Sunday 5 January 2020

நகரத்தார் பிள்ளையார் நோன்பு








நகரத்தார் பிள்ளையார் நோன்பு



 ஆவாரம் பூவும், அரிசி மாவு பிள்ளையாரும்.
         

    நகரத்தார்களின் முக்கியமான நோன்பு பிள்ளையார் நோன்பு. நகரத்தார் வாணிபத்தின் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்வர். ஒருமுறை நகரத்தார்கள் ஒன்றுகூடி, காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத்திருநாளன்று,  கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு, கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடையமுடியாமல் சிக்கித் தவித்தனர்.




 தாங்கள் வணங்கும் தங்களின் குலதெய்வமான மரகத பிள்ளையாரை நினைத்து தங்களை காக்கும் படி வேண்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு நாட்களையும் கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளிலிருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர். 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர்.




      அன்று சஷ்டி திதி சதய நக்ஷத்திரம் கூடிய சுபதினம்.தங்கள் உணவிற்க்காக பயணத்தின் போது கொண்டு வந்த அரிசி மாவு, வெல்லம், நெய் முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையாரில் வைத்து ஏற்றினர்.அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தனர். 

                                பின் பிள்ளையார் அருளால் அவர்கள் மீண்டு பத்திரமாக காவிரிபூம்பட்டினத்தை அடைந்து தங்கள் சமூகத்தினரிடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். 

   தங்கள் மக்களில் பெரும்பாலானோரை காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளிலிருந்து 21 நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அரிசி மாவு பிள்ளையார் செய்து பத்தம் புது வேஷ்டியில் இருந்து 21 நூல்களை எடுத்து திரியாக்கி, மாவுப் பிள்ளையாரில் வைத்து விளக்கேற்றி, ஆவாரம் பூவைக் கொண்டு பூஜித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர்.பின் அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வர் .





         ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு, இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க, மற்றவர்கள் இறைவனை வேண்டி அந்த 
மாவிளக்னை பெற்று மகிழ்வுடன் உண்பர். வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தினாலோ ஆண்கள் வீட்டில் இல்லையென்றாலும், ஒரு வயது ஆண்குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்றுக் கொள்வர். 

     கற்பகத்தான் அருளால் அனைவரின் வாழ்விலும் மங்கலங்கள் பெருகட்டும்.

    தகவல் உபயம் : முகப்பேர் டைம்ஸ் ஆசிரியர்
   
 


உயர்திரு. அண்ணாமலை அவர்கள்..
                             நன்றி சார்.
                                                         🙏🙏🙏🙏🙏🙏🙏                              




6 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    ஆஹா எத்தனை எத்தனை புண்ணிய நாட்கள் !
    காற்று படகின் திசை மாற்றியதால் கஷ்டப்பட்ட காவேரி பூம்பட்டின வணிகர்கள் பொருப்பாக பக்தியுடன் 21 நாட்களும் வேஷ்டி நூல் சேகரித்து வெல்லம், நெய் மற்றும் அரிசி மாவில் செய்த மாவு பிள்ளையாரில் 21 நூல் திரி ஏற்றி ஆவாரம்பூவால் பூஜித்து வழிபட்டது சிறப்பு.
    அதனால் துயர் களைந்து பிள்ளையார் அருளால் மீண்டும் காவேரி பூம்பட்டினத்தை அடைந்ததும் சிறப்பு.

    நாளை நகரத்தாரின் பிள்ளையார் நோன்பு பற்றி பதிவு செய்தமைக்கு தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி (9.12.21)

    - V. Sugavanam

    ReplyDelete
  2. தங்களின் ஊக்கம் மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தங்களின் ஊக்கம் மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி

    ReplyDelete
  4. Vijaya
    Good information vasanthima
    Always stay blessed.
    Happy day

    ReplyDelete
  5. நகரத்தார் வழிபாடு போற்ற தகுந்தது.. நாடு போற்றும் நல்ல விஷயம்.. வரலாற்று பதிவு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. Nagarsyhar pilliyar Nonbu kadai super. Engalukku teriyadha pala Nalla kadaihslai solhireerhal. Mihavum nandri. Pallandu noinodiindri needuzhi vazhla anfha iraivanai prarthikiren.

    G. Meenalochani

    ReplyDelete