூறினார் கச்சியப்பர். 

image.png

       அப்பொழுது அக்கூட்டத்தில் ஒரு வயோதிகப் புலவர், அவர் கருத்தை மறுத்து, திகடச் சக்கர என்ற சொல்லை திகழ் தசக்கர என்று  பதம் பிரித்தது இலக்கணப் பிழை. தொல்காப்பியத்தில் கூட இவ்விதி இல்லை. ஆரம்பமே பிழையாக உள்ளது என்றார். 
   இறைவனே கொடுத்த அடியில் பிழை இருக்க வய்ப்புள்ளதா?  என மனம் கலங்கினார் கச்சியப்பர். 

உடன் அப்பெரியவரே தொடர்ந்து முருகன் உரைத்த மொழியாதலால் அவரே இதற்க்கும் விளக்கம் கொடுப்பார். அதனால் பிழையோடு மேற்கொண்டு தொடர வேண்டாம். நாளை கூடுவோம் என்றார்

 அவ்வாறே, அடுத்த நாள், திரு நீறும், ருத்திராக்ஷமும்  தாங்கி ஒளி  பொருந்திய வசீகரத்தோடும், கம்பீரத்தோடும் ஒரு புலவர் அவையில் தோன்றி, "வீரசோழியம்" என்ற இலக்கண நூலில் இதற்கான இலக்கண விதி இருக்கிறது என்று அந்த ஓலைச் சுவடியையும் கொடுத்து கோடிட்டுக் காட்டி மறைந்தார். புலவனாக இறை தரிசனம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்று, அனைவரும் கச்சியப்பரைக் கொண்டாடினர்.இனிதாக அரங்கேற்றம் முடிந்து, கச்சியப்பரை ஓலைச்சுவடிகளோடு மக்கள் பல்லக்கில் ஏற்றி மேள தாளத்துடன்  ஊர்வலமாக வந்தனர். 

அன்னாரது, ஆராதனை மார்ச் மாதம் 3 ஆம் தேதி மாசி மாதம் 20 செவ்வாயன்று நடக்க இருக்கிறது.  


Monday 24 February 2020

சந்திர தரிசனம் 25.02.2020




                                     சந்திர தரிசனம்.
                                  

                                        25.2.2020 செவ்வாயன்று சந்திர தரிசனம்.
                           
image.png

                         
    
  இந்து, பௌத்தம்,சமணம், இஸ்லாம் மற்றும் கிறித்தவம் என அனைத்து மதத்தினருமே இந்த மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றனர். எதனால் தெரியுமா? 

அழகினால் கர்வம் கொண்டு  சாபம் பெற்ற சந்திரன் ,பின் சிவபெருமானின் அருளால் தேய்ந்து வளரும் வரம் பெற்றதுடன் மூன்றாம் பிறையாக இறைவனின் ஜடாமகுடத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றவன் அல்லவா?. அதனால் அமாவாசையை அடுத்து வரும் இந்த மூன்றாம் பிறையை தெய்வீகப் பிறை என்றே கூறலாம்.

     அமாவாசைக்கு அடுத்த நாள் சந்திரன் வானில் தெரியாது. அதற்கு அடுத்த இரண்டாம் நாளான த்விதியை திதியில் மெல்லிய வெள்ளிக் கம்பி போல் அதுவும் சில மணித் துளிகளே காட்சி தரும். .இதை அவ்வளவு எளிதாக பார்த்து விடவும் முடியாது. 
                                இது வெறும் சாதாரண சந்திர தரிசனம் அல்ல. 

சந்திர மௌலீஸ்வரராய் காட்சி தரும் சாட்சாத் எம்பெருமான் சிவபிரானின்  ஜடாமுடி தரிசனம் ஆகும்.


image.png

அதனால் திவிதியை திதி அன்று விரதம் இருந்து அன்று மாலை 6.30 மணியளவில் மெல்லிய கீற்றாக பிரகாசமாகத் தோன்றும் நிலவினை தரிசிக்க, நம் மனக்குறைகள் நீங்கி, பேரானந்தமும் மன நிறைவும் உண்டாகும். அதோடு, சந்திர தேவன் மஹாலக்ஷ்மியுடன் பாற்கடலில் அவதரித்தவர் ஆதலால், தேவியை 'சந்த்ர சகோதரி' என அழைப்பர். அதனால் சந்திர விரத வழிபாட்டினால் மஹாலக்ஷ்மியின் அருளையும் நாம் பெறலாம்.

image.png
     இப்படி எண்பது வயது நிறைந்தவர்களுக்கு ஆயிரம் பிறை கண்டவர்கள் என  "சதாபிஷேகம்" செய்து கொண்டாடுகிறோம் அல்லவா?.சந்திரனை ஒவ்வொரு மாதமும் இந்த மூன்றாம் பிறையை தரிசிப்பதனால் நம் முன்வினை பாவங்களும் அகலும்  என ஜோதிடமும் இதை வலியுறுத்துகிறது.





            சந்திரனை "மனோகாரகன்" என்பர். நம் மனோ திடத்தையும், புத்தி பலத்தையும் , நீண்ட ஆயுளையும் அருள்பவர் சந்திரன்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். 'மதி' என்ற சொல் சந்திரன் மற்றும் அறிவு என இரு பொருளையும் குறிக்கும் அல்லவா?.

ஜாதகத்தில் சிலருக்கு அவர்கள் ஜனன லக்னப்படி எந்தவொரு நல்ல பலனும் இருக்காது. அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் லக்னத்தை விடுத்து சந்திரனை லக்னமாகக் கொண்டு ஜாதக பலன் கணித்துக் கூறவேண்டும் என்பது ஜோதிட விதி. . 

  பொதுவாக, யாராவது முட்டாள்தனமான காரியத்தைச் செய்தால், மதி கெட்டவனே என திட்டுவார்கள் அல்லவா? 
அதனால் ஒருவரின் புத்தி கூர்மைக்கும் சந்திரனின் அருள் வேண்டும் என்பது இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் சூரிய சந்திரனை இறைவனின் இரு கண்களாக ஞானிகள் கூறுவர். இடது கண் சந்திரனைக் குறிக்கும்  அதனால் இந்த சந்திர தரிசனம் எப்பேர்ப்பட்ட கண் நோயையும் நாளடைவில் குணப்படுத்தும் என்பது உறுதி. 

Wednesday 29 January 2020

த்ரைலோக்ய கௌரி விரதம், 19.1.2020. தை அமாவாசை 24.1.2020.


                                   த்ரைலோக்ய கௌரி விரதம்
       


 த்ரைலோக்ய கௌரி என்றால் மூவுலகிலும் பேரழகி என்று பொருள். தேவி உலக நலன் கருதி எடுத்த, பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக கருதப்படுபவள் மஹாகௌரி. நம் உடலின் "ஸ்வாதிஷ்டான சக்கரத்தின்" அதிபதியாகத் திகழ்பவள். பக்தர்கள் விரும்பிய வரத்தை விரைந்து அளிக்கக் கூடியவள். 

சிவபெருமானின் மனைவியாக விளங்கிய 'சதிதேவி' தன் தந்தை தக்ஷனால் அவமானப்பட்டு, அவன் வளர்த்த யாக குண்டத்திலேயே தன் உயிரை நீத்தாள். தன் மனைவியின் பிரிவிற்கு பின் சிவபெருமான் இமயமலையில் ஆழ் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சதிதேவி, இமயவானான பர்வத ராஜனின் மகளாக 'பார்வதி தேவி" எனும் பெயருடன் அவதரித்தாள். நாரதரின் அறிவுரைப்படி, தவம் புரிந்து கொண்டிருக்கும் சிவபிரானுக்கு பணிவிடை செய்தாள்.

           அச்சமயம், இந்திரனின் கட்டளைப்படி, மன்மதன் பார்வதியின் பால் சிவனுக்கு அன்பு உண்டாக வேண்டும் என்பதற்காக, தன் அம்பினை விட, அதன் பின் சிவபிரான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்.

                    இந்நிகழ்ச்சிக்குப் பின், திரும்பவும் தன் கணவனான சிவபெருமானை அடையும் எண்ணத்துடன் . பருவ நிலை மாற்றங்களான வெப்பம், மழை, குளிர், பெரும் புயல் மற்றும் வறட்சி என இவை எதையும் பற்றி கவலைப்படாமல்,  பார்வதிதேவி கடுந்தவம் மேற்கொண்டாள். பூமியின் இத்தகைய பருவ மாற்றங்களால் அன்னையின் திருமேனி கருத்த நிறமாக மாறியிருந்தது. அன்னையின் மன உறுதியை பலவாறு சோதித்து பின் இறைவன், அன்னையை திருமணம் செய்து கொண்டார். 

     அதன்பின், பிறிது வந்த நாளில், ஈசன் அன்னையின் கரிய நிறத்தை கேலியாக பேசி சீண்டி விளையாடினார். அதனால், அன்னை கோபங்கொண்டு, தான் இழந்த த பழைய நிறத்தை திரும்ப அடையவேண்டி, பிரம்மதேவனை பிரார்த்தித்தாள். அவளது பிரார்த்தனையில் மனம் இறங்கிய, பிரம்மன் "மானசரோவர் ஏரியில்" முங்கி எழும்படி கூறியருளினார். 

 [மான என்றால் மனம். சரோவர் என்றால் ஏரி. பிரம்மனின் மனதில் அதாவது அவர் மானசீகமாக உருவாக்கியதால், இப்பெயர் காரணம். ]

image.png

அதன்படி, மானசரோவரில் குளித்து எழவும் அன்னையின் மேல் படிந்திருந்த 'கருமை நிறம் தண்ணீரில் கரைந்து, மிகுந்த ஒளி பொருந்திய 'வெண்மை நிறத்தவளாக அவளது ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தூய்மையான வெண்மை நிறமாக அமையப் பெற்றாள். 

image.png

இதனால் தூய்மையான வெண்மை நிறத்தவள் என்ற பொருளில் 'மஹாகௌரி' என அழைக்கப்பட்டாள். இவள் தீயவர்களை தண்டிக்கும் அதே சமயம், நல்லவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் பாதுகாக்கிறாள். தன் பக்தர்களுக்கு மரணபயம், மறுபிறவி குறித்த பயத்தையும் போக்கி, ஆன்மிக ஞானத்தை வழங்குபவளும் இவளே. 

    ஜனவரி 19 ஆந்தேதி ஞாயிற்றுகிழமை 2020 "த்ரைலோக்ய கௌரி விரதம்". இந்த நாளில் அன்னையை நினைத்து புஜித்து விரதம் இருந்து வழிபட, பிறவியற்ற மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.       
                 
                          "தை" அமாவாசை


      ஜனவரி 24 2020 வெள்ளிக்கிழமையன்று,  விசேஷமான "தை அமாவாசை" தினமாகும்,

image.png

  ஆடி அமாவாசையில் பிதுரு லோகத்திலிருந்து, யமதர்ம ராஜனின் அனுமதியுடன் பூவுலகில் வாழும், தன் தலைமுறையினரைக் காண வந்த நம் முன்னோர்கள், தை அமாவாசையன்று  தங்கள் லோகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள். அதனால் அன்று நாம் அவர்களுக்கு 'திதி' கொடுத்து அவர்களின் ஆசியைப் பெற்று அவர்களை, வழியனுப்புவதாக ஐதீகம்.



Sunday 5 January 2020

நகரத்தார் பிள்ளையார் நோன்பு








நகரத்தார் பிள்ளையார் நோன்பு



 ஆவாரம் பூவும், அரிசி மாவு பிள்ளையாரும்.
         

    நகரத்தார்களின் முக்கியமான நோன்பு பிள்ளையார் நோன்பு. நகரத்தார் வாணிபத்தின் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்வர். ஒருமுறை நகரத்தார்கள் ஒன்றுகூடி, காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத்திருநாளன்று,  கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு, கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடையமுடியாமல் சிக்கித் தவித்தனர்.




 தாங்கள் வணங்கும் தங்களின் குலதெய்வமான மரகத பிள்ளையாரை நினைத்து தங்களை காக்கும் படி வேண்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு நாட்களையும் கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளிலிருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர். 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர்.




      அன்று சஷ்டி திதி சதய நக்ஷத்திரம் கூடிய சுபதினம்.தங்கள் உணவிற்க்காக பயணத்தின் போது கொண்டு வந்த அரிசி மாவு, வெல்லம், நெய் முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையாரில் வைத்து ஏற்றினர்.அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தனர். 

                                பின் பிள்ளையார் அருளால் அவர்கள் மீண்டு பத்திரமாக காவிரிபூம்பட்டினத்தை அடைந்து தங்கள் சமூகத்தினரிடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். 

   தங்கள் மக்களில் பெரும்பாலானோரை காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளிலிருந்து 21 நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அரிசி மாவு பிள்ளையார் செய்து பத்தம் புது வேஷ்டியில் இருந்து 21 நூல்களை எடுத்து திரியாக்கி, மாவுப் பிள்ளையாரில் வைத்து விளக்கேற்றி, ஆவாரம் பூவைக் கொண்டு பூஜித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர்.பின் அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வர் .





         ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு, இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க, மற்றவர்கள் இறைவனை வேண்டி அந்த 
மாவிளக்னை பெற்று மகிழ்வுடன் உண்பர். வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தினாலோ ஆண்கள் வீட்டில் இல்லையென்றாலும், ஒரு வயது ஆண்குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்றுக் கொள்வர். 

     கற்பகத்தான் அருளால் அனைவரின் வாழ்விலும் மங்கலங்கள் பெருகட்டும்.

    தகவல் உபயம் : முகப்பேர் டைம்ஸ் ஆசிரியர்
   
 


உயர்திரு. அண்ணாமலை அவர்கள்..
                             நன்றி சார்.
                                                         🙏🙏🙏🙏🙏🙏🙏