Friday 3 January 2020

ஹரிவாஸரம்

                             ஹரிவாஸரம் 

        திங்கட்கிழமை ஆகஸ்ட் 26 ஆம்தேதி 2019  ஏகாதசி திதி. இந்த திதியில் பெருமாளுக்காக வேண்டிக்கொண்டு அன்ன, ஆகாரமின்றி வெறும் துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி உபவாஸம் இருந்து அடுத்த நாள் துவாதசி திதியன்று விரதத்தை முடிப்பார்கள். இது அனைவரும் அறிந்ததே. 

     "ஹரிவாஸரம்" என்று சில நாழிகைத் துளிகள் இந்த விரதத்தில் மிக விசேஷமான காலம். அதாவது ஏகாதசி திதியின் கடைசி கால் பகுதியும், துவாதசி திதியின் முதல் கால் பகுதியுமான நேரம் "ஹரிவாஸரம்" என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துளசி தீர்த்தத்தைக் கூட பருகாமல் உபவாஸ் விரதம் இருப்பார்கள். ஆகஸ்ட் 27 ஆம் தேதி செவ்வாயன்று சூரிய உதயம் தொடங்கி கிட்டத்தட்ட 2 மணி நேர கால அளவு ஹரிவாஸர காலமாகும். 
                                                                                                                                                                           
                                   image.png

No comments:

Post a Comment