Thursday 2 January 2020

vaikunda ekathasi

                                      வைகுந்த ஏகாதசி 6.1.2020 திங்கட்கிழமை.

                       ஏகாதசி மற்றும் வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை

  மூவுலகையும் ஆட்டிப் படைத்த முரன் என்னும் அரக்கனை அடக்குவதற்காக அவனுடன் கடுமையாகப் போரிட்டார் எம்பெருமான் மஹாவிஷ்ணு.  பல ஆண்டுகள் நீடித்த இப்போரினை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய எம்பெருமான் . அவன் திருந்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்க எண்ணினார், 'பத்ரிகாஸ்ரம' குகையில் உறங்குவது போல் நடித்தார். இதுவே சரியான தருணமாக எண்ணிய முராசுரன், அவரை கொல்வதற்காக 'வாளை' ஓங்கினான். அச்சமயம் எம்பெருமானின் உடலிலிருந்து அழகிய பெண்ணுரு போர்க்கோலத்துடன் தோன்றியது.



    பெண் தானே!.  இவளை ஒரே அம்பிலேயே வீழ்த்தி விடலாம் என்று அலட்சியமாக எண்ணிய அசுரனைப் பார்த்து, அப்பெண்சக்தி 'ஓம்' கார ஒலி எழுப்பி கர்ஜித்த நிமிடத்திலேயே முரன் எரிந்து சாம்பலானான். 

 அதன்பின், ஏதும் அறியாதவர் போல், கண் விழித்து எழுந்த மஹாவிஷ்ணு நடந்ததை அறிந்து, அப்பெண் சக்தியை பாராட்டி, நீ தோன்றிய இத்தினத்திலேயே உனக்கு 'ஏகாதசி" என்ற பெயர் சூட்டுவதோடு, இந்த நாளில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, நல்ல செல்வ வளத்தையும், இறுதியில் வைகுண்ட பதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.    Image result for ekadasi image
        அது முதற் கொண்டு பக்தர்களும் ஒவ்வொரு மாத ஏகாதசியன்றும் இவ்விரதத்தை  கடைபிடிக்க ஆரம்பித்தனர். ஆயினும், எல்லோராலும் அனைத்து ஏகாதசியிலும் விரதம் கடைபிடிக்க இயலவில்லையென்றாலும், இந்த வைகுண்ட ஏகாதசியன்று விரதம், கடைபிடிப்பவர்களுக்கு, இந்த அனைத்து பலன்களையும் அளிப்பதாக கூறியருளினார். 

    மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்  மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி" ஆகும். 


இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றிய, இந்த வைகுண்ட ஏகாதசியினைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை.   

    மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்  மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி" ஆகும். Image result for vaikunta ekadasi images

   ஒருமுறை மஹாவிஷ்ணூ ஊழிக்காலம் முடிந்து ஆழ்ந்த 'யோக நித்திரையில்' இருந்த பொழுது, அவர்தம் காதுகளிலிருந்து மது, கைடப என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள், விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் அமர்ந்திருந்த பிரம்மனிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்தனர்.  உடன் பிரம்மா விஷ்ணுவைத் துயில் எழச் செய்து முறையிட, விஷ்ணுவும் 'ஹயக்ரீவராக மாறி அவர்களிடமிருந்த வேதத்தை கைபற்றினார். 

ஆயினும் கருணை கொண்டு அவர்கள் வேண்டும் வரம் அளிப்பதாகக் கூறினார். 
அதற்கு அவர்கள், தாங்கள் வேண்டுமானால் அவருக்கு வரம் அளிப்பதாக கூறினர்.         
   உடன் மஹாவிஷ்ணுவும் , அவர்கள் தன் கையாலேயே வதம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அசுரர்களும் கொடுத்த வாக்கை காப்பாற்ற , அவருடன் போரிட்டனர். மது , கைடபர்களுடன் மஹாவிஷ்ணு போரிட்டு இறுதியில் சக்கராயுதத்தை அவர்கள் மீது ஏவ, அவர்கள் இருவரது உடலும் கைகள், கால்கள், தலை என தனித்தனியாக ப்ல கூறுகளாக ஆனதோடு தகடுகளாக  பூமியில் விழுந்தன. 
இதைக் கண்ட ப்ரம்மா இதனால் பூவுலகிற்கு கேடு என சிந்தித்து, மஹாமாயையை பிரார்த்தித்து அழைத்தார்.தேவியும்  அவர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து அவ்விடத்தில் தோன்றி போரிட்டாள், மதுஅரக்கனை மஹாவிஷ்ணு வதம் செய்ததனால், அவர் "மதுசூதனன்" எனவும், கைடபனை தேவி வதம் செய்ததால் தேவி "கைடபி" எனவும் பெயர் பெற்றனர்.கடைசியில், அவர்களை வீழ்த்திய போது, மஹாவிஷ்ணுவின் மஹிமையை அறிந்த அசுரர்கள், பகவானிடம் மோக்ஷம் வேண்டி நித்தியம் அவர் காலடியிலேயே இருக்கும் வரத்தைப்பெற்றனர். 
   எம்பெருமானும் கருணையுடன் மார்கழி வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தின் வடக்கு வாயிலை திறந்து அது வழியாக மதுகைடபர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார். Image result for vaikunta ekadasi images
     அந்த பேரின்பத்தை  உண்ர்ந்த அசுரர்கள், தங்களைப் போன்றே பக்தர்களுக்கும், கோயிலில் விக்கிரகமாக எம்பெருமான் சிலையை வடக்கு வாயில் வழியாக எழுந்தருளும் போது தரிசிப்பவர்களுக்கும் அவர் மோக்ஷத்தை அளிக்கவேண்டும் என பிரார்த்தித்தனர்.

 ஏகாதசி என்றால் பதினொன்று அல்லவா?. நம் ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஒன்று என இந்த பதினொன்றும் இறைவனிடத்தில் ஒன்றுபட்டு பரிபூரண வழிபாட்டில் இருக்கவேண்டும் என்பதே இதன் ஆழ்ந்த பொருள்.

No comments:

Post a Comment