Saturday 28 January 2023

பீஷ்மாஷ்டமி 29.1.2023 ஞாயிற்றுக்கிழமை.

 






ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 29 ந்தேதி "பீஷ்மாஷ்டமி". 

கங்கையின் மகனாகப் பிற்ந்து 'தேவவிரதனாக' கங்கா மாதாவால் வளர்க்கப்பட்டவர். இவர், அஷ்ட வஸுக்களில் ஒருவராவார். இந்த எண்மரும் தங்களின் தவறினால், பூவுலகில் பிறக்கும் சாபத்திற்கு ஆளானார்கள். தங்களின் சாபவிமோசனத்திற்கு உதவுமாறு, கங்கா மாதாவை அனுகினர். அன்னையும் மனமிரங்கி, நான் பூவுலகில் 'சந்தனு மஹாராஜாவை" மணம் முடிப்பேன். அப்பொழுது நீங்கள் எட்டு பேரும் எனக்கு மகனாகப் பிறக்க, உங்களின் ஆயுள் சீக்கிரம் நிவர்த்தி ஆகும்படி செய்கிறேன். அதன்மூலம், உங்கள் சாபம் உடனடியாகத் தீரும் என்று கூறியருளினாள்.



 அவ்வண்ணமே, சந்தனு ராஜாவும், கங்கையின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்ய வேண்டவும்,  கங்காதேவி, 'எனது முக்கிய பணியில் நீங்கள் இடையூறு விளைவித்தால் அக்கணமே தங்களை விட்டு விலகி விடுவேன்' என்ற நிபந்தனையுடன் மணந்து கொண்டாள்.
    அதன்படியே, தனக்குப் பிறந்த [அஷ்ட வஸுக்கள்] குழந்தைகளை ஆற்றில் வீசி, அதற்கு சாபவிமோசனம் அளித்தாள். 



கங்கையின் செயலால், அதிர்ந்தாலும், தன் வாக்குறுதி காரணமாக மௌனமானார் மன்னன்.





கடைசியாக, எட்டாவது குழந்தையையும் கங்காதேவி ஆற்றில் எறியத் துணிய, மனம் பொறுக்காதவனாய் 'என் வாரிசாக இவன் ஒருவனையாவது விட்டு வை' என மன்னன் தடுத்தான்.

உடன், கங்கையும் தங்கள் நிபந்தனையின் பேரில் உங்களை விட்டுப் பிரிகிறேன். ஆயினும்   இவனை   நல்ல முறையில் வளர்த்து, தக்க சமயத்தில், உங்களிடம் ஒப்படைப்பேன் என்றாள். அப்படியே, 'தேவவிரதன்' என பெயர் சூட்டி, ஆய கலைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்து, ஒரு திறமையான வாலிபனாக மன்னனிடம் ஒப்படைத்தாள்.


உயர்ந்த பண்புகள் கொண்ட தேவவிரதன், தன் தந்தை, விரும்பும் மீனவப்பெண்ணை மணப்பதற்கு தானும், தனது இல்லற வாழ்க்கையும், அதன் மூலம் ஏற்படும் சந்ததிகள், அதனால் உருவாகும் வாரிசு பிரச்னை என இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தான் வாழ் நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் பிரம்மசரிய விரதத்துடனும், அதே சமயம் இந்த 'குரு வம்சத்தை' காக்கும் பாதுகாவலனாக இருப்பேன் என சபதம் பூண்டார். அதனால் கடும் சபதம் மேற்கொண்டவன் எனும் பொருளில், அவரது இயற்பெயர் மறைந்து,  "பீஷ்மர்" என்ற சிறப்புப் பெயரே நீங்காப் புகழாக நிலை பெற்றது.




இவரது இந்த சபதம் காரணமாக அவர் தந்தை சந்தனு மன்னன், 'பீஷ்மர் தன் இறுதிக் காலத்தை தானே தீர்மானிக்கும் படியான வரத்தை அருளினார்.



அப்படி அம்புப் படுக்கையில், இருந்த பீஷ்மர், தை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியை தேர்ந்தெடுத்து, முக்தியடைந்தார். அதனால், இத்தினம் பீஷ்மரின் பெயரால் "பீஷ்மாஷ்டமி"  எனப்படுகிரது. இந்த நாளில் பீஷ்ம பிதாமகரை நினைத்து, தர்ப்பணம் செய்தல் நலம்.

1 comment:

  1. பீஷ்மரின் முந்தைய சரித்திரத்தை தங்கள் மூலம் அறிந்தோம்.
    அவருடைய பீஷ்மர் என்ற காரணப் பெயரையும் அறிந்தோம் .
    இதற்கு முன் தங்கள் மூலம் இன்று ரத சப்தமி என்றும் இப்பொழுது நாளை பீஷ்மாஷ்டமி என்றும் அறிந்து கொண்டோம்.
    பல விஷயங்களை தங்கள் மூலம் அவ்வப்போது அறிந்து கொள்கிறோம்
    மிக்க நன்றி

    இப்படிக்கு
    V. சுகவனம்

    ReplyDelete