Wednesday 8 December 2021

"குக்கே சுப்பிரமணியர்" சுப்பிரமண்ய சஷ்டி, சம்பா சஷ்டி.

 




டிசம்பர் 9 ஆம் தேதி வியாழக்கிழமை ''சுப்பிரமண்ய சஷ்டி மற்றும் சம்பா சஷ்டி " விசேஷம் நிறைந்தது. முருகபெருமான் தாரகாசுரன் மற்றும் பத்மாசுரனின் சம்ஹாரத்திற்கென அவதரித்தவர். இவர் தேவ சேனாதிபதியாகவும், அனைத்து தெய்வங்களிலும் தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குபவர். 

ஐப்பசி மாத சூரசம்ஹாரத்தை அடுத்து வரும் இந்த கார்த்திகை மாத சுக்ல பக்ஷ சஷ்டியில் 

      "குக்கே சுப்பிரமணியர்"

திருத்தலத்தில்  சுப்ரமணிய சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

இத்தலத்தில் விசேஷமாக முருகபெருமானை நினைத்து "ஸ்நானமும், தானமும்" செய்தால் நம் அனைவரது பாவங்களும் விலகும். ஸர்ப்ப தோஷமும் விலகும் என்பது ஐதீகம். 

கர்நாடக மாநிலததில் மங்களூர் அருகில் "குக்கே" எனும் கிராமத்தில், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, "குக்கே சுப்பிரமணியராக" அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.




            காஷ்யப முனிவரின் மனைவிகள் வினதை மற்றும் கத்ரு. கருடனின் தாயான வினதையை, நாகர்களின் தாயான கத்ரு, வஞ்சகமாக போட்டி ஒன்றை வைத்து தன் மகன்களான நாகர்கள் மூலம் வினதையை தந்திரமாக தோல்வியுறச் செய்து அடிமைப்படுத்தினாள். இதையறிந்த கருடன், தாயை  மீட்டதோடு நாகர்களை பழிவாங்கலானார்.

கருடனுக்கு பயந்து நாகர்கள் தலைவனான வாசுகி தன் நாகர் கூட்டத்துடன், தங்களின் குலதெய்வமான சிவபிரானை தஞ்சம் அடைய, சிவனார் முருகபெருமானை அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க பணித்தார்.அவ்வண்ணமே நாகர்களை ஆட்கொண்ட விதமாக, முருகப்பெருமானும் 'குமரமலையில்' குகை கோயிலில் சுப்பிரமணியராக, ஐந்து தலை நாகம் குடையாக இருக்க அருள்பாலிக்கிறார். 
தங்களை ஆட்கொண்டு காப்பாற்றிய முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகராஜன் வாசுகியே ஐந்து தலை நாகமாக குடையாக காட்சியளிக்கிறது

இந்த குமரமலையை பாதுகாக்கும் விதமாக அருகில் ஆறு தலை நாக வடிவில் "சேஷமலை" அமைந்துள்ளது சிறப்பு அம்சம். 
அதனால் ஆதிசேஷனின் நக்ஷத்திரமான ஆயில்ய நக்ஷத்திரத்தன்று நாகதோஷ பரிகார பூஜை இத்திருக்கோயிலில் விசேஷமாக கருதப்படுகிறது.

         சாம்பசிவனான சிவபெருமானின் அருளால், கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் குழந்தை பிறந்ததால், 'சாம்பன்' என பெயரிட்டனர். துருவாச முனிவரால் 'குஷ்டரோகம்' பீடிக்க சபிக்கப்பட்டதனால், இத்தல முருகனை வழிபட்டு, இதே போன்றதொரு திருநாளில் சாப நிவர்த்தி பெற்றான் சாம்பன். அதனால் 'அவன் பெயரால் 'சம்பா சஷ்டி' எனவும் அழைக்கப்படுகிறது. 

8 comments:

  1. அருமையான கட்டுரை.. உயர்ந்த படைப்பு..

    ReplyDelete
  2. அருமையான பதிப்பு

    ReplyDelete
  3. முருகனின் சிறப்புகளில் மேலும் ஒரு சிறப்பினை இக்கட்டுரையின் மூலமாக தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அள்ள அள்ளக் குறையாத நம் ஆன்மிகச் செய்திகளை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் உள்ள சுகமே தனி தான். மேலும் அந்த இறை அனுபவத்தை உணரமுடிகிறது. அனைவருக்கும் எனது நன்றிகள் பலப்பல.

    ReplyDelete
  5. G. Meenalochani
    Muruha perumanin sirappuhalil Iduvum ondru. Super

    ReplyDelete
  6. நன்றி எனதருமை தோழி விஜயா.🙏🙏🙏

    ReplyDelete