Monday 27 November 2023

சுபமுகூர்த்தம்

 பொதுவாக நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் நல்ல நேரம் பார்த்து, அந்த வேலையைச் செய்ய விரும்புவோம் அல்லவா? அப்படிப்பட்ட அந்த நேரத்தை முஹுர்த்த நேரம் என்பர். 



வேதத்தில் இதற்கான விளக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.  


      பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை 'அஹோராத்ரம்' என்கிறது வேதம். ஒரு நாளில் காலை 6 மணி தொடங்கி 24 மணி நேரத்தை 30 சம பாகங்களாகப் பிரித்து 30 வகையான முஹூர்த்த காலங்களாகக் கணக்கிடப்படுகிறது


 இரண்டு நாழிகைக் காலம் [48 நிமிடங்கள்] ஒரு முஹூர்த்தம் ஆகும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். அந்த வகையில் காலை 6 மணி முதல் 6:48 மணிவரையிலான காலம் 'ருத்ர முகூர்த்தம் எனப்படும். இப்படியாக அடுத்தடுத்த 48 நிமிடங்களாகக் கணக்கிட்டு முறையே, ஆஹி,மித்ர, பித்ரு, வசு இன்னபிற முகூர்த்தங்களோடு 29 வது முகூர்த்தமாக அதிகாலை 4:24 முதல் 5:12 மணி வரை 'பிரம்ம முகூர்த்தம்' அடுத்து கடைசி  முகூர்த்தமாக 5: 12 முதல் 6 மணி வரை 'சமுத்ரம் முகூர்த்தம்' என 30 முகூர்த்தக் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன



சூரியன் உதயமாகும் காலம்  உச்சிக் காலம் மற்றும் சூரியன் மறையும் அந்திப் பொழுது என இக்காலங்கள் திதி, நக்ஷத்திரம் , கிழமை என எந்த தோஷங்களும் இல்லாத புண்ணிய முகூர்த்த காலஙளாக போற்றப்படுகிறது. 


சூரியன் உச்சிப் பொழுதை அடையும் நேரமான 11.45 முதல் 12:15 வரையிலான காலம் 'அபிஜித் முகூர்த்த காலம்" எனப்படுகிறது. ஏனெனில் சூரியம் உச்சமடைந்து பிரகாசிக்கும் பொழுது நமது காரியங்களும் வெற்றியடைந்து நம் வாழ்வும் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.



மைத்ர முகூர்த்த காலத்தில் நம் கடன்களை அடைக்க முற்பட்டால், அப்போதைய கடன் ப்ரச்னை சுமுகமாவதோடு எந்தவிதமான கடன் பிரச்னையும் இனி நேராமலும் காக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த காலமே சிவனும் விஷ்ணுவும் இணைந்த கோலமான சரபேஸ்வரரை நினைத்து வழிபடுவது  கடன் தொல்லையிலிருந்து நிரந்தரத் தீர்வு பெறுதற்குரிய நலமானது என ஜோதிடமும் வலியுறுத்துகிறது.  


 இதில் 26 ஆவது ஜீவ அம்ருத முஹூர்த்தமும், 29 ஆவது பிரும்ம முகூர்த்தமும் இறைவழிபாட்டிற்க்கும்  திருமணம் போன்ற சுப நிகழ்விற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் அனைத்து விதமான காரியங்களுக்கும் சிறப்பிக்கப்படுகிறது. 


இந்த பிரம்ம முகூர்த்தத்தில் சரஸ்வதி தேவியும் தம் நாதனான பிரம்மனை துதித்து வழிபடுவதாகவும் அதனால் நாம் அந்த சமயம் செய்யும் இறை வழிபாட்டில் பலவித நன்மைகள் வாழ்வில் மலரும் என்பதும் உண்மை.


 அத்துடன் சிவபிரான் பிரம்ம தேவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி புது உலகை படைக்க உததரவிட,  அவ்வண்ணமே சிவபிரானை அந்த  நேரத்தில் துதித்து வணங்கி தன் படைத்தல் தொழிலை துவங்கினார். அதன் காரணமாக அவர் பெயராலேயே அந்த புண்ய காலம் 'பிரம்ம முகூர்த்தம் ' காலம் என அழைக்கப்படலாயிற்று.






No comments:

Post a Comment