Monday 8 November 2021

ஸ்கந்த சஷ்டி விழா. 2021


முசுகுந்த சோழச் சக்கரவர்த்திக்கு முருகன் அருளிய கதை 

இவர் திரேதா யுக காலத்தில் ராமபிரானுக்கும்   மூத்தோராக  அறியப்படுகிறார்.              

 ஒருமுறை ஒரு அடர்ந்த பூஞ்சோலையில், பரமேஸ்வரன் தன் மனதுக்கினிய பார்வதி தேவியுடன் பிரவேசித்து, பெரிய வில்வ மர்த்தினடியில் அமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டார். அது சமயம், சிவபிரானின் தலையில் பொல பொலவென்று வில்வ இலைகள் விழந்தவண்ணம் அவரது தியானத்திற்கு இடையூறு விளைவிப்பதை கவனித்த அன்னை பார்வதிதேவி, இவ்விலைகள் தானாக மரத்திலிருந்து விழுவது போல் இல்லையே! என சந்தேகித்து அம்மரத்தை அண்ணாந்து நோக்கினாள். 



 அப்பூஞ்சோலையில் வசித்து வந்த குரங்கு ஒன்று விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து, சிவன் தலையில் போட்டுக் கொண்டிருந்ததைக்  கண்டாள். அன்னையின் பார்வை தீக்ஷன்யத்தினால்,  ஞானம் பெற்றதோடு, தான் தன் குறும்புத்தனத்தால் தவறு செய்ததை உணர்ந்தது அக்குரங்கு. உடன், அமைதியாக மரத்திலிருந்து இறங்கி வந்து சிவபார்வதி கால்களில் விழுந்து வணங்கியது. இருவரும் மகிழ்ந்து, வில்வஇலையால் எம்மை பூஜித்ததன் பலனாய், அடுத்த பிறவியில், சக்கரவர்த்தியாக சிறப்புறுவாய் என அருள் மொழி கூறினார் எம்பெருமான். 



தவறு செய்த எனக்கு அருள் செய்த எம்பிரானே, வசதி, பதவி, பட்டம் இவைகள் கர்வத்தையும் அதனால் கேடையும்  விளைவிக்கும். அதனால், எனக்கு இந்த முற்பிறவி ஞாபகம் இருக்கும் வண்ணம் இக்குரங்கு முகத்துடனேயே பிறந்து பக்தி மனம் மாறாமல் இருக்கவேண்டும் என வேண்டியது. 
 அவ்வண்ணமே, சிவனருள் பெற்ற, குரங்கு முகம் காரணமாக "முசுகுந்த சக்கரவர்த்தி" என்ற பெயருடன், ஞானம் , கல்வி, வீரம், அமானுஷ்ய சக்தி, அஷ்டமாசக்தி என அனைத்தையும் பெற்றதோடு தேவர் தலைவனான இந்திரனின் நட்பையும் பெற்றார்.
      ஒருமுறை இந்திரனுக்காக அரக்கர்களுடன் போரிட்டு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்ததற்குப் பரிசாக, முசுகுந்தன் விரும்பும் எதுவும் தரத் தயாராக இருந்தார் தேவேந்திரன்  பலமுறை தேவலோகம் செல்லும் பொழுதெல்லாம், தேவேந்திரன் "ஸோமாஸ்கந்த" மூர்த்தியை வழிபட்டு வருவதைக் காண்பார். ஸோஂமாஸ்கந்தன் என்றால் பார்வதி பரமேஸ்வரன் நடுவில் சிறு பாலகனாய் முருகன் வீற்றிருக்கும் அழகே! அது.. 
         இதுதான் சமயம் என்று அச்சிலைகளையே தனக்குப் பரிசளிக்க வேண்டினான். இதை சற்றும் எதிர்பாராத இந்திரனுக்கு, கொடுக்க மனமில்லாதாதாயினும் தன் உற்ற நண்பனுக்கு கொடுத்த வாக்கை மீறவும் விருப்பமில்லை. அதனால், அதுபோலவே இன்னும் 6 சிலைகளை உருவாக்கி அதில் சரியானதை தேர்வு செய்து கொள்ளச் செய்தான். ஆயினும் மனம் கலங்காமல், எம்பிரானைத் துதித்து, உண்மையானதை தனக்கு காட்டியருள பிரார்த்தனை செய்தார் சக்கரவர்த்தி.

        சிவனாரும் தன் சக்தியை உண்மையான சிலையினுள்  செலுத்தி,   'அஜபா' நடனம் ஆடிக் காண்பித்தருளினார். இந்திரனும் மகிழ்ந்து, முசுகுந்தனின் முற்பிறவிப் பலனை உணர்ந்து அனைத்து சிலைகளையும் பரிசளித்தான். 
     மகிழ்வோடு நாடு திரும்பிய முசுகுந்தனை, கந்தனின் திவ்ய அழகு வசீகரித்துக் கொண்டே இருந்தது. முருகப் பெருமானிடத்தில் அளவிலாத பக்தி மனத்தைப் பெருகச் செய்தது. 
        அச்சமயம், சூரபத்மனால், தோற்கடிக்கப்படு, அவமானத்தால், தலைமறைவாக இந்திராணியையும் பிரிந்து வாழ்ந்து துன்புற்றார் தேவேந்திரன்.

 சிவபிரானின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதனால் கார்த்திகேயன் என புகழ் பெற்றார். தந்தையின் கட்டளைப்படி, முருகப்பெருமானும், அன்னை தந்தையின் ஆசியொடும், அன்னையிடமிருந்து   சக்திவேலைப் பெற்று.சூரபத்மனை வென்று, தேவலோகத்தை மீட்டு, திரும்பவும் இந்திரனை அரியணையில் அமர்த்தினார்  
               இத்தகைய மாபெரும் உதவி புரிந்து அருள் செய்த முருகப் பெருமானுக்கு நன்றியின் அடையாளமாக மிகச் சிறந்த பொருளை  காணிக்கையாக்கத் துடித்தார் தேவேந்திரன். எதைக் கொடுப்பது என்று யோசித்தவேளையில், நித்தம் முருகனையே நினைத்து உருகும் நம் மகள் 'தேவயானையையே" முருகனுக்கு மணமுடித்துக் கொடுப்போம் என யோசனை கூறினாள். இந்திராணி.
   இதுவே சரியான பரிசு என்று மகிழ்வோடு கூவி ஆனந்தித்து, அதற்கான தக்க ஏற்பாட்டையும் முறைப்படி செய்தார் இந்திரதேவன்.  'திருப்பரங்குன்றத்தில்' திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. . 


உடன் அவருக்கு தனது நண்பன் "முசுகுந்தன்" நினைவு வரவே, அவரையும் அழைத்து வரச் சொல்லி தேவகணங்களை அனுப்பினார்.
     தேவகணங்கள் கூறிய விஷயங்கள், முசுகுந்தனது காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. எததனை காலங்களாக முருகப் பெருமானின் தரிசனத்திற்கு காத்திருந்தோம். இங்கே அருகிலேயே தரிசனம் தர எம்பெருமான் இருப்பதைக் கேட்டதும், அவருக்கான பரிசுப் பொருளோடு செல்லவேண்டும் என மனம் விழைந்தது. ஆயினும் இவை அனைத்துமே அவனருளியது. அம்மட்டில் ஐயனுக்கு அளிக்கவேண்டியது தூயமையான பக்தி உள்ளமே அன்றி வேறொன்றுமில்லை என மனம் தெளிந்து விரைந்து ஓடோடிச் சென்றார். 



                                      ஆனால், அவருக்கு முன்பாக   பல்லாயிரக்கணக்கனவர்கள்   எம்பெருமானின் திவ்ய தரிசனத்திற்காக காத்திருப்பதைக் கண்டு, தனக்கு எம்பெருமானின் தரிசனம் கிடைக்காதோ?! என ஐயமுற்று, முருகனின் நாமத்தை உச்சரித்தவாறே பக்தி பெருக்கோடு மனம் விம்மினார் முசுகுந்த சக்கரவர்த்தி.
  பக்தனின் மனம் அறிந்து, அனைவரையும் விலக்கி, முருகப் பெருமானே அவரை நாடி வந்து தரிசனம் தந்தார். ஐயனே! யான் செய்த பாக்கியம் எனக்கு இப்புவி வாழ்வு போதும் ஆட்கொள்வாய் அப்பனே! என அரற்றினார் சக்கரவர்த்தி. 



முருகப்பெருமானும் அவரை அன்புடன் நோக்கி அதற்கான காலம் இன்னும் கனியவில்லை முசுகுந்தா! இன்னும் உனக்கான பணிகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் திறம்பட முடித்து, பெரும் புகழுடன் எம்மை வந்தடைவாய் என அருளினார்.  
ஐயனே! என் மனம் உன்னைக் கண்டதும், அரசாள்வதில் நாட்டம் செல்லவில்லை. ஆயினும் உன் கட்டளைப்படி நடக்க இயலாமல் போனால், நாட்டிற்கே கேடு விளைவிப்பதாக இருக்கும் என இறைஞ்சினார். கவலை கொள்ள வேண்டாம். வீரபாகு முதலான எனது படைத் தலைவர்கள் ஏழு பேர்கள், உனக்கு படைத் தலைவர்களாக இருந்து நாட்டை ஆள்வதில் உதவி புரிவர். 
    சூரபத்மன் அரக்கன் ஆனாலும் சிறந்த சிவபக்தன் ஆனதால், சூரபத்மனின் படைகளை நிர்மூலமாக்கிய பாவங்களும் அவர்களை விட்டு அகலவேண்டும் ஆதலால், அவர்கள் உம்முடன் இருந்து நாடாள்வதில் உதவி புரிந்து தங்கள் பாவங்களைக் கரைத்து அவர்களும் முக்தி பெறுவர் எனக் கூறியருளினார் முருகப் பெருமான்.


எப்பேர்ப்பட்ட பக்தி நெறி ஆனாலும், அது குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்பதை உணர்ந்தார் சக்கரவர்த்தி. குரு கடாக்ஷம் பெற்றால் தான் பக்தி முழுமையடையும் என்ற உண்மை உரைக்க, நேராக வசிஷ்ட மஹரிஷியிடம் விரைந்து, தனக்கு குருவாக விளங்கி உபதேசிக்க வேண்டும் என பணிந்து வணங்கி நின்றார் சக்கரவர்த்தி. 



வசிஷ்டரும் மனம் மகிழ்ந்து, திருமுருகனின் நாம மந்திர உபதேசம் செய்து, ஜபம், பூஜை செய்வதற்கான மந்திர வழிபாட்டையும் கூறி அருளினார். அவ்வண்ணமே தினம் பக்தி நெறி தவறாமல் நாட்டை ஆண்ட முசுகுந்த சக்கரவர்த்தி, பல்லாண்டுகள் சிறப்புற ஆட்சி செய்தபின், முருகன் திருவடி அடைந்தார். அங்ஙனமே வீரபாகு முதலான ஏழ்வர் படைத் தலைவர்களும், புவி வாழ்விலிருந்து முக்தி பெற்று முருகனடி சேர்ந்தார்கள்.

5 comments:

  1. நம் ஆன்மிகத்தில் நடந்த ஆனால் அதிக அளவில் அறியப்படாத தகவல் கொடுத்து எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறீர்கள் மிக்க நன்றி

    ReplyDelete
  2. திருமதி வசந்தி பாலு மேடம்

    மகாபாரதம் முழுக்க பல கிளைக் கதைகள் இருப்பது.போல் ஒவவொரு சரித்திரத்திலும் பல கிளைக் கதைகள் உள்ளன என்று அறிந்தோம்.
    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  3. இறையருளால் கடைசி மூச்சு உள்ளவரை இப்பணி தொடர தங்களைப் போன்றோரின் ஆசியும் அன்பும் ஆதரவுமே முமு காரணம். மிக்க நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  4. அடடா ! ஒரு சின்னஞ் சிறிய நற்காரியம் செய்தால் எத்தனை நற்பலன்கள் !!
    (வில்வ இலைகளை சிவபெருமான் தலையில் வேண்டுமென்றே போட்டாலும் கூட).
    குரங்கு becomes முசுகுந்த சககரவர்த்தி becomes friend of தேவேந்திரன், getting gift of சோமாஸ்கந்தர் சிலை from him (முருகன் அருளால் choosing the correct சிலை out of six such duplicate சிலைகள்)
    முருகப் பெருமான் தேவேந்திரன் மகளான தெய்வானையை மணந்தது , அரக்கனே ஆனாலும் சிவ பக்தனான சூரபத்மனை கொல்ல வீரபாகு மற்றும் சிலர் உதவி புரிந்ததால் அதற்கும் தண்டனை உண்டு (பூலோகத்தில் பிறப்பது)
    என்று குரங்கின் ஒரு சிறிய நற்செயலால் எத்தனை எத்தனை தொடர்புடைய கிளைக் கதைகள் மகாபாரதம் போல்)

    சூப்பர் வசந்தி பாலு மேடம்
    தாங்கள் ஒரு வரலாற்று களஞ்சியம் !!!!

    - V. Sugavanam

    ReplyDelete