Saturday 18 December 2021

சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா".

                தேர்த்திருவிழா.



மார்கழி 4 ஆம்தேதி டிச. 19 .2021 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் சிதம்பரம் கோயில் தேர்த்திருவிழா".  "சிவகாமி அம்மை உடனுறை நடராஜ பெருமான்" தேரில் பவனி வரும் காட்சி.கோயிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இயலாத முதியவர்கள் நோயாளிகள் போன்றவர்களுக்காக அந்த நாளில் கோயில் போன்றே அமைப்புடைய தேரில் இறைவனே எழுந்தருளி  நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக தன் பக்தர்களுக்கு   காட்சியளிப்பதாக ஐதீகம்.


image.png

கோயிலின் கர்ப்பகிரஹம் போன்றே தேரும், உபபீடம், அதிட்டானம், பாதம் மற்றும் கோபுர விமானம் போன்றே அமைக்கப்படுகிறது. அந்தந்த ஊரின் தல வரலாற்றை விளக்கும் விதத்தில் அழகிய சிற்பக் கலைகளுடனும், பல வண்ணக் கலவைகளுடன் விளங்கும் ஆலவட்டங்கள் தோரணங்கள் என அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

முன்னே வேத விற்பன்னர்கள் வேத கோஷம் முழங்க,, ஓதுவார்கள் தேவாரம் இசைத்தும், நடன்மணிகள் நாட்டியம் ஆடியபடியும், நாதஸ்வர மேள தாளத்துடனும் கன கம்பீரமாக தேர் அசைந்து ஊர்ந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும். 

ஊர் கூடித் தேர் இழுத்தல்  எனும் ஒற்றுமையை விளக்கும் விதமாக, அனைத்து தரப்பு மக்களும் தேர் வடம் எனும் அந்தக் கயிற்றைப் பிடித்து பக்தியுடன் இழுத்து வருவர். 

2 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்
    மார்கழி நான்காம் தேதியான இன்று (19.12.21) சிதம்பரத்தில் "சிவகாமி அம்மை உடனுறை நடராஜ பெருமான்" தேர் திருவிழாவாக இன்று நான்கு வீதிகளிலும் கோவில் போன்ற அமைப்புடைய அதாவது கர்ப்பக்கிரகம், பீடம், பாதம், கோபுர விமானம் போன்ற அமைப்புடைய தேரில் காட்சியளிப்பதை அழகாக விவரித்து இருந்தீர்கள்.

    கோயிலுக்கு வர முடியாதவர்கள் தரிசிக்கும்படி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வருதலும் இறைவன் பக்தர்களைத் தேடி செல்வது சிறப்பு.

    நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete