Monday 22 November 2021

முருகன் பாடல்கள்


இயற்றியவர்
சுப்பராம பாகவதர்

ராகம்: மாயாமாளவகௌள  தாளம் ; ஆதி

                            பல்லவி 

சரவணபவகுஹனே - உன்னை
சரணடைந்தேன் காத்திடுவாய் என்னை

                      அனுபல்லவி

அரவணை மேல் துயில் கொள்ளும் அந்த 
ஆதிபுருஷனின் மருமகனே  (--)

                           சரணம் -1

திருகயிலையில் ஒரு முழு கனி வென்றிட 
செருக்குடனே உலகை வலம் வந்தாய் 
குறுக்கு வழியில் விநாயகன் கனி பெற 
வெறுப்புடன் பழனி குன்றினில் நின்றிடும்  (--)

                            சரணம் - 2

வேலனும் வேடனும் விருத்தனுமாகிய 
வேடம் புனைந்தொரு மாதை மணந்திட 
நாடகமாடிய நாயகனே திருநீலகண்டனுக்கு ஞாலம் உரைத்த  (--)
 

8 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்
    நீங்கள் பாடிய சரவணபவகுஹனே பாடல் கேட்க அருமையாக இருந்தது

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  2. நன்றி.😄😇🙏🙏🙏

    ReplyDelete
  3. மிக்க நன்றி உங்கள் குரல் இனிமையாக இளமையாக இருக்கிறது

    ReplyDelete
  4. திருமதி வசந்தி பாலு மேடம்

    உங்கள் குரலில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது.

    அற்புதம்

    - V. Sugavanam

    ReplyDelete
  5. நன்றி. மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏

    ReplyDelete
  6. Excellent rendition. U hvnot even used shruti box for back round. Very nice voice. "2vadhu saranathula gnalam uraithava or gnanam uraithava? "

    ReplyDelete
  7. மிக அருமையான முருகன் பாடலை இனிமையாக பாடி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்

    ReplyDelete
  8. மிகவும் அருமையான குரலில் அழகான பாடல்

    ReplyDelete