Friday 3 January 2020

வாமன ஜயந்தி, ஓணம் பண்டிகை

          

              வாமன ஜயந்தி, ஓணம் பண்டிகை



செப்டம்பர் 10 ஆம் தேதி 2019 செவ்வாயன்று "வாமன ஜயந்தி".. பிரகலாதனின் கொள்ளுப்பேரனான "மகாபலி" இப்பூவுலகம் முழுவதையும் வென்று சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அத்துடன் நில்லாது அகில உலகையும் தன் குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற வேட்கையுடன் அசுர குலகுருவான சுக்ராச்சாரியாரின் துணையுடன், "அஸ்வமேத யாகம்"  ஒன்றை நடத்தினார். யாகத்தின் முடிவில் அந்தணர்களுக்கு தானம் கொடுக்கவேண்டியது நியதி.;  
  பலியினது எண்ணத்தை முறியடிப்பதற்காகவே மஹாவிஷ்ணு எடுத்த ஐந்தாவது அவதாரம் 'வாமன அவதாரம்". குள்ள உருவமும் கையில் கமண்டலம் மற்றும் குடையும் தாங்கியவராய் பலி மஹாராஜாவின் அழைப்பை ஏற்று யாசகம் பெறுவதற்காக யாகபூமிக்கு வந்தார் வாமனர். 
Related image           தனக்கு மூன்றடி நிலம் கொடுத்தால் போதுமானது என்று வாமனர் கூறினார். அவரது தேஜஸ் பொருந்திய தோற்றம் இவையெல்லாம் குலகுருவான சுக்கிராச்சாரியாருக்கு, சந்தேகம் எழவே, அவர் யாராக இருக்கும் என தன் ஞான த்ருஷ்டியின் மூலம், கண்டறிந்து மாபலியிடம் வந்திருப்பது சாக்ஷாத் 'மஹாவிஷ்ணுவே' என கூறி தானம் கொடுப்பதைத்  தடுக்க முயன்றார். விவரம் அறிந்த மன்னன், வாக்கு கொடுத்ததை திரும்பப் பெற இயலாது எனக் கூறி, தானம் கொடுக்கவேண்டி கமண்டல நீரை வார்க்க முற்பட்டான். இதனால் சுக்கிராச்சாரியார், வண்டு உருவெடுத்து, கமண்டலத்தின் வாயில் நுழைந்து நீர்வெளியேற முடியாதபடி தடுத்தார். நடப்பனவற்றை எல்லாம் நன்கறிந்த வாமனார், புன்முறுவலுடன், மன்னனிடம் தர்ப்பைப் புல்லை எடுத்து கமண்டலத்தின் வாயில் குத்தி விடும்படி பணித்தார். அவ்வண்ணமே மாபலியும் செய்ய, தர்ப்பைப் புல்லால் சுக்கிராச்சாரியார், தன் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது. அதன்பின் மாபலி நீர் வார்த்து வாமனருக்கு மூன்றடி நிலம் தானமாக அளித்தார். 

    உடன் குள்ள உருவமான, வாமனர், நெடு நெடுவென்று வானுயர விஸ்வரூபமாய் வளர்ந்து, பூமியில் ஒரு காலும், ஆகாயத்தில் மற்றொரு காலும் வைத்து மூன்றாவது அடி எங்கு வைப்பது? என மன்னனை வினவினார்.   
      பகவானின் விஸ்வரூப தரிசனம் கண்ட மன்னன், தன் பிறப்பு புனிதமடைந்ததாக மனம் உருகி, இறைவனை பிரார்த்தித்து, மூன்றாவது அடியைத் தன் தலையில் வைத்து ஆட்கொள்ளும்படி கர்வம் நீங்கியவனாய், பணிந்து தொழுதார். எம்பெருமானும், பிரகலாதனுக்கு நரசிம்ம அவதாரத்தின் போது அவனது ஐந்து தலைமுறையினரை கொல்வதில்லை என வாக்கு கொடுத்ததைக் கருத்தில் கொண்டு, மாபலியை 'பாதாள உலகில்' வசிக்கும் படி அவர் தம் தலையில் கால் பதித்தார். 

image.png            அசுரனாயினும், மக்களால் விரும்பப்பட்ட தலைசிறந்த நல்லாட்சி புரிந்த மன்ன்னாக திகழ்ந்தார். ஆதலால் மாபலி எம்பெருமானிடம், தன் மக்களை வருடம் ஒருமுறை கண்டு செல்வதற்க்கு அனுமதி அளிக்கும் படி வரம் வேண்டினார். 
         அப்படியாக ஆவணி மாதம் 'திருவோண நக்ஷத்திரத்தன்று' தன் மக்களைக் காண்பதற்காக மாபலி சக்கரவர்த்தி வருவதாக ஐதீகம். அந்த நாளையே கேரள மக்கள் தங்களின் மன்னனை பூரண கும்பம் மற்றும் யானை பரிவாரங்களோடு வரவேற்கும் பொருட்டு உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையே "ஓணம் பண்டிகையாகும்". 

                      செப்டம்பர் 11 .2019 புதன்கிழமை "ஓணம் பண்டிகை" .


image.png

No comments:

Post a Comment