Thursday 9 December 2021

நந்த சப்தமி 10.12.2021.வெள்ளிக்கிழமை.

  கேட்பதை அருளும் காமதேனு


டிச. 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கார்த்திகை மாதம் சுக்ல பட்ச சப்தமி திதி. இதனை "நந்த சப்தமி" என்று அழைப்பர். இந்த நாளில் "கோ பூஜை" செய்வது மிகச் சிறந்த விசேஷமாகக் கூறப்படுகிறது.  அதிலும் கார்த்திகை மாத சப்தமி திதி வெள்ளிகிழமையில் இந்த வருடம் அமைந்து வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.   

  பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் அல்லது "கோ சாலையில்"  கோ பூஜை நடைபெறும்.

பசுக்களில் "காராம்பசு" உயர்வாகக் கருதப்படுகிறது. மண்ணில் பல ஆண்டுகளாக புதையுண்ட நிலையில் இருந்த தெய்வச் சிலைகளை, இத்தகைய காராம்பசுக்கள் புல் மேயும் போது அறிந்து கொண்டு தானாகவே அவ்விடத்தில் பாலைச் சொறிந்து அபிஷேகம் செய்வதையும், அதைக் கண்டு ஊரார், அவ்விடத்தில் இருந்து சிவலிங்கம் அல்லது பல்வேறு தெய்வச் சிலைகளைக் கண்டெடுத்த அதிசய வரலாற்றை நாம் கேட்டிருப்போம். 



 அப்படிப்பட்ட தெய்வீக சக்தியை ரகசியங்களை உணரக் கூடிய சக்தி இத்தகைய பசுக்களுக்கு உண்டு. 



  காராம்பசுவின் மடிக் காம்புகள் சிறியவையாக இருக்கும். எல்லாவகை புற்களையும் அது மேயாது. தேர்ந்தெடுத்து சில வகைப் புற்களை மட்டுமே உண்ணும். இத்தகைய பசுவினது பால், அதிக சுவையும், சக்தியும், மருத்துவ குணமும் நிறைந்ததாக இருக்கும். 

     பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது சுக்ர ஓரையில் [வெள்ளியன்று காலை 6 மணிமுத்ல் 7மணி வரை சுக்ர ஓரை}கோபூஜை செய்வது முழு பலனையும் தரவல்ல அதி உத்தமான நல்ல நேரம். அப்படி இல்லையென்றாலும் மாட்டுத் தொழுவத்திலோ கோயில்களில் நடக்கும் கோபூஜையிலோ கலந்து கொண்டு வழிபடுவதும் சிறப்பு. அதுவும் தவிர, வீதியில் பசு மாட்டினைக் கண்டால் கூட அதற்கு அருகம் புல்லையோ அல்லது அகத்திக் கீரையையோ உண்பதற்கு கொடுத்து, பசு மாட்டின் பின் பக்கம் வால் பகுதியை தொட்டுக் கும்பிடுவதும் நல்ல பலனைத் தருவதாகும். 



ஏனெனில், பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதிலும் குறிப்பாக, அதன் வால் பகுதி, 'மஹாலஷ்மியின்' இருப்பிடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!. 

   காமதேனு பசுவும் நந்தினி கன்றுடன் கூடிய சிலையோ அல்லது படத்தையோ வைத்தும் கூட  நாம் வீட்டிலும் பூஜை செய்யலாம். 
இதனால் திருமணத்தடை முதல் நம் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்க்கான அனைத்து  தடைகளும் விலகும் என்பது நம்பிக்கை.
அத்துடன், செல்வ வளம் பெருகும். ஆரோக்கியம் கூடும் என்பதும் உண்மை. ஆம் கொடிய தோல் சம்பந்தமான வியாதிகள் கூட கண்டிப்பாக குணமடையக் கூடிய சக்தியைக் கொண்டது கோமியமும், பசுஞ்சாணமும் என்பது நிதர்சனமான உண்மை. 

"கொடிய தோல் வியாதியால் பீடிக்கப்பட்டு துன்புற்று தன்னிடம் வந்தவரை, 'ரமண மகரிஷி '  மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை அளித்து, அவரது வியாதியை குணப்படுத்தினாராம்".


பசு மாட்டின் கோமியம், சாணம் இவை கிருமி நாசினியாக செயல்படும் என்பதால் நாம் வழிவழியாக தொன்றுதொட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதும், பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து வாசல் தெளிப்பதும் வழக்கத்தில் உள்ளதல்லவா?!  மற்றும் பால், தயிர், வெண்ணெய், நெய் இவை எல்லாமே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக மருத்துவ குணம் நிறைந்ததாக அறிவியல் ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?! 
  
இத்தனை சிறப்புகளை தன்னகத்தே கொண்டும், சாதுவான பிராணியாகவும் வலம் வரும் கோமாதாவை வலம் வந்து நலம் பெறுவோம். 
இதன் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே, சின்னக்கண்ணன் பசுக்கூட்டத்துடனேயே வாழ்ந்து 'கோ குல' கண்ணனாக திகழ்ந்தானோ?!!!.




5 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்
    நாளை (10.12.21) கார்த்திகை மாத சுக்லபட்ச சப்தமி திதி அன்று வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருகிற நந்த சப்தமி என்று அழைக்க கூடிய நன்னாளில் கோ பூஜை கோவில்களில் செய்யும் வழக்கத்தை அறிந்து கொண்டோம்.

    நாளை காலை 6 ல் இருந்து 7 மணிக்குள் கோவிலுக்குச் சென்று கோபூஜை பார்க்க இருக்கிறோம்.

    மண்ணில் புதையுண்டு இருந்த தெய்வச் சிலைகளுக்கு காராம் பசுக்கள் மூலம் பாலபிஷேகம் நடந்ததை அறிந்தோம்.

    காராம்பசுக்களின் மகத்துவத்தையும் அறிந்தோம்

    பசுக்கள் தரக்கூடிய ஒவ்வொன்றிலும் மருத்துவ குணங்கள் மிகுந்து இருப்பதை அறிந்தோம்.

    பசுக்களின் அங்கம் முழுவதும் தெய்வங்கள் வியாபித்து இருப்பதையும், வாலை தொட்டு வணங்க வேண்டும் என்றும் அறிந்தோம்.

    ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் பசுவுக்கு அகத்திக் கீரை மற்றும் அருகம்புல் கொடுப்போம்.

    தங்களின் இந்த அருமையான பதிவுக்கு மிகுந்த நன்றி.

    - V. Sugavanam

    ReplyDelete
  2. Very good Yes we know Kaaram pasu s special among cows n rare t find nowadays But behind this there s so much info Tku Vasanthi

    ReplyDelete
  3. G. Meenalochani
    Nanda saptami vivaram arindu kondom. En mahan Aravind andru Andha poojai seidhu vittu than velaikku Ponan. Andha gomathavin arulodum en mahalukku Nalla pennaha amaiya vendum. Tangal padivirkku nandri. Vazlha valamudan nalamudan

    ReplyDelete