Saturday 25 September 2021

நேரில் வந்த பிதுருக்கள்



 நம் அன்பிற்க்கு உரியவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு நீத்தாலும் நம் மனதை விட்டு என்றும் அவர்களின் நினைவுகள் அகலுவதில்லை. பலவித வேலைப்பளு, பிரச்னைக்கிடையிலும்,   திரும்பவும் அவர்களை சந்திக்க முடிந்தால், எனக்கு ஆயிரம் யானை பலம் கிடைத்தது போல் இருக்கும் என நம் மனம் ஏங்கும் அல்லவா?.

         உண்மையில் திரேதாயுக காலம் வரை நாம் திதி கொடுக்கும் தினத்தில் பிதுருக்கள் எனப்படும் நம் மூதாதையர்கள் நேரில் வந்து நாம் அளிக்கும் உணவினை, வயிறார உண்டு நம்மையும் வாழ்த்திச் சென்றனர். அதிசயமாக இருக்கிறதல்லவா?!
பின், இந்த நிலை எப்படி மாறியது? எதற்காக எள்ளையும் தர்ப்பையையும் கொண்டு திதி கொடுக்கிறோம்? இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா?
      திரேதா யுக  காலத்தில் வாழ்ந்த சாட்சாத் 
           ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே தான்.
  ஸ்ரீராமர் வனவாச காலத்தில், காட்டில் தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டதும், மனம் வருந்திய நிலையிலும் தலைப்பிள்ளை தான் தந்தைக்குக் காரியம் கர்மா செய்ய வேண்டும்  என்பதால், அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.
            தசரதருக்கு கர்மா செய்ய ஆரம்பிக்கும் சமயம், அவர்களை துதித்து மந்திரம் சொல்லி, அதாவது, இந்த வம்சா வழியில் வந்த, எனது தந்தையான தாங்கள் இங்கே எழுந்தருளி, யாம் அளிக்கும் விருந்தினை உண்டு எங்களை வாழ்த்தவேண்டும் எனும் விதமாகக் கூறி அழைக்கும்சமயம், அவர்கள் நேரில் வந்து அருள் புரிவர்.
       இவ்விதமாக, ஸ்ரீராமர் அழைத்தும், தசரதர் வரவேயில்லை. நேரம் கடந்து கொண்டே சென்றது. தந்தை இறந்த துக்கம், அவரது கடைசி காலத்தில் அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்யாத குற்ற உணர்வு  இயலாமை என பலவித குழப்பங்கள் அவரது மனதைக் குடைய ஸ்ரீராமரது  பொறுமையும் அவரை விட்டு சிறிது சிறிதாக நீங்கியது.
image.png
   இதற்கான காரணத்தை குலகுருவிடமே கேட்டு விடலாம் என கிளம்பலானார். அப்போது, தசரதர் சற்றுப் பொறு.! ராமா..! நில்! நான் வந்துவிட்டேன் என்று அழைத்து உன் கர்மாவினால் நான் மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு எனது ஆசிகள்  என்றார்.
image.png
    தந்தையே ஏன் தாங்கள் நான் கர்மா செய்ய ஆரம்பித்த உடனேயே வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? என வருத்தத்துடன் வினவினார்.
  உன் தம்பி பரதன், நதியின் அக்கரையில், உனக்கு முன்பாகவே முதலில் என்னை அழைத்து கர்மா செய்து என்னை அழைத்ததினால், நான் முதலில் அங்கு சென்றுவிட்டு, பிறகு இங்கு வந்தேன். அதுவே தாமதம் ஆயிற்று! என்றார்.
     துக்கம், இயலாமை, ஆற்றாமை என இவைகள் மனதில் குடி கொண்டு வாட்டிக் கொண்டிருந்த நிலையில், தந்தையின் இத்தகைய பதிலால், ஒரு வினாடி கோபம் கொண்டு, மனம் பொறுக்காமல், 
இனி, எந்த மூதாதையர்களும் தங்கள் சந்ததிகள் திதி செய்து அழைக்கும் போது அவர்கள் கண்களுக்கு புலப்படக்கூடாது என ஆவேசமாக உரைத்தார்.
    ஆயினும், உடன் சுதாரித்து அவசரத்தில் தன் வார்த்தைகளின்  விபரீதம் உணராமல் கோபித்ததற்கு தன் தந்தை தசரதரிடம் மன்னிப்பு வேண்டினார். பின் இதனை சரி செய்வதற்கு ஏதேனும் வழிவகை உண்டா? என எமதர்மர் மற்றும் சனி பகவானை வேண்டினார். அவர்களும் அங்கு தோன்றி, ஸ்ரீ ராமரே இவ்வாறு உரைத்தபின், அதற்கு மாற்று கிடையாது என்றனர்.


image.png
    ஆயினும், எமதர்மர் சிறிது யோசனை செய்து, சந்ததிகள் அளிக்கும் அவர்களுக்கான உணவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை சனி பகவானை ஏற்கும்படி ஆணையிட்டார்.
     சனி பகவானோ உயிர்களின் பாவ, புண்ணிய பலன்களை சரி பார்ப்பத்ற்கே  தனக்கு நேரம் சரியாக இருக்கிறதென்றும்,  தர்ப்பைப்புல்லில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வழிபடலாம்   எனது வாகனமான காக்கை, சந்ததிகள் இடும் எள்ளும் நீரும் கலந்த உணவை உண்பதன் மூலம் மூதாதையர்களின் வயிற்றுப் பசியை போக்கும் எனவும் கூறி   எமராஜனின் அனுமதியும் பெற்றார்.
image.png
ஆம், தர்ப்பை தூய்மையான இடத்தில் மட்டுமே அதுவும், தானே தோன்றி வளரும் எந்தவொரு பதியம் போன்ற முறையில் எல்லாம் வளராது. வாடவோ அழுகவோ செய்யாது. அத்துடன் தர்ப்பையின் இரு முனைகளிலும், பிரம்மனும் சிவனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்.
ஆத்மகாரகன் - சூரியன். (அதாவது உயிர் எனும் ஆத்மாவின் அதிபதி)
ஜீவகாரகன் - குரு பகவான். (உடலின் அதிபதி).
இரத்தமும், சதையுமான மஜ்ஜை, எலும்பு போன்ற கட்டுமான காரகனாக அதிபதியாக - சனி பகவான் திகழ்கிறார்.

 நாம் ஆன்மாவை அழைத்து ஆவாஹனம் செய்யும் பொழுது, சூரிய ஒளிக் கற்றைகளின் மூலம் பித்ருக்களின் ஆத்மா தர்ப்பையில் வந்து அமர்கிறது. குருமுகமாக மந்திரம் சொல்லும் வேதியர் உதவியோடு, சனிபகவானுக்கு உகந்த தானியமான எள்ளும  கொண்டு தர்ப்பணம் செய்கின்றனர். எமனின் தூதுவனாக காகம் வந்து, அன்னத்தை உண்கிறது. 
அதுமுதல் காகம் அந்த உணவைச் சாப்பிட்ட பின்னரே நாம் உணவருந்தும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. 
அத்துடன் பித்ருக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குபவர் 'மஹாவிஷ்ணுவே'. மஹாவிஷ்ணுவின் வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய தானியம் 'எள்' என வேதம் கூறுகிறது. அதனாலேயே எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 


அது தவிர, வாசனை மலர்களைக்   காட்டிலும்   மகா விஷ்ணுவிற்கு உகந்த துளசி மாலையை முன்னோர்களின் படத்திற்கு அணிவிப்பதால், பித்ருக்களுக்கு மஹாவிஷ்ணுவின் ஆசியும் கிட்டும்.  
எள்ளும் தர்ப்பையும் நம் வாழ்வின் பாதுகாப்பு அம்சமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தபட்டது என்றால் அது மிகையாகாது!

Tuesday 21 September 2021

கணபதி பாடல்கள்




                    விநாயகர் பாடல்கள்

                               பாடல் 1

பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே 
அரசமரத்தின் நிழலிலே 
வீற்றிருக்கும் பிள்ளையார் 
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு 
அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் 
தீர்த்து வைக்கும் பிள்ளையார் 
                                                    ( பிள்ளையார்)
அவல் பொரி கடலையும் 
அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கஷ்டங்களைப் போக்குவார்.
                                                     ( பிள்ளையார்)
வேலனுக்கு அண்ணனாம் 
வேள்விக்கெல்லாம் முதல்வனாம் 
வேண்டும் வரம் யாவுமே
தந்தருளும் பிள்ளையார். 
                                                       ( பிள்ளையார்)
மஞ்சளிலே செய்யினும் 
மண்ணினாலே செய்யினும்       
ஐந்தெழுத்து மந்திரத்தை 
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார். 
ஓம் நமசிவாய எனும்               
ஐந்தெழுத்து மந்திரத்தை       
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார். 
                                                       ( பிள்ளையார்).
கலியுகத்து விந்தையை
காணவேண்டி  அனுதினம் 
எலியின் மீது ஏறியே 
இஷ்டம் போல சுற்றுவார்.
                                                          ( பிள்ளையார்)
                               
                  -----------×--------



        
                      பாடல்  - 2

ராகம் : நாட்டை                தாளம்: ஆதி.

                       பல்லவி 

ஞானவிநாயகனே சரணம் - நல்லவனே

மற்றெல்லாம் வல்லவனே வருக ஸ்ரீ (-)

                      அனுபல்லவி

வானமளவிய ஓர் விசித்திரம் கண்டேன் 

மன்னவனே மெய் பரமானந்தம் கொண்டேன் 

                                 சரணம்

ஓம் எனும் ப்ரணவ உண்மை உட்பொருளே 

ஓதும் கம்பீரநாட்டை பாடவும் அருளே - சாமி

சரவண செந்தமிழ் எனக்கருளே  - நல்

சமரசம் பொங்கும் ஜகமதில் எங்கும் 

புகழுடன் விளங்கும் கலைகளும் வளர - ஸ்ரீ (-)







                            பாடல் - 3

ராகம் : திலங்              தாளம் : ஆதி

                          பல்லவி

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே.

                      அனுபல்லவி 

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் 

சன்னதி சரணடைந்தோமே

சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும் 

தந்தருள் சற்குரு நீயே ( - )

                          சரணம் - 1

ஆதிமூல கணநாத கஜானன

அற்புத தவள ஸ்வரூபா

தேவ தேவ ஜய விஜய  விநாயக 

சின்மய பரசிவ தீபா (  - )

                        சரணம் - 2

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார்- உள்ளே

தேடி கண்டு கொள்ளலாமே 

கோடி கோடி மத யானைகள் பணி செய்ய 

குன்றென விளங்கும் பெம்மானே - குண

குன்றென விளங்கும் பெம்மானே  ( - )

                        சரணம்  - 3

ஞான வைராக்ய விசார சார ஸ்வர 

ராக லய நடன பாதா

நாம பஜன குண கீர்த்தன நவவித 

நாயக ஜய ஜகந்நாதா ( - )

                சரணம் - 4

பார்வதி பாலா அபார வாரவர

பரம பகவ  பத தரணா 



பக்த ஜன ஸுமுக பிரணவ விநாயக 

பாவன பரிமள சரணா.  ( - )



                     ------×--------


                                பாடல்   - 4

பொம்ம பொம்மதா தைய தையனக்கு 

தின்னாக்கு னக்குதின் பஜன்கரே 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 

உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட 
தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
 திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
 உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா 
அவருவாசுவே கரம்பாஜிதி அநேக நாம்சதுர் கணராஜா
 தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
 பொம்ம பொம்மதா தைய தையனக்கு 
தின்னாக்கு னக்குதின் பஜன்கரே 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா
 வேணுவாஸரே அம்ருத குண்டலகீ 
தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
 வேணுவாஸரே அம்ருத குண்டலகீ
 தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
 நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
 நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
 திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட 
தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா 
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா 
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா 
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா 
பொம்ம பொம்மதா தைய தையனக்கு 
தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
 உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா 
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் 
தை தை கணபதி நாம் ஸதா.
          





Saturday 18 September 2021

மஹாளய பக்ஷம் முன்னோர்கள் வழிபாடு.

  பெருந்திரளாக கூட்டமாக பிதுருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் தன் சந்ததியினருக்கு ஆசி வழங்குவதற்கென்றே, யமதர்ம ராஜனிடம் அனுமதி பெற்று, நம்மை நாடி வரும் தினமான "மஹாளய பக்ஷம்" 21.9.2021 செவ்வாயன்று ஆரம்பம் ஆகிறது. 

புரட்டாசி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை திதி முதல் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களும் 'மஹாளய பட்சம்' எனப்படுகிறது. 

   இந்த பக்ஷமான பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்வது, மிகச் சிறந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது என்றாலும், அப்படிச் செய்ய இயலவிட்டாலும், தங்கள் தந்தையின் முக்கிய திதி தினத்திலாவது கட்டாயம் 'தர்ப்பணம்' செய்யவேண்டும்  என்பது நியதி. 
     இது நமக்கும் நம் முன்னோர்களுக்குமான பரஸ்பர உபகாரம் என்று கூடச் சொல்லலாம். ஆம்! நாம் தர்ப்பணம் கொடுப்பது அவர்களது ஆசியைப் பெறுவது மட்டுமில்லாமல்,  அவர்களுக்கான உணவு மற்றும் அவர்களின் முக்திக்கும்    வழி வகுக்கும்.
image.png
 முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்க  ராமாயணக்    கதையே சாட்சியாக உள்ளது.
      ராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ராமரின் பிரிவால் தசரதரின் உயிரிழப்பு. இது அனைவரும் அறிந்ததே!. 
 வனவாசம் காரணத்தால், ராமரால், தன் தந்தைக்குச் செய்யவேண்டிய ஈம காரியங்கள் செய்ய இயலாமல் போனது. இதனால் தசரதனுக்கும் மோக்ஷம் தடைபட்டது.
      இந்த நிலையில், சீதை ராவணனால் கவரப்பட்ட போது, சீதைக்கு நேர்ந்தது என்ன? உயிருடன் இருக்கிறாளா இல்லையா? அவளை எங்கு  தேடுவது?  என்று சீதையைப் பற்றிய எந்தவொரு  தகவலும் ராமரால் அறிய இயலவில்லை. அப்பொழுது  'ஜடாயு' எனும் கழுகு அரசனின் மூலமாகவே, நடந்ததை அறிந்து கொள்கிறார்.
   இந்த ஜடாயு என்பவர் ஸ்ரீராமரின் தந்தை தசரதனின் ஆருயிர்த் தோழர். நன்பனின் மகன் தனக்கும் மகனாவான் என்றும்,தன் மருமகளான  சீதையை   ராவணனிடமிருந்து  காப்பாற்ற, ராவணனுடன் போரிட்டு, அவனால் இறகுகள் வெட்டப்பட்டு, குற்றுயிரும், குறையுயிருமாக  ராமர் வரும் வரை தன் உயிரை கையில் பிடித்தவாறு சீதையைப் பற்றிய தகவல்களை அளித்து ராமரது மடியிலேயே உயிரைத் துறந்தார் ஜடாயு .
       இதனால், ராமபிரானும், அவரைத் தன் தந்தையாகவே பாவித்து அவருக்கு, ஈமச் சடங்குகளைச்   செய்து, அவருக்கு முக்தியும் அளித்தார். 
image.png
ராமர் தன்னை கடவுளாக காட்டிக் கொள்ளாமல் மனிதன் என்றே வாழ்ந்து காட்டினார். அப்படியிருக்க! அவரால் எப்படி ஜடாயுவிற்கு மோக்ஷம் அளிக்க முடியும்? என்ற கேள்விக்கு, ராமாயணத்தில் வால்மீகி முனிவரே பதிலும் அளித்துள்ளார். 
                 "சத்யேன லோகான் ஜயதி". 
அதாவது எவனொருவன், சத்ய தர்ம வழியில் நடக்கிறானோ! அவன் அனைத்து உலகங்களையும் ஜயித்தவன் ஆகிறான். என்பதே இதன் பொருள். அதனால் ராமர் வைகுண்டத்தையும் தன் சத்ய தர்மத்தினால் ஜயித்து, ஜடாயுவிற்கு மோக்ஷத்தை அளித்தார்.
    தசரதனுக்குக் கூட கிடைக்காத பெரும்பேறு அதிர்ஷ்டசாலியான     ஜடாயுவிற்கு கிடைத்தது. 
அத்துடன் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதனுக்கு, ஒவ்வொரு முறை திதி கொடுப்பதற்காக, " நான்கு பிண்டங்களை" இடுவார் அல்லவா?!.  ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நான்கு பிண்டங்களும் புழுக்களாக மாறின. இதனால், மிகுந்த மனவேதனையடைந்தார். தன்னால் தன் தந்தைக்கு முக்தியை அளிக்க முடியவில்லையே  என   சர்வேஸ்வரனான  சிவபிரானை மனமுருகி துதித்தார்.
 சிவபிரானும் அவரை மந்தாரவனத்திற்குச் சென்று , வழிபட்டு பின் அருகிலுள்ள, ''அரசலார் ஆற்றில்"  புனித நீராடியபின், பிதுரு தர்ப்பணம் செய்யும்படி பணித்தார்.
 அங்ஙனமே. சிவனாரின் வழிகாட்டுதலின்படி, தர்ப்பணம் செய்து நான்கு பிண்டங்களை வைத்தார்.
image.png
image.png
 என்ன ஆச்சரியம்! நான்கு பிண்டங்களும், நான்கு சிவலிங்கங்களாக மாறின. அத்துடன், தசரதனுக்கும் மோக்ஷம் கிடைத்தது. அது முதல் இங்குள்ள ஈஸ்வரர் "முக்தீஸ்வரர்" என அழைக்கப்படலானார்.அம்பிகை,  திரு நாமம் "ஸ்வர்ணவல்லி" .  அது முதல் . இந்த திருத்தலமும், 'தில தர்ப்பணபுரி' என போற்றப்பட்டது. [தில என்றால் எள் எனப் பொருள்]. மாயவரம், திருவாரூர் வழித் தடத்தில் அமைந்துள்ள இவ்விடம் காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி தற்போது 'செத்தலபதி" என அழைக்கப்படுகிறது.  

Thursday 16 September 2021

கல்யாணி ஜதிஸ்வரம்

                  தஞ்சை  நால்வர். 

ராகம் : கல்யாணி       தாளம் : திஸ்ர ஏகம் 

1.  ஸ் ,  ; ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||

                                                                 .

   

 ஸ ,  ; ; நீ  ரீ கா   || மா கா மா பா தா நீ ||

                    .

                  .

2. ஸ் , க் ரி ஸ் நி ரி ஸ் நி த பம |பா ஸ்நி தப


 நித பம கரி || கா மகரிஸ கரிஸ ரீ க ||


                                           .

மத கா மதநி  மா தநி ரி || (ஸ்)


3. தா , நித பத நிதத பநி || தா , நிஸ் தநிபத

 மபநி || தா , பமகரி மகரிஸநி || தா , நிஸரி

                                                        .           .        .


 கம பதநி ப || தா , பமப தா , ம நி ப || தா ,


 ஸ்நிபதா , மகரி || நீ , ஸா ரீ கமப கா ||மா

                                       .

                                     .

  பதநி  பா தா நிஸ்ரி || (  ஸ் )

                        

                                                                .

4. நீ ஸ்நி தப மக மப தத  || நீ ஸ்ரி நிஸ் தநி


 பம பத || நீ தப மக  தம கரி ஸரி || நீ

                                                                        .

 ஸரிகமப கமபதத || நீ ஸ் த நீ ஸ் ப த நீ ஸ் || 

                              

                                  .          .

மபத நீஸ் தநிஸ் ரீஸ்||ரிஸ் நிதப தாபா 

தபா || மகரி ஸாரீ  கம பதநி || (ஸ்)


                          .   .

5. ஸ் ,  ; ; நிக்ரி ரிஸ்நி || தநித தபம பம கரி 


நிரி || ஸா ; ; ரிகாம கம || , த ம தா நி தநீ 

 .

      .                                      .

ஸ்ரி நி || ஸ்  , ;  ; ; நிக்ரிஸ் ||நீ ;  ; ; தரிஸ்நி ||


தா ;  ; ;  பநிதம || பா ;  ; ; மபதநி ||


ஸ்க்ரீ ஸ்நி தரிஸ் , நித||பநி தா பம கம பா தநி ||

                         திஸ்ர நடை

          .       .

ஸ்க்ரி நிரிநி தநித மதம கமக ரிஸநி || தாநி 


ரிகம ரீ கா மதநி காம தநிரி ||( ஸ்)


           ஸ்ஸஸ  .

1. ஸா ;  ; நீ தா   .

1. ஸா ;  ; நீ தா பா || தா


மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||

                    . || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||

                    .  .

1. ஸா   .

1. ஸா ;  ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||

                    .  ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||
                    .

1. ஸா ;  ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||
                    .ஸஸ

      .

1. ஸா ;  ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||
                    .

  .
1. ஸா ;  ; நீ தா பா || தா மா கா ரீ நீ ரீ ||  

   ஸா ;   ;  நீ  ரீ கா || மா கா மா பா தா நீ ||
                    .

Monday 13 September 2021

ஆவணி மூலம்14 .9. 2021 செவ்வாய்க்கிழமை.

 



 செவ்வாய் செப். 14 அன்று ஆவணி மாத மூலம் நக்ஷத்திரம். அன்றைய தினத்தில், மதுரை சொக்கநாதருக்கு, திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஒவ்வொரு மாதத்திற்க்கும் ஒரொரு நக்ஷத்திரம் சிறப்பானதாக அதிபதியாக இருக்கும் அவ்வகையில் ஆவணி மாதத்தில் மூலம் நக்ஷத்திரம் முக்கியமானது மூல நக்ஷத்திரத்தின் அதிபதி 'நிருதி' எனும் அசுரன். அவ்வாறு இந்த அசுர சக்தியின் ஆதிக்கத்திலிருந்து நம்மை காத்து ரட்சிக்க, பக்தி எனும் இறை சிந்தனையே வழி வகுக்கும் என்று, சைவ சமயப் பெரியோர்கள், சொக்க நாதருக்கு விழா எடுத்து, போற்றுவர். அத்துடன், மதுரை திருவிளையாடல் புராணத்தில், சிவபெருமான் 'பிட்டுக்கு மண் சுமந்ததும்', மாணிக்கவாசகருக்காக நரியை, பரியாக்கி {குதிரை} திருவிளையாடல் புரிந்ததும், இந்த ஆவணி மாத மூல நக்ஷத்திரத்தன்று தான். 

யார் இந்த நிருதி?  இவரது உன்னதக் கதையை அறிவோம்

அஷ்ட திக் பாலகர்களில் தென்மேற்கு  திசையின் காவலனாக  அதிபதியாகத் திகழ்கிறார். இவர் அசுர குலத்தவர் ஆவார். ஆயினும், இவரது நற்செயல்களே இவரை 'அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக உயர்த்தியிருக்கிறது.
இவர், வாரணாசி வழித்தடத்தில் அமைந்துள்ள காட்டில் வரும் வழிப்போக்கர்களுக்கு காட்டில் வசிக்கும் சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளால் எவ்வித இன்னல்களும் ஏற்பாடாதவண்ணமும், அவர்களின் களைப்பிற்க்கும், பசி தாகத்திற்கும் அவர்களது தேவை அறிந்து, உதவி புரியலானார். ஆனால், இவரது சிற்றப்பனோ, வழிப்போக்கர்களைத் துன்புறுத்தி, அவர்கள் உயிர், உடைமை என அனைத்திற்க்கும் ஆபத்தினை விளைவித்தான்.
இதனால், இவருக்கும் இவர் சிற்றப்பனுக்கும் மோதல் ஏற்பட்டு, தன் சிற்றப்பனால் உயிர் துறக்கும் நிலை ஏற்பட, இறைவன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டு, தென்மேற்கு திசையினை காக்கும் காவலனாக பதவி உயர்வு பெற்றார் 



இவரது வாகனமாக மனித உடலும், சிம்மத் தலையும் கொண்ட பூத கனம் என அறியப்படுகிறது. அத்துடன் இவர் பஞ்ச பூதங்களில் நிலத்தின் அதிபதியும் ஆதலால், இவரை வழிபட, நிலம், நீச்சு, தோட்டம், துரவு என சகல வசதிகளையும் அருள்வார் என்பது நம்பிக்கை. 


இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 7.9.2019 { ஆவணி மூலம்} சிவபெருமான் வயதான மூதாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த தினம். மதுரை மாநகரில் இது விசேஷமாகக் கொண்டாடப்படும். 

Saturday 11 September 2021

தூர்வாஷ்டமி14 .9. 2021 செவ்வாய்க்கிழமை

   14.9.2021 செவ்வாய்கிழமையன்று 'தூர்வாஷ்டமி'. ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில் அதனைத் தொடர்ந்து வரும் அஷ்டமி திதியில் 'தூர்வாஷ்டமி' விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. சதுர்த்தி பூஜையின் போது விநாயக பெருமானுக்கு செய்யப்படும் அர்ச்சனை நாமாவளியில், பலவித புஷ்பங்கள் மற்றும் இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்த பின், 'ஏக விம்சதி', அதாவது 21 நாமாவளிகள் சொல்லி, "தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி"  என்று அருகம்புல்லால் மட்டும் அர்ச்சனை செய்வோம் அல்லவா? தூர்வா என்றால் அருகம்புல் யுக்மம் என்றால் இரட்டை . அதாவது, இரட்டை அருகம்புல்லை சமர்ப்பிக்கவேண்டும் எனப் பொருள். image.png

  அத்துடன் அல்லாமல், அடுத்து வரும் அஷ்டமி திதியில், தூர்வா எனும் இந்த அருகம்புல்லினை ஒரு தாம்பாளத்தில் வைத்து, சந்தனம் குங்குமம் இட்டு, 
      த்வம் தூர்வே அம்ருத ஜந்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை: |
      ஸௌபாக்யம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்யகரீ பவ ||
      யதா ஸாகாப்ரஸாகாபி: விஸ்த்ருதாஸி மஹிதலே |
      ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வமஜராமரம் ||
என்ற இந்த ஸ்லோகத்தைக் கூறி பிரார்த்தனை செயுது மலர் தூவி வழிபடுவர்.
இதன் அர்த்தம் : :
தேவர்களாலும், அசுரர்களாலும்   வணங்கப்படுகின்ற   அருகம்புல்லே!  எங்களது வாழ்வில் ஸௌபாக்கியத்தையும்    குழந்தைச் செல்வத்தையும் தந்து, சகல காரிய சித்தியையும் அருள்வாயாக! அத்துடன் எவ்விதம் நீ கிளைகள், அதன் உபகிளைகள் என நிலம் முழுவதும் பரவி வளர்கின்றாயோ? அவ்விதமே எங்களது மக்கட் செல்வமும், மகன், மகள், பேரன், பேத்தி என சந்ததி தழைக்க அருள்வாய் என்பதே  ஆகும். 
அப்படி என்ன இந்த அருகம்புல்லிற்கு மட்டும் அத்தனை சிறப்பு? அது தொடர்பான கதையை அறிவோமா?!
ஒருமுறை ' யமனின் மைந்தன், ஜ்வாலாசுரன்' என்பவன், [பிறவியிலேயே அவனது உடல் அனலைக் கக்கியதால் இப்பெயர்] தன் உடல் வெப்பத்தால் அனைவரையும் துன்புறுத்தி, சாம்பலாக்கினான். அவனிடமிருந்து தங்களைக் காக்க வேண்டி, அனைவரும் விநாயகரைப் பணிந்திட, அவரும்   ஜ்வாலாசுரனுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார். ஆயினும் அவன் உடல் வெப்பம் கூட பிறரைத் துன்புறுத்தும் என்பதால், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால், அவரது வயிற்றுப் பகுதியில் சென்ற அவன் உடலின் வெப்பம் தாங்காமல் பெரும் அவதிக்குள்ளானார்.
image.png
தேவர்கள் அனைவரும் கங்கை நீரை அவருக்கு அபிஷேகம் செய்தும், பனிக்கட்டி மலையையே பேர்த்து, அவர் மேல் வைத்தும்  அவரது எரிச்சல் அடங்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்து நிற்க, அத்திரி முதலான 'சப்த ரிஷிகள்' 21 அருகம்புல்லை அவரது தலையில் வைக்கவும், அவரது உடல் குளிர்ந்து, வயிற்றின் அனலும் அடங்கியது. அதனால் அகம் மகிழ்ந்த, விநாயகப் பெருமான், தனக்குரிய பூஜைக்கு சிறந்ததாக அருகம்புல்லை விரும்பி ஏற்றுக் கொண்டார். 

Sunday 5 September 2021

தர்ப்ப சங்கிரஹம் .

 அமாவாசை  தினத்தில் நாம் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

பொதுவாக, நம் இந்து மதசடங்கு வழிபாடு, மனிதனின் பிறப்பு, இறப்பு, கோயில் இன்னபிற சுப,அசுப காரியங்கள் எதுவாயினும், அதில்"தர்ப்பை புல்லுக்கு" முக்கியத்துவம் உண்டு. உலகம் தோன்றிய போதே தர்ப்பைப் புல்லும் தோன்றிவிட்டது. இந்த தர்ப்பைப்புல்லில் எளிதாக அதிவிரைவில் மின்காந்தத்தைக் கடத்தக் கூடிய தாமிரம் எனும் காப்பர் சத்து மிகுதியாக உள்ளது. இந்த புற்கள் காய்ந்து எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதன் வீரியத் தன்மையில் சிறிதும் குறையாது. 
 இதை நாம் குடிக்கும் த்ண்ணீரில் போட்டு வைத்தால் நம் உடலுக்கு எந்த ஒரு நோயும் வராது. இந்த தர்ப்பை நம் அருகில் இருந்தாலே நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. 
         விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக மக்களுக்கும், மிகுந்த தொல்லை கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட தேவேந்திரன் தன் சக்தி பொருந்திய "வஜ்ஜிராயுதத்தால்" அவனை தாக்கினார். ஆனால் அத்தாக்குதல் எல்லாம் பயனற்று போயின. அப்பொழுது பிரம்ம தேவர், தன் கமண்டல தீர்த்தத்தை எடுத்து ஜபித்து இந்திரனின் வஜ்ஜிராயுதத்தில் தெளித்து, பின் போர் செய்யும்படி அருளினார். 
        இம்முறை போர் செய்யும் பொழுது, அசுரனின் அங்கங்கள் துண்டு துண்டாகின. இதனால் அதிர்ச்சியுற்ற அசுரன் புனித தீர்த்தங்களின் மஹிமையை உணர்ந்தவனாய், அனைத்து புனித தீர்த்தங்களுக்கும் சென்று ரத்தம் தோய்ந்த தன் உடலை நனைத்து அதன் புனிதத் தன்மையை கெடுக்க முற்பட்டான்.உடனே பிரம்மதேவர், அனைத்து தீர்த்தங்களையும், "தர்ப்பைப் புல்லாக" மாற்றியருளினார்.
  தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் எந்தவித தீய சக்திகள் அணுகாது. இதனால் நாம் மேற்கொள்ளும் காரியங்கள் தடைபடாமல் இருக்க,  நம் வைதீகக் காரியங்கள் அனைத்திலும் ஆசனமாகவும், கையில் மோதிரம் போல் பவித்ரமாகவும் அணிந்து கொள்கிறோம். இந்த "தர்ப்ப சங்கிரஹம்"  நமக்கு உன்னதமான பாதுகாப்பு கவசமாகும்.  
image.png

விநாயகர் சதுர்த்தி 10.9.2021 வெள்ளிக்கிழமை. தூமகேது விநாயகர்.

 

வருகிற வெள்ளிக்கிழமை செப். 10 ம்தேதியன்று விநாயகர்  சதுர்த்தி. எங்கு திரும்பினாலும், மரத்தடியிலோ அல்லது மாடத்திலோ எளிமையாக அமர்ந்து, அருள் புரியும் வினாயகர், அனைவராலும் விரும்பப்படுபவர் என்றால் அது உண்மை.
கணேச புராணத்தில் வினாயகப் பெருமான், நான்கு யுகத்திலும் நான்கு அவதாரம் எடுத்தாகக் கூறுகிறது. 


  image.png
   முதலாவதான கிருதயுகத்தில், அவரது 'திரு நாமம் ''மஹா கடர் '' என்பதாகும். 
இரண்டாவது, திரேதாயுகத்தில் "மயூரேசர்'' என அழைக்கப்பட்டார். குழ‌ந்தை பருவத்தில் தன்னை விட பெரிய மயிலைப் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என அழைக்கப்பட்டார். இவரது வாகனமாகவும் மயில் இருந்துள்ளது. 
 மூன்றாவதான துவாபர யுகத்தில், ''கஜானனன்' என்பது அவரது திரு நாமம் ஆகும். 
நான்காவதான கலியுகத்தில் தான், விநாயகர், பார்வதி பரமேஸ்வரனுக்கு  மகனாக, பார்வதி தேவி தன் திருமேனியின் மஞ்சள் துகளிலிருந்து  அவதரித்து  'விக்ன விநாயகராக'', அற வழியில் நடக்கும் தன் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை   அகற்றுபவர் என்றும் தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் எனவும் பொருள்பட  அருள் பாலிக்கிறார். 
இதையும் தவிர, விநாயகர் பூஜையில் இடம்பெறும் 'ஷோடச  நாமாவளி'  எனும் பதினாறு நாமங்களும் அவரது பதினாறு அவதாரங்களைக் குறிப்பதாகும். அதில் ஒன்பதாவது நாமமாக இடம் பெறும் 'தூமகேது' .இந்த அவதார நோக்கத்தை அறிவோம்!
இந்த நாளில் கண்ணீர் புகை முதல் பலவித ரசாயண வேதியியல் பொருட்களால் ஆன அணுகுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு, போர் நடக்கிறது அல்லவா?. அதை முன்பே நடத்திக் காட்டிய சரித்திரமே இது!. 
         முன் நாளில் 'விகுதி' எனும் அரசன் தான் இந்திரப் பதவியை அடையும் ஆசையில், அவன் செய்த அடாத செயல்களைப்   பொறுக்க முடியாமல், ஒரு முனிவர் அவனைப் புகையாகப்  போகும்படி சபித்தார். அவனே 'தூமகேது" என்ற பெயருடன் புகை அசுரனாகப் பிறந்தான்.
தூமம் என்றால் புகை. கேது என்றால் கொடி.  'கொடிய விஷ வாயுவைத் தனது ஆயுதமாக வைத்திருந்தான். தன்   எதிரியை அழிக்க, அவன் தன் வாயிலிருந்து , கொடிய புகையைக் கக்க, அது காற்றில் கொடி போல் பரவி, அனைவரையும் மூச்சுத் திணற வைத்து  அவர்களை எமலோகததிற்கு வழியனுப்பிவைக்கும். இதன் காரணமாக இவன் 'தூமாசுரன்' என அழைக்கப்பட்டான்.
        இவனது இக்கொடுமைக்கு அஞ்சிய நல்லோர் மற்றும்   முனிவர்களின் வேண்டுதலுக்கு  இணங்கி,  அரசன் மாதவன் மற்றும் அவன் மனைவி  சுமுதையின்  மகனாக 'விஷ்ணுவின் அம்சமாக பிறக்கும் குழந்தையால்,  அவன் அழிவு நேரும் என அசரீரி ஒலித்து முனிவர்களின் கவலைக்கு ஆறுதல் அளித்தது.        
இதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தன் படைத் தளபதியை அழைத்து, நள்ளிரவில் அத்தம்பதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களைக் கொன்றுவிட ஏவினான்.
   நிறை மாத கர்ப்பிணியாக இருந்த, அரசியைக் கண்டு   மனமிரங்கினான் படைத்தளபதி அப்பாவியான அவர்களைக் கொல்ல மனமின்றி, எப்படியோ  தலைமறைவாக உயிர் பிழைத்து வாழட்டும் என்ற நல்லெண்ணத்தில், கட்டிலோடு அவர்களை  காட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு விட்டான். வினாயகரின் பக்தர்களான அவர்கள், தன் நிலை உணர்ந்து தங்களை ரட்சிக்கும் படி பெருமானை வேண்டினர்.
தன் தளபதியின் செயலை ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தானே அவர்களை அழிக்கப் புறப்பட்டான். 
அவன் சென்ற சமயம் விநாயகப் பெருமான், விஷ்ணுவின் அம்சமாக, குழந்தையாக, அன்னையின் மடியில் தவழ்ந்து, களித்தவாறு இவன் வருகைக்காகக் காத்திருந்தார்.
       குழந்தை பிறந்ததைக் கண்டு முதலில் திடுக்கிட்டாலும், சிறு குழந்தை தானே! இதனிடம் என்ன ஆற்றல் இருக்கமுடியும்? இதன் மேல் தனது முக்கிய ஆயுதமான புகையைக் கக்கினால், மூச்சுத் திணறி இறந்து விடும் என இறுமாப்புக் கொண்டான்.
ஆனால், நிகழ்ந்ததோ! அவன் கக்கிய  புகையை  எம்பெருமான்,  அனைத்தையும் தன் வாயினுள் விழுங்கி வைத்துக் கொண்டார். 
இவ்வளவு புகைகளைக் கக்கியும் தனக்குத் தான் சோர்வாக உள்ளதே தவிர, குழந்தையைச் சுற்றி புகை மூட்டமுமில்லாமல், குழந்தை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கலவரமானான்.
image.png
 இதுவே தக்க சமயம் என்றெண்ணிய பெருமானும், தன் வாயில் அடக்கி வைத்திருந்த விஷப்புகையை அவன் மேலேயே கக்கினார். அந்த விஷப் புகைகள் அவனையும் அவனது சேனைகளையும் அழித்தது. அதனால், விநாயகப் பெருமான் "தூமகேது" என போற்றப்படுகிறார்.
image.png