Friday 3 January 2020

ஹரிதாளிகா கௌரி விரதம், வினாயகர் சதுர்த்தி, ஸாமவேத உபாகர்மா மற்றும் ரிஷிபஞ்சமி

ஹரிதாளிகா கௌரி விரதம், வினாயகர் சதுர்த்தி, ஸாமவேத உபாகர்மா மற்றும்  ரிஷிபஞ்சமி 


          செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 


image.png   சக்தி தேவியான பார்வதியை துதித்து வழிபடக்கூடிய விரதமான ஹரதாளிகா கௌரி விரதம் ஆகும். இந்த விரதம் வினாயகர் சதுர்த்திக்கு முன்தினம் ஆவணி மாதம் வளர்பிறை மூன்றாம் நாள் திருதியை திதியில் கடைபிடிக்கப்படும். இந்த நாளில் பார்வதி தன் தாய் வீட்டிற்கு செல்ல அடுத்த நாள் வினாயகர் தன் தாயை அழைத்துக் கொண்டு கைலாயம் செல்வதாகவும் ஐதீகம்.  

     பர்வத ராஜனின் வேண்டுகோளுக்கிணங்கி அன்னை அவருக்கு மகளாக அவதரிக்க, அதன் பின், பார்வதிதேவி, சிவபிரானை திருமணம் செய்யும் பொருட்டு 16 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாள். அதனால், இந்த விரதம் கடைபிடிப்பவர்கள், கலசம் வைத்து வழிபட்ட பின்,16 முடிச்சு கொண்ட மஞ்சள் தடவிய மங்கலக்  கயிற்றை கட்டிக் கொள்வர். இளம் பெண்கள் திருமண சிறக்கவேண்டி இவ்விரதமிருப்பர். 
                                  வினாயகர் சதுர்த்தி
                                             image.png           செப். 2 திங்களன்று சுக்ல பக்ஷ மஹிமை பொருந்திய "வினாயகர் சதுர்த்தி". உலகின் முதல் குளோனிங்க் குழந்தை வினாயகர் தான். பார்வதிதேவி த்ன் திருமேனியிலிருந்து வழித்து எடுத்த மஞ்சள் இன்னபிற திரவியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவர் வினாயகர் பெருமான். ஒரு தும்பைப்பூ அல்லது அருகம் புல்லை வைத்து எளிமையாக வழிபட்டாலும் போதும் உடன் நம் விக்னங்களை களையக்கூடியவர். 'ஓம்கார' வடிவமாக விளங்கும் பிரணவ நாதனின் களிமண்ணாலான திருமேனியை  பூஜித்தபின், பஞ்சபூதங்களின் தத்துவ விளக்கமான " கொழுக்கட்டையை" நிவேதனம் செய்து,  பின் நீரில் வினாயகரை கரைத்து விடுவர். 
                  ஸாமவேத உபாகர்மா 

        இந்த செப். 2 ஆம் தேதி ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் தான் "ஸாம வேதஉபாகர்மா" நடைபெறும். புது பூணூலை அணிந்தபின் ஸாமவேதம் இசைப்பர். ஆம்! இசைப்பர். எனில், மற்ற வேதங்களை ஓதுவர். இசையே ஸாம வேதத்திலிருந்து தான் பிறந்தது. 
                          ரிஷிபஞ்சமி 

image.png

   அடுத்த் செப். 3 செவ்வாயன்று 'ரிஷி பஞ்சமி'. சப்த ரிஷிகளான காஷ்யப, அத்ரி, பரத்வாஜ, கௌதம, வஸிஷ்ட,விஸ்வாமித்ர மற்றும் ஜமதக்னி எனும் 7 ரிஷிகளை பூஜிப்பர். இதையே கேரள மக்கள் "விஸ்வகர்மா பூஜை" செய்து வழிபடுவர். வட நாட்டவர் இன்றைய தினத்தில் '' ரக்ஷா பந்தன்" என தன் சகோதரர்களின் நலம் விரும்பி கொண்டாடுவர்.

No comments:

Post a Comment