Sunday 5 September 2021

தர்ப்ப சங்கிரஹம் .

 அமாவாசை  தினத்தில் நாம் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

பொதுவாக, நம் இந்து மதசடங்கு வழிபாடு, மனிதனின் பிறப்பு, இறப்பு, கோயில் இன்னபிற சுப,அசுப காரியங்கள் எதுவாயினும், அதில்"தர்ப்பை புல்லுக்கு" முக்கியத்துவம் உண்டு. உலகம் தோன்றிய போதே தர்ப்பைப் புல்லும் தோன்றிவிட்டது. இந்த தர்ப்பைப்புல்லில் எளிதாக அதிவிரைவில் மின்காந்தத்தைக் கடத்தக் கூடிய தாமிரம் எனும் காப்பர் சத்து மிகுதியாக உள்ளது. இந்த புற்கள் காய்ந்து எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதன் வீரியத் தன்மையில் சிறிதும் குறையாது. 
 இதை நாம் குடிக்கும் த்ண்ணீரில் போட்டு வைத்தால் நம் உடலுக்கு எந்த ஒரு நோயும் வராது. இந்த தர்ப்பை நம் அருகில் இருந்தாலே நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. 
         விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக மக்களுக்கும், மிகுந்த தொல்லை கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட தேவேந்திரன் தன் சக்தி பொருந்திய "வஜ்ஜிராயுதத்தால்" அவனை தாக்கினார். ஆனால் அத்தாக்குதல் எல்லாம் பயனற்று போயின. அப்பொழுது பிரம்ம தேவர், தன் கமண்டல தீர்த்தத்தை எடுத்து ஜபித்து இந்திரனின் வஜ்ஜிராயுதத்தில் தெளித்து, பின் போர் செய்யும்படி அருளினார். 
        இம்முறை போர் செய்யும் பொழுது, அசுரனின் அங்கங்கள் துண்டு துண்டாகின. இதனால் அதிர்ச்சியுற்ற அசுரன் புனித தீர்த்தங்களின் மஹிமையை உணர்ந்தவனாய், அனைத்து புனித தீர்த்தங்களுக்கும் சென்று ரத்தம் தோய்ந்த தன் உடலை நனைத்து அதன் புனிதத் தன்மையை கெடுக்க முற்பட்டான்.உடனே பிரம்மதேவர், அனைத்து தீர்த்தங்களையும், "தர்ப்பைப் புல்லாக" மாற்றியருளினார்.
  தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் எந்தவித தீய சக்திகள் அணுகாது. இதனால் நாம் மேற்கொள்ளும் காரியங்கள் தடைபடாமல் இருக்க,  நம் வைதீகக் காரியங்கள் அனைத்திலும் ஆசனமாகவும், கையில் மோதிரம் போல் பவித்ரமாகவும் அணிந்து கொள்கிறோம். இந்த "தர்ப்ப சங்கிரஹம்"  நமக்கு உன்னதமான பாதுகாப்பு கவசமாகும்.  
image.png

No comments:

Post a Comment