Monday 13 September 2021

ஆவணி மூலம்14 .9. 2021 செவ்வாய்க்கிழமை.

 



 செவ்வாய் செப். 14 அன்று ஆவணி மாத மூலம் நக்ஷத்திரம். அன்றைய தினத்தில், மதுரை சொக்கநாதருக்கு, திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஒவ்வொரு மாதத்திற்க்கும் ஒரொரு நக்ஷத்திரம் சிறப்பானதாக அதிபதியாக இருக்கும் அவ்வகையில் ஆவணி மாதத்தில் மூலம் நக்ஷத்திரம் முக்கியமானது மூல நக்ஷத்திரத்தின் அதிபதி 'நிருதி' எனும் அசுரன். அவ்வாறு இந்த அசுர சக்தியின் ஆதிக்கத்திலிருந்து நம்மை காத்து ரட்சிக்க, பக்தி எனும் இறை சிந்தனையே வழி வகுக்கும் என்று, சைவ சமயப் பெரியோர்கள், சொக்க நாதருக்கு விழா எடுத்து, போற்றுவர். அத்துடன், மதுரை திருவிளையாடல் புராணத்தில், சிவபெருமான் 'பிட்டுக்கு மண் சுமந்ததும்', மாணிக்கவாசகருக்காக நரியை, பரியாக்கி {குதிரை} திருவிளையாடல் புரிந்ததும், இந்த ஆவணி மாத மூல நக்ஷத்திரத்தன்று தான். 

யார் இந்த நிருதி?  இவரது உன்னதக் கதையை அறிவோம்

அஷ்ட திக் பாலகர்களில் தென்மேற்கு  திசையின் காவலனாக  அதிபதியாகத் திகழ்கிறார். இவர் அசுர குலத்தவர் ஆவார். ஆயினும், இவரது நற்செயல்களே இவரை 'அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக உயர்த்தியிருக்கிறது.
இவர், வாரணாசி வழித்தடத்தில் அமைந்துள்ள காட்டில் வரும் வழிப்போக்கர்களுக்கு காட்டில் வசிக்கும் சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளால் எவ்வித இன்னல்களும் ஏற்பாடாதவண்ணமும், அவர்களின் களைப்பிற்க்கும், பசி தாகத்திற்கும் அவர்களது தேவை அறிந்து, உதவி புரியலானார். ஆனால், இவரது சிற்றப்பனோ, வழிப்போக்கர்களைத் துன்புறுத்தி, அவர்கள் உயிர், உடைமை என அனைத்திற்க்கும் ஆபத்தினை விளைவித்தான்.
இதனால், இவருக்கும் இவர் சிற்றப்பனுக்கும் மோதல் ஏற்பட்டு, தன் சிற்றப்பனால் உயிர் துறக்கும் நிலை ஏற்பட, இறைவன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டு, தென்மேற்கு திசையினை காக்கும் காவலனாக பதவி உயர்வு பெற்றார் 



இவரது வாகனமாக மனித உடலும், சிம்மத் தலையும் கொண்ட பூத கனம் என அறியப்படுகிறது. அத்துடன் இவர் பஞ்ச பூதங்களில் நிலத்தின் அதிபதியும் ஆதலால், இவரை வழிபட, நிலம், நீச்சு, தோட்டம், துரவு என சகல வசதிகளையும் அருள்வார் என்பது நம்பிக்கை. 


இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 7.9.2019 { ஆவணி மூலம்} சிவபெருமான் வயதான மூதாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த தினம். மதுரை மாநகரில் இது விசேஷமாகக் கொண்டாடப்படும். 

1 comment: