Saturday 11 September 2021

தூர்வாஷ்டமி14 .9. 2021 செவ்வாய்க்கிழமை

   14.9.2021 செவ்வாய்கிழமையன்று 'தூர்வாஷ்டமி'. ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில் அதனைத் தொடர்ந்து வரும் அஷ்டமி திதியில் 'தூர்வாஷ்டமி' விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. சதுர்த்தி பூஜையின் போது விநாயக பெருமானுக்கு செய்யப்படும் அர்ச்சனை நாமாவளியில், பலவித புஷ்பங்கள் மற்றும் இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்த பின், 'ஏக விம்சதி', அதாவது 21 நாமாவளிகள் சொல்லி, "தூர்வாயுக்மம் சமர்ப்பயாமி"  என்று அருகம்புல்லால் மட்டும் அர்ச்சனை செய்வோம் அல்லவா? தூர்வா என்றால் அருகம்புல் யுக்மம் என்றால் இரட்டை . அதாவது, இரட்டை அருகம்புல்லை சமர்ப்பிக்கவேண்டும் எனப் பொருள். image.png

  அத்துடன் அல்லாமல், அடுத்து வரும் அஷ்டமி திதியில், தூர்வா எனும் இந்த அருகம்புல்லினை ஒரு தாம்பாளத்தில் வைத்து, சந்தனம் குங்குமம் இட்டு, 
      த்வம் தூர்வே அம்ருத ஜந்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை: |
      ஸௌபாக்யம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்யகரீ பவ ||
      யதா ஸாகாப்ரஸாகாபி: விஸ்த்ருதாஸி மஹிதலே |
      ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வமஜராமரம் ||
என்ற இந்த ஸ்லோகத்தைக் கூறி பிரார்த்தனை செயுது மலர் தூவி வழிபடுவர்.
இதன் அர்த்தம் : :
தேவர்களாலும், அசுரர்களாலும்   வணங்கப்படுகின்ற   அருகம்புல்லே!  எங்களது வாழ்வில் ஸௌபாக்கியத்தையும்    குழந்தைச் செல்வத்தையும் தந்து, சகல காரிய சித்தியையும் அருள்வாயாக! அத்துடன் எவ்விதம் நீ கிளைகள், அதன் உபகிளைகள் என நிலம் முழுவதும் பரவி வளர்கின்றாயோ? அவ்விதமே எங்களது மக்கட் செல்வமும், மகன், மகள், பேரன், பேத்தி என சந்ததி தழைக்க அருள்வாய் என்பதே  ஆகும். 
அப்படி என்ன இந்த அருகம்புல்லிற்கு மட்டும் அத்தனை சிறப்பு? அது தொடர்பான கதையை அறிவோமா?!
ஒருமுறை ' யமனின் மைந்தன், ஜ்வாலாசுரன்' என்பவன், [பிறவியிலேயே அவனது உடல் அனலைக் கக்கியதால் இப்பெயர்] தன் உடல் வெப்பத்தால் அனைவரையும் துன்புறுத்தி, சாம்பலாக்கினான். அவனிடமிருந்து தங்களைக் காக்க வேண்டி, அனைவரும் விநாயகரைப் பணிந்திட, அவரும்   ஜ்வாலாசுரனுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார். ஆயினும் அவன் உடல் வெப்பம் கூட பிறரைத் துன்புறுத்தும் என்பதால், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால், அவரது வயிற்றுப் பகுதியில் சென்ற அவன் உடலின் வெப்பம் தாங்காமல் பெரும் அவதிக்குள்ளானார்.
image.png
தேவர்கள் அனைவரும் கங்கை நீரை அவருக்கு அபிஷேகம் செய்தும், பனிக்கட்டி மலையையே பேர்த்து, அவர் மேல் வைத்தும்  அவரது எரிச்சல் அடங்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்து நிற்க, அத்திரி முதலான 'சப்த ரிஷிகள்' 21 அருகம்புல்லை அவரது தலையில் வைக்கவும், அவரது உடல் குளிர்ந்து, வயிற்றின் அனலும் அடங்கியது. அதனால் அகம் மகிழ்ந்த, விநாயகப் பெருமான், தனக்குரிய பூஜைக்கு சிறந்ததாக அருகம்புல்லை விரும்பி ஏற்றுக் கொண்டார். 

5 comments:

  1. every week some new information. nice

    ReplyDelete
  2. Very simple informative. Vinayagar is more powerful and karunamurthy

    ReplyDelete
  3. Amazing facts about Arugambul. Thanks for enlightening us. Keep your good work going

    ReplyDelete
  4. அறியாத தகவலை அறியவைத்தமைக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete