Sunday 5 September 2021

விநாயகர் சதுர்த்தி 10.9.2021 வெள்ளிக்கிழமை. தூமகேது விநாயகர்.

 

வருகிற வெள்ளிக்கிழமை செப். 10 ம்தேதியன்று விநாயகர்  சதுர்த்தி. எங்கு திரும்பினாலும், மரத்தடியிலோ அல்லது மாடத்திலோ எளிமையாக அமர்ந்து, அருள் புரியும் வினாயகர், அனைவராலும் விரும்பப்படுபவர் என்றால் அது உண்மை.
கணேச புராணத்தில் வினாயகப் பெருமான், நான்கு யுகத்திலும் நான்கு அவதாரம் எடுத்தாகக் கூறுகிறது. 


  image.png
   முதலாவதான கிருதயுகத்தில், அவரது 'திரு நாமம் ''மஹா கடர் '' என்பதாகும். 
இரண்டாவது, திரேதாயுகத்தில் "மயூரேசர்'' என அழைக்கப்பட்டார். குழ‌ந்தை பருவத்தில் தன்னை விட பெரிய மயிலைப் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என அழைக்கப்பட்டார். இவரது வாகனமாகவும் மயில் இருந்துள்ளது. 
 மூன்றாவதான துவாபர யுகத்தில், ''கஜானனன்' என்பது அவரது திரு நாமம் ஆகும். 
நான்காவதான கலியுகத்தில் தான், விநாயகர், பார்வதி பரமேஸ்வரனுக்கு  மகனாக, பார்வதி தேவி தன் திருமேனியின் மஞ்சள் துகளிலிருந்து  அவதரித்து  'விக்ன விநாயகராக'', அற வழியில் நடக்கும் தன் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை   அகற்றுபவர் என்றும் தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் எனவும் பொருள்பட  அருள் பாலிக்கிறார். 
இதையும் தவிர, விநாயகர் பூஜையில் இடம்பெறும் 'ஷோடச  நாமாவளி'  எனும் பதினாறு நாமங்களும் அவரது பதினாறு அவதாரங்களைக் குறிப்பதாகும். அதில் ஒன்பதாவது நாமமாக இடம் பெறும் 'தூமகேது' .இந்த அவதார நோக்கத்தை அறிவோம்!
இந்த நாளில் கண்ணீர் புகை முதல் பலவித ரசாயண வேதியியல் பொருட்களால் ஆன அணுகுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு, போர் நடக்கிறது அல்லவா?. அதை முன்பே நடத்திக் காட்டிய சரித்திரமே இது!. 
         முன் நாளில் 'விகுதி' எனும் அரசன் தான் இந்திரப் பதவியை அடையும் ஆசையில், அவன் செய்த அடாத செயல்களைப்   பொறுக்க முடியாமல், ஒரு முனிவர் அவனைப் புகையாகப்  போகும்படி சபித்தார். அவனே 'தூமகேது" என்ற பெயருடன் புகை அசுரனாகப் பிறந்தான்.
தூமம் என்றால் புகை. கேது என்றால் கொடி.  'கொடிய விஷ வாயுவைத் தனது ஆயுதமாக வைத்திருந்தான். தன்   எதிரியை அழிக்க, அவன் தன் வாயிலிருந்து , கொடிய புகையைக் கக்க, அது காற்றில் கொடி போல் பரவி, அனைவரையும் மூச்சுத் திணற வைத்து  அவர்களை எமலோகததிற்கு வழியனுப்பிவைக்கும். இதன் காரணமாக இவன் 'தூமாசுரன்' என அழைக்கப்பட்டான்.
        இவனது இக்கொடுமைக்கு அஞ்சிய நல்லோர் மற்றும்   முனிவர்களின் வேண்டுதலுக்கு  இணங்கி,  அரசன் மாதவன் மற்றும் அவன் மனைவி  சுமுதையின்  மகனாக 'விஷ்ணுவின் அம்சமாக பிறக்கும் குழந்தையால்,  அவன் அழிவு நேரும் என அசரீரி ஒலித்து முனிவர்களின் கவலைக்கு ஆறுதல் அளித்தது.        
இதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தன் படைத் தளபதியை அழைத்து, நள்ளிரவில் அத்தம்பதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களைக் கொன்றுவிட ஏவினான்.
   நிறை மாத கர்ப்பிணியாக இருந்த, அரசியைக் கண்டு   மனமிரங்கினான் படைத்தளபதி அப்பாவியான அவர்களைக் கொல்ல மனமின்றி, எப்படியோ  தலைமறைவாக உயிர் பிழைத்து வாழட்டும் என்ற நல்லெண்ணத்தில், கட்டிலோடு அவர்களை  காட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு விட்டான். வினாயகரின் பக்தர்களான அவர்கள், தன் நிலை உணர்ந்து தங்களை ரட்சிக்கும் படி பெருமானை வேண்டினர்.
தன் தளபதியின் செயலை ஒற்றர்கள் மூலம் அறிந்த தூமாசுரன், தானே அவர்களை அழிக்கப் புறப்பட்டான். 
அவன் சென்ற சமயம் விநாயகப் பெருமான், விஷ்ணுவின் அம்சமாக, குழந்தையாக, அன்னையின் மடியில் தவழ்ந்து, களித்தவாறு இவன் வருகைக்காகக் காத்திருந்தார்.
       குழந்தை பிறந்ததைக் கண்டு முதலில் திடுக்கிட்டாலும், சிறு குழந்தை தானே! இதனிடம் என்ன ஆற்றல் இருக்கமுடியும்? இதன் மேல் தனது முக்கிய ஆயுதமான புகையைக் கக்கினால், மூச்சுத் திணறி இறந்து விடும் என இறுமாப்புக் கொண்டான்.
ஆனால், நிகழ்ந்ததோ! அவன் கக்கிய  புகையை  எம்பெருமான்,  அனைத்தையும் தன் வாயினுள் விழுங்கி வைத்துக் கொண்டார். 
இவ்வளவு புகைகளைக் கக்கியும் தனக்குத் தான் சோர்வாக உள்ளதே தவிர, குழந்தையைச் சுற்றி புகை மூட்டமுமில்லாமல், குழந்தை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கலவரமானான்.
image.png
 இதுவே தக்க சமயம் என்றெண்ணிய பெருமானும், தன் வாயில் அடக்கி வைத்திருந்த விஷப்புகையை அவன் மேலேயே கக்கினார். அந்த விஷப் புகைகள் அவனையும் அவனது சேனைகளையும் அழித்தது. அதனால், விநாயகப் பெருமான் "தூமகேது" என போற்றப்படுகிறார்.
image.png

5 comments:

  1. Very informative article. Unknown facts about vinayaga peruman. Vinayaga peruman attracts children n motivates them worship God from tender age.

    ReplyDelete
  2. 🙏🙏🙏😀😄 நன்றி.

    ReplyDelete
  3. Very interesting mam.
    Many unknown facts.
    Thank you for this article.

    ReplyDelete
  4. Very useful info
    Should b passed on to next gen also

    ReplyDelete
  5. தெரியாத ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் அடங்கிய ஒரு கட்டுரை (பொக்கிஷம்)

    ReplyDelete