Wednesday 25 December 2019

                                                                  கபில சஷ்டி
            
                               வருடங்கள்  60 உருவான கதையைப் பற்றி அறிவோமா!    

ஒருமுறை நாரதமுனிவர் கிருஷ்ண பரமாத்மாவிடம் இல்லற தர்மத்தை விட  ப்ரஹ்மச்சரியமே சிறந்தது என விவாதித்தார். கிருஷ்ணரோ நீர் திருமணம் செய்துகொண்டு இல்லற தர்மத்தை அனுபவித்தால் தான் உமக்குப் புரியும் ஆகையால் அவரை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். ஆனால், அவருக்கேற்ற பெண் யாரும் கிடைக்கவில்லை. 

  
image.png


அப்பொழுது, கிருஷ்ணர் அவரை கங்கை நதியில் நீராடி வரும்படி கூறினார். அதன்படி,நாரதர் கங்கையில் மூழ்கி மேலெழும் பொழுது கிருஷ்ணரின் லீலையால் தான் பெண்ணாக மாறியதை உணர்ந்தார். நீராடி வெளியே வந்தபொழுது எதிரில் ஒரு மகானைக் கண்டார். பெண்ணான நாரதரின் விருப்பத்திற்கிணங்கி அந்த மகான் அவரை திருமணம் புரிந்தார். அந்த இல்லற வாழ்க்கையில் அவருக்கு 60 குழந்தைகள் பிறந்தன. ஆனால் இந்த இல்லறக் கடமைகள் பெண்ணுரு கொண்ட நாரதரை மிகுதியாகக் களைப்படையச் செய்தன. உடன் கிருஷ்ணரை மனமுருக வேண்டி, பெண்ணுரு மாறி தன்னுருவாக நாரதராக மாறினார்.

                ஆனால் அவர் ஈன்றெடுத்த 60 குழந்தைகளும், தாய் அன்பிற்காக ஏங்கித் தவித்து கதறின. கருணை கூர்ந்து கிருஷ்ணரும், அக்குழந்தைகளை அமைதியுறச் செய்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு வருடத்திற்க்கான ஆதிக்கத்தை வழங்கியருளினார்.  இப்படியாக 60 ஆண்டுகளின் சுழற்சி முடிவில் கிருஷ்ணனால் நாரதர் திரும்பவும் தன் ஆண் வடிவம் கொண்ட தினமே 'கபில சஷ்டி' ஆகும்.  செப்டம்பர் 20 .2019 ஆம்தேதி வெள்ளிக்கிழமை 60 வருடங்களுக்குப் பிறகு வரக்கூடிய "கபில சஷ்டி " தினம்.


No comments:

Post a Comment