Thursday 2 January 2020

எங்கள் அன்னை.

                                  எங்கள் அன்னை


திருமதி. ஜயம் ரமணன் .


அன்பு என்ற வார்த்தைக்கு 

 அகராதியில் உன் பெயரைக் கண்டேன். 

                   தாய் எட்டடி என்றால்

          குட்டி பதினாறடி என்பர் - ஆனால்

             உன்னில் பாதியைக் கூட 

                என்னால் எட்டிப் பிடிக்க

           இயலவில்லை அம்மா - உன் 

         அன்பு எனும் கரும்புச் சாற்றில் 

            தேனில் ஊறிய வண்டாய்த்

                 திளைத்த நினைவுகள் 

    மனக்கண் முன்னே நிழலாடுகிறதம்மா.

             தவமிருந்து பெற்றோம்

        பிள்ளையை என்பர்-ஆனால்

      நாங்கள்  தவமிருந்து உன்னைப் 

          பெற்றோம் அன்னையாய்.

      பத்தரை மாற்றுத் தங்கமம்மா - நீ  
              
               இன்று நீ உதித்த

           இந்த இனிய நாளில் 

          உன் உதிரத்தில் உதித்த 

      எங்களின் இதய அஞ்சலியை

                சமர்ப்பிக்கின்றோம்.

                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏      

                                   [3.1.1939]                         

                                                                                                                  இப்படிக்கு,



                                                                                      தங்களின் அன்புச் செல்வங்கள்

                                                                         


   மணி, மீனா, சுகவனம் மற்றும் வசந்தி

                               

அம்மா சக்கரை பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். அனைவரும் சாப்பிடுங்கள் இப்படிக்கு,
அன்புள்ள அம்மா,
                     .....


எனது You tube  friend மற்றும் ரசிகை எனக்கு அளித்த surprise message. 
       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மிக்க நன்றி தோழி. நெகிழ்ச்சியாக இருக்கிறது.
                        
                        

15 comments:

  1. உங்கள் தாய்க்கு என் வணக்கம்

    ReplyDelete
  2. நன்றி சார். மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. Jaya mami...yes..sirritha முகம் வெகுளி குணம் ..என்னகு ரொம்ப பிடிக்கும்..மாமி தெய்வமாக இருந்து nammaku நல்லது செய்வார்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நன்றி அக்கா.🙏🙏🙏🙏🙏

      Delete
  4. She will your guiding light Vasanthi

    ReplyDelete
  5. ஆஹா ! அருமை !
    அம்மா பிறந்த நாளில் அம்மாவின் மேன்மையை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.

    சூப்பர்

    - VS

    ReplyDelete
  6. உங்கள் வார்த்தைகள் எனக்கு மன அமைதியும் கூடவே மகிழ்வையும் அளிக்கிறது.நூற்றுக்கு நூறு உண்மை.நன்றி.🙏🙏🙏🙏

    ReplyDelete
  7. திருமதி வசந்தி பாலு மேடம்
    இக்கவிதை மூலம் தங்களது தாயைப் பற்றி மேன்மையான கருத்துக்களை கவிதை வடிவில் அழகாக சொன்னீர்கள்.
    அதற்கு தாயாரும் அழகாக பதில் அளித்து தங்களை வாழ்த்தி சிறப்பித்தது பார்க்க மகிழ்ச்சி.

    மிக்க நன்றி

    - Vs

    ReplyDelete
  8. தாய் வடிவில் தாய்க்குத் தாயாய் அன்புத் தோழி வாழ்த்தியுள்ளார்.🙏🙏🙏

    ReplyDelete
  9. Mother is the first teacher
    Teacher is the second mother.

    God cannot be presented everywhere
    That's why he created mother.

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு உண்மை. அற்புதமான வரிகள்.🙏🙏🙏🙏 நன்றி.

      Delete
  10. The above comment about Mother was by Vijaya from Krishnagiri District T.N.

    ReplyDelete
  11. அம்மாவுக்கு ஈடு இணை ஏது
    அருமை வசந்தி

    ReplyDelete
  12. ஆஹா ! அம்மாவின் மேன்மையை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் ,!

    மனம் நெகிழ்ந்து விட்டது.

    - V. Sugavanam

    ReplyDelete
  13. Very true Vasanthi sister. Well explained about Mother, who is equivalent to Almighty. My Pranams to Mother.

    ReplyDelete