Saturday 25 September 2021

நேரில் வந்த பிதுருக்கள்



 நம் அன்பிற்க்கு உரியவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு நீத்தாலும் நம் மனதை விட்டு என்றும் அவர்களின் நினைவுகள் அகலுவதில்லை. பலவித வேலைப்பளு, பிரச்னைக்கிடையிலும்,   திரும்பவும் அவர்களை சந்திக்க முடிந்தால், எனக்கு ஆயிரம் யானை பலம் கிடைத்தது போல் இருக்கும் என நம் மனம் ஏங்கும் அல்லவா?.

         உண்மையில் திரேதாயுக காலம் வரை நாம் திதி கொடுக்கும் தினத்தில் பிதுருக்கள் எனப்படும் நம் மூதாதையர்கள் நேரில் வந்து நாம் அளிக்கும் உணவினை, வயிறார உண்டு நம்மையும் வாழ்த்திச் சென்றனர். அதிசயமாக இருக்கிறதல்லவா?!
பின், இந்த நிலை எப்படி மாறியது? எதற்காக எள்ளையும் தர்ப்பையையும் கொண்டு திதி கொடுக்கிறோம்? இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா?
      திரேதா யுக  காலத்தில் வாழ்ந்த சாட்சாத் 
           ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே தான்.
  ஸ்ரீராமர் வனவாச காலத்தில், காட்டில் தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டதும், மனம் வருந்திய நிலையிலும் தலைப்பிள்ளை தான் தந்தைக்குக் காரியம் கர்மா செய்ய வேண்டும்  என்பதால், அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.
            தசரதருக்கு கர்மா செய்ய ஆரம்பிக்கும் சமயம், அவர்களை துதித்து மந்திரம் சொல்லி, அதாவது, இந்த வம்சா வழியில் வந்த, எனது தந்தையான தாங்கள் இங்கே எழுந்தருளி, யாம் அளிக்கும் விருந்தினை உண்டு எங்களை வாழ்த்தவேண்டும் எனும் விதமாகக் கூறி அழைக்கும்சமயம், அவர்கள் நேரில் வந்து அருள் புரிவர்.
       இவ்விதமாக, ஸ்ரீராமர் அழைத்தும், தசரதர் வரவேயில்லை. நேரம் கடந்து கொண்டே சென்றது. தந்தை இறந்த துக்கம், அவரது கடைசி காலத்தில் அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்யாத குற்ற உணர்வு  இயலாமை என பலவித குழப்பங்கள் அவரது மனதைக் குடைய ஸ்ரீராமரது  பொறுமையும் அவரை விட்டு சிறிது சிறிதாக நீங்கியது.
image.png
   இதற்கான காரணத்தை குலகுருவிடமே கேட்டு விடலாம் என கிளம்பலானார். அப்போது, தசரதர் சற்றுப் பொறு.! ராமா..! நில்! நான் வந்துவிட்டேன் என்று அழைத்து உன் கர்மாவினால் நான் மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு எனது ஆசிகள்  என்றார்.
image.png
    தந்தையே ஏன் தாங்கள் நான் கர்மா செய்ய ஆரம்பித்த உடனேயே வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? என வருத்தத்துடன் வினவினார்.
  உன் தம்பி பரதன், நதியின் அக்கரையில், உனக்கு முன்பாகவே முதலில் என்னை அழைத்து கர்மா செய்து என்னை அழைத்ததினால், நான் முதலில் அங்கு சென்றுவிட்டு, பிறகு இங்கு வந்தேன். அதுவே தாமதம் ஆயிற்று! என்றார்.
     துக்கம், இயலாமை, ஆற்றாமை என இவைகள் மனதில் குடி கொண்டு வாட்டிக் கொண்டிருந்த நிலையில், தந்தையின் இத்தகைய பதிலால், ஒரு வினாடி கோபம் கொண்டு, மனம் பொறுக்காமல், 
இனி, எந்த மூதாதையர்களும் தங்கள் சந்ததிகள் திதி செய்து அழைக்கும் போது அவர்கள் கண்களுக்கு புலப்படக்கூடாது என ஆவேசமாக உரைத்தார்.
    ஆயினும், உடன் சுதாரித்து அவசரத்தில் தன் வார்த்தைகளின்  விபரீதம் உணராமல் கோபித்ததற்கு தன் தந்தை தசரதரிடம் மன்னிப்பு வேண்டினார். பின் இதனை சரி செய்வதற்கு ஏதேனும் வழிவகை உண்டா? என எமதர்மர் மற்றும் சனி பகவானை வேண்டினார். அவர்களும் அங்கு தோன்றி, ஸ்ரீ ராமரே இவ்வாறு உரைத்தபின், அதற்கு மாற்று கிடையாது என்றனர்.


image.png
    ஆயினும், எமதர்மர் சிறிது யோசனை செய்து, சந்ததிகள் அளிக்கும் அவர்களுக்கான உணவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை சனி பகவானை ஏற்கும்படி ஆணையிட்டார்.
     சனி பகவானோ உயிர்களின் பாவ, புண்ணிய பலன்களை சரி பார்ப்பத்ற்கே  தனக்கு நேரம் சரியாக இருக்கிறதென்றும்,  தர்ப்பைப்புல்லில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வழிபடலாம்   எனது வாகனமான காக்கை, சந்ததிகள் இடும் எள்ளும் நீரும் கலந்த உணவை உண்பதன் மூலம் மூதாதையர்களின் வயிற்றுப் பசியை போக்கும் எனவும் கூறி   எமராஜனின் அனுமதியும் பெற்றார்.
image.png
ஆம், தர்ப்பை தூய்மையான இடத்தில் மட்டுமே அதுவும், தானே தோன்றி வளரும் எந்தவொரு பதியம் போன்ற முறையில் எல்லாம் வளராது. வாடவோ அழுகவோ செய்யாது. அத்துடன் தர்ப்பையின் இரு முனைகளிலும், பிரம்மனும் சிவனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்.
ஆத்மகாரகன் - சூரியன். (அதாவது உயிர் எனும் ஆத்மாவின் அதிபதி)
ஜீவகாரகன் - குரு பகவான். (உடலின் அதிபதி).
இரத்தமும், சதையுமான மஜ்ஜை, எலும்பு போன்ற கட்டுமான காரகனாக அதிபதியாக - சனி பகவான் திகழ்கிறார்.

 நாம் ஆன்மாவை அழைத்து ஆவாஹனம் செய்யும் பொழுது, சூரிய ஒளிக் கற்றைகளின் மூலம் பித்ருக்களின் ஆத்மா தர்ப்பையில் வந்து அமர்கிறது. குருமுகமாக மந்திரம் சொல்லும் வேதியர் உதவியோடு, சனிபகவானுக்கு உகந்த தானியமான எள்ளும  கொண்டு தர்ப்பணம் செய்கின்றனர். எமனின் தூதுவனாக காகம் வந்து, அன்னத்தை உண்கிறது. 
அதுமுதல் காகம் அந்த உணவைச் சாப்பிட்ட பின்னரே நாம் உணவருந்தும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. 
அத்துடன் பித்ருக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குபவர் 'மஹாவிஷ்ணுவே'. மஹாவிஷ்ணுவின் வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய தானியம் 'எள்' என வேதம் கூறுகிறது. அதனாலேயே எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 


அது தவிர, வாசனை மலர்களைக்   காட்டிலும்   மகா விஷ்ணுவிற்கு உகந்த துளசி மாலையை முன்னோர்களின் படத்திற்கு அணிவிப்பதால், பித்ருக்களுக்கு மஹாவிஷ்ணுவின் ஆசியும் கிட்டும்.  
எள்ளும் தர்ப்பையும் நம் வாழ்வின் பாதுகாப்பு அம்சமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தபட்டது என்றால் அது மிகையாகாது!

3 comments:

  1. மகத்தான சேவை.. இதுவே மாதவன் சேவை..தொடர்க தூய பணி..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நாங்கள் தெரிந்து கொண்ட அருமையான பதிவு.உங்களின் பணி தொடர எங்களின் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தங்கள் அனைவரது ஆதரவிற்க்கும் அன்பிற்கும் நன்றிகள் பலப்பல.🙏🙏🙏🙏

    ReplyDelete