Wednesday 25 December 2019

                                                                  கபில சஷ்டி
            
                               வருடங்கள்  60 உருவான கதையைப் பற்றி அறிவோமா!    

ஒருமுறை நாரதமுனிவர் கிருஷ்ண பரமாத்மாவிடம் இல்லற தர்மத்தை விட  ப்ரஹ்மச்சரியமே சிறந்தது என விவாதித்தார். கிருஷ்ணரோ நீர் திருமணம் செய்துகொண்டு இல்லற தர்மத்தை அனுபவித்தால் தான் உமக்குப் புரியும் ஆகையால் அவரை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். ஆனால், அவருக்கேற்ற பெண் யாரும் கிடைக்கவில்லை. 

  
image.png


அப்பொழுது, கிருஷ்ணர் அவரை கங்கை நதியில் நீராடி வரும்படி கூறினார். அதன்படி,நாரதர் கங்கையில் மூழ்கி மேலெழும் பொழுது கிருஷ்ணரின் லீலையால் தான் பெண்ணாக மாறியதை உணர்ந்தார். நீராடி வெளியே வந்தபொழுது எதிரில் ஒரு மகானைக் கண்டார். பெண்ணான நாரதரின் விருப்பத்திற்கிணங்கி அந்த மகான் அவரை திருமணம் புரிந்தார். அந்த இல்லற வாழ்க்கையில் அவருக்கு 60 குழந்தைகள் பிறந்தன. ஆனால் இந்த இல்லறக் கடமைகள் பெண்ணுரு கொண்ட நாரதரை மிகுதியாகக் களைப்படையச் செய்தன. உடன் கிருஷ்ணரை மனமுருக வேண்டி, பெண்ணுரு மாறி தன்னுருவாக நாரதராக மாறினார்.

                ஆனால் அவர் ஈன்றெடுத்த 60 குழந்தைகளும், தாய் அன்பிற்காக ஏங்கித் தவித்து கதறின. கருணை கூர்ந்து கிருஷ்ணரும், அக்குழந்தைகளை அமைதியுறச் செய்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு வருடத்திற்க்கான ஆதிக்கத்தை வழங்கியருளினார்.  இப்படியாக 60 ஆண்டுகளின் சுழற்சி முடிவில் கிருஷ்ணனால் நாரதர் திரும்பவும் தன் ஆண் வடிவம் கொண்ட தினமே 'கபில சஷ்டி' ஆகும்.  செப்டம்பர் 20 .2019 ஆம்தேதி வெள்ளிக்கிழமை 60 வருடங்களுக்குப் பிறகு வரக்கூடிய "கபில சஷ்டி " தினம்.


Tuesday 24 December 2019

மஹாளயபட்சம் சிறப்பு 2019

       மஹாளய பக்ஷம்                          2019



  •     புரட்டாசியில் பௌர்ணமியை அடுத்து வரும் 15 நாட்கள் பிதுருக்களுக்கு உரித்தான மஹாளய பக்ஷம் அல்லவா?. இந்த தினத்தில் நம் முன்னோர்கள் யமதர்ம ராஜனின் அனுமதியுடன் இப்பூவுலகிற்கு தங்களின் இல்லத்தை சொந்தங்களை நாடி வருவர்.
  •                                                                             இந்த மஹாளய      தர்ப்பணம் யாருக்காக? எதற்காக? .


  • நம் தாய், தந்தை, தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்கள், பாட்டிகள்,சகோதரர்கள், மனைவி, மாமாக்கள், அத்தைகள், மகன், மகள், மருமகன், மருமகள், மைத்துனர், சகலை,நோயுற்ற தூரத்து உறவுகள், சந்ததி இல்லாதவர்கள் இவைகள் தவிர

  •  இரத்த சம்பந்த உறவுகள் இல்லாத தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் குரு, எஜமான், தொழிலாளி மற்றும் நண்பர்கள் என இவர்கள் அனைவருக்காகவும் செய்யப்படுவதால் இந்த மஹாளயபக்ஷம் மிகுந்த விசேஷம் நிறைந்ததாக போற்றப்படுகிறது.  

  • மஹாளய பக்ஷ 15 நாட்களும் விசேஷம் எனினும்,  பஞ்சாங்கத்தில் முக்கியமாக சில தினங்களை தனியாக சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கும் . அதனை விளக்கமாக அறிவோம்!.
  •                             மஹாபரணி 

  • வருகின்ற  புதன்கிழமை செப். 18. புரட்டாசி 1 ஆம்தேதி "மஹாபரணி" தினம். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஜனனம் முதல் மரணம் வரை நெருப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 
  • கார்ஹபத்யம், ஆவஹனீயம், தக்ஷிணாக்னி போன்று பலஅக்னி வகைகள் உள்ளன. ஆங்கீரஸர், தூம்ராக்னி மற்றும் அக்னிவேசர் போன்ற முனிவர்களால் அக்னி தேவன் இப்பூவுலகிற்கு அழைத்து வரப்பட்ட நாளே மஹாளய பட்சத்தில் வரும் மஹாபரணி ஆகும்.
  •  நித்ய சமையல் முதல் தீபம், மின் விளக்கு என பல வித வடிவங்களில் அக்னியின் பயன்கள் பலவித ரூபத்தில் நம்மிடையே புழக்கத்தில் உள்ளதல்லவா? நம் உடலிலும் உஷ்ணம் உள்ளது. ஏன்? நாம் உண்ட உணவை செரிமானம் செய்வதும்  கூட ஒருவகை அக்னியே!. 
  • அறிந்தோ அறியாமலோ  நெருப்பை தவறாக பயன்படுத்துவதால் {புகை பிடித்தல், சிறு உயிர்களை நெருப்பிலிட்டு துன்புறுத்துதல், கெட்ட எண்ணத்துடன் தீ வைத்தல் இன்னபிற}  அக்னி தோஷம் தாக்கக்கூடும்.   இத்தகைய தோஷங்கள் தாக்காமல் இருக்கவும், தீ விபத்து நிகழாமல் இருக்கவும், இந்த மஹாபரணி அன்று ஹோமம் செய்தல், வீடு மற்றும் கோயில்களில் பசு நெய் தீபம் ஏற்றுதல் தோஷ நிவர்த்தியாக விளங்கும் .
  •  இதைத் தவிர இந்த தினத்தில் "யமதீபம்" என நம் வீட்டு வாசல் தெளித்து கோலமிட்டு தீபம் ஏற்றியோ அல்லது வீட்டின்  மேற்கூரையில் அல்லது மொட்டை மாடியில் தெற்கு முகமாக அகல் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். ஏனென்றால் இந்த மஹாளயபட்ச தினங்களில்  இப்பூவுலகுக்கு வருகை தந்த நம் முன்னோர்கள் திரும்பிச் செல்லும் போது வெளிச்சம் காண்பிப்பது போல் ஆகும். 

  • அத்துடன்  மஹாளய பரணி நக்ஷத்திரம் யமதர்ம ராஜனின் "ஜன்ம நக்ஷத்திரம்" ஆகும். 

  • இதனால் பிதுருக்கள் நம்மை ஆசீர்வதிப்பதோடு இந்த யமதீபம் ஏற்றுவதால் பிதுருலோக அதிபதியான யமதர்மராஜனும் மனம் மகிழ்ந்து நமக்கு அருள்வதோடு நம் முன்னோர்களையும் கரையேற்றுவார் என்பது ஐதீகம்.    

  •                     மத்யாஷ்டமி

  •        அந்தவகையில் செப். 22 .2019 ஞாயிற்றுக்கிழமை 'மத்யாஷ்டமி". அதாவது, சிற்சில காரணங்களால் அவரவர்களுக்கு உரித்தான திதியில் தர்ப்பணம் கொடுக்க இயலாமல் போனாலோ அல்லது இறந்தவரின் திதி தெரியாமல் போனாலோ  இந்த 15 நாட்களில் நடுவே வரக்கூடிய அஷ்டமியில் திதி கொடுக்கலாம். நாள், வார, நக்ஷத்திரம் மற்றும் தோஷம் என்று இவைகளை பார்க்கத்தேவையில்லை.என்று இந்த மத்யாஷ்டமிக்கு ஒரு சிறப்பு நியதியினை வகுத்திருக்கிறார்கள்.
  •       
  •            அவிதவா  நவமி

  •      23.9.2019  ந்தேதி திங்கட்கிழமை "அவிதவா நவமி". 'விதவா' என்றால் முதலில் கணவன் இறந்தபின் இயற்கை ஏய்தியவர்.  அவிதவா என்றால் சுமங்கலியாக இறந்தவர் எனப் பொருள்.  சுமங்கலியாக காலமடைந்த பெண்களுக்கான தர்ப்பண தினம். இப்படி இந்த சுமங்கலிக்காக செய்யும் சடங்கில் 'திருமணத் தடை நீங்குவதோடு, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைவதும் புத்திகூர்மையான சந்ததியும் கிடைக்கப்பெறும் என்பது இதன் சிறப்பம்சம். அதுவும் அவர்தம் கணவர் உயிருடன் இருக்கும் வரை செய்யவேண்டும். . 
  •            ஸன்யஸ்த                          மஹாளயம்

  •   புதன்கிழமை 25 ந்தேதி "ஸன்யஸ்த மஹாளயம்" . துவாதசி திதியான அன்றைய தினம்  "சித்தி"அடைந்த சன்னியாசிகளுக்கு திதி கொடுத்தல் நலம். 

  •                     கஜச்சாயை 

  •    அடுத்த நாள் வியாழனன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும். 
  •         சஸ்திரஹத பிதுரு                மஹாளயம் 

  •  அடுத்த நாள் வெள்ளியன்று "சஸ்திரஹத பிதுரு மஹாளயம்". அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் அல்லது துர்மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அந்த நாளில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது நியதி.

28 .9.2019 சனிக்கிழமை அன்று "மஹாளயஅமாவாசை".

மேற்கூறிய ஒவ்வொரு திதிகளிலும் ஒவ்வொரு விதமான பலன்கள் அதைத் தவிர இந்த மஹாளய அமாவாசையில் திதி அல்லது படையல் கொடுப்பதால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அனைத்து பலன்களையும் நமக்கு ஆசிர்வதிக்கின்றார்கள்.   

image.png

சாரதா நவராத்திரி 2019

                                     நவராத்திரி




      ஆற்றலின் இருப்பிடமாக விளங்ககூடிய சக்திதேவியை வழிபடுவதே இந்த "நவராத்திரி" விழாவின் சிறப்பு. தக்ஷிணாயன புண்யகாலம் புரட்டாசி மாதம் இன்றைய தினம் 29.9.2019 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி திதி வரை பூஜிக்கப்படும் "சக்தி வழிபாடு" சாரதா நவராத்திரி என அழைக்கப்படும். 

   பிரளயம் முடிந்து இறைவன் திரும்பவும் உலகை படைக்க எண்ணிய பொழுது இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் உருவாயின. இவைகள் முறையே துர்கா,லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி என முப்பெருந்தேவிகளைக் குறிக்கும். முதல் மூன்று நாட்கள் துர்கா அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்குமான வழிபாட்டிற்க்குரியது.

       இந்த நவராத்திரியில் யோகிகள், ஞானிகள் "நவதுர்கா" பூஜையை பற்றி விசேஷமாகக் கூறுகிறார்கள். இந்த நவதுர்கைகள் முறையே, "சைலபுத்ரி, ப்ரஹ்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்ரி, மஹாகௌரி மற்றும் சித்திதாத்ரி". 

       இமவானின் மகளான தேவிசைலபுத்ரி. சைலம் என்றால் இமயமலை. அதனால் இவள் பார்வதி மற்றும் ஹேமவதி என அழைக்கப்படுகிறாள். யோகிகள் நவராத்திரியில் முதல் நாள் இத்தேவியை பூஜித்து தங்கள் யோக சாதனையை ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமான " மூலாதார சக்கரமாக" விளங்குகிறாள்.

    இரண்டாம் நாள் தேவி "ப்ரஹ்மச்சாரிணி. தபஸ் கோலத்துடன் கையில் கமண்டலம் ஏந்தியவளாய் விளங்கும் அன்னையை பூஜித்து இரண்டாம் சக்கரமான "ஸ்வாதிஷ்டானத்தை" அடைவர்.

மூன்றாம் நாள் தேவி சந்திர காண்டா. பிறை சந்திரனை சூடிய அன்னையை வழிபட்டு, மூன்றாம் சக்கரமான 'மணிபூரகத்தை" அடைவர். 

நான்காம் நாள் தேவி கூஷ்மாண்டா உலகின் படைப்பின் சக்தியாகவும், சூரிய மண்டலத்தை இயக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். அன்னையை பூஜித்து யோகிகள் 'அனாஹத சக்கரத்தை' அடைகிறார்கள்.

ஐந்தாம் நாள் தேவி ஸ்கந்தமாதா- சூரபத்மனை வென்று தேவ சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாக போற்றப்படுகிறாள். அன்னையை வழிபட்டு யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைகின்றனர்.

ஆறாம் நாள் தேவி காத்யாயணி- காதா என்ற முனிவரின் விருப்பத்திற்கேற்ப அவரது மகளாக 'காத்யாயணியாக' அவதரித்தாள். இவளே மஹிஷாசுரமர்த்தினியாகவும் விளங்குபவள். இந்த அன்னையின் துணை கொண்டு யோகிகள் ஆறாவது முக்கண் சக்கரமான "ஆக்ஞா" சக்கரத்தை அடைவர்.

ஏழாம் நாள் தேவி காளராத்ரி. எதிரிகளுக்கு மரணபயத்தை கொடுக்கக்கூடியவள். பேய் பிசாசுகள் எல்லாம் இவளைக் கண்டால் பயந்து ஓடும். யோகிகள் அன்னையின் துணை கொண்டு ஏழாம் சக்கரமான 'சஹஸ்ராகாரத்தை' அடைவர்.

எட்டாம் நாள் தேவி மஹாகௌரி. தூய்மையின் வடிவான இவள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுபவள். யோகிகள் அன்னையின் அருளாசியோடு எட்டாவது சக்கரமான "ஸ்வாதிஷ்டானத்தை" அடைவர்.

ஒன்பதாம் நாள் தேவி சித்திதாத்ரி- அஷ்டமாசித்தியைத் தருபவள்.சிவபெருமானும் இத்தேவியை வழிபட்டு அஷ்டமாசித்தியடைந்து 'அர்த்தநாரீஸ்வரர்" ஆனார். இந்த மஹா நவமியில் இவளை வழிபட பக்தன் தேவை என்பதே இல்லாத பரம நிலையடைந்து "பேரானந்தத்தை" அடைவான். அதன்பின் பிறவியற்ற மோக்ஷமும் அடைவர்.


image.png


                       ஸ்ரீயாக்ஞவல்கியர் ஜயந்தி


       9.11.2019 ஆம் தேதி சனிக்கிழமையன்று "யாக்ஞவல்கியர் ஜயந்தி".
      
  யாக்ஞவல்கியர், தலைசிறந்த பழம்பெருமை வாய்ந்த "ரிஷி முனிவர்" ஆவார்.இவர், மஹாபாரதம் இயற்றிய "வியாச முனிவரின் சீடரான "வைசம்பாயனரை" தம் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து "யஜுர் வேதத்தை" கற்றுக் கொண்டார்.அச்சமயம் வைசம்பாயனர் யஜுர் வேதத்தில் சிற்சில மாற்றங்களை செய்தார். ஆனால் சீடரான யாக்ஞவல்கியர் அதை கடுமையாக எதிர்த்தார். 

இவர்களது வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாட்டினால் கோபங்கொண்ட வைசம்பாயனர், தன்னிடம் கற்ற யஜுர் வேதத்தையும் அதனால் பெற்ற அறிவையும் திருப்பித் தருமாறு கூறினார். யாக்ஞவல்கியரும் அதுவே சரியென்று,யஜுர்வேதத்தை தன் தபோபலத்தால் திரட்டி உமிழ்ந்து விட்டார்.
   
  அதன்பின், சூரிய தேவனைத் தன் குருவாகக் கொண்டு, வைசம்பாயனரும் அறியாத யஜுர்வேதத்தை அறிந்து கொண்டார். இதனால் சூரியனிடமிருந்து பெறப்பட்டது 'சுக்ல யஜுர்; எனவும் வைசம்பாயனரது கிருஷ்ண யஜுர்"எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
 
  இந்த யாக்ஞவல்கியரே சீதாதேவியின் தந்தையான 'ஜனக மஹாராஜனின்" குருவும் ஆவார்.

image.png

                                  கோஷ்டாஷ்டமி  


            செவ்வாய் 5.11.2019 அன்று "கோஷ்டாஷ்டமி". கோகுலக் கண்ணனும் அவர்தம் அண்ணன் பலரானும் இளவயதில் மாடுகள் மேய்த்தது அனைவரும் அறிந்ததே. யாதவ குல மன்னனான "நந்தகோபன்" தன் குழந்தைகளான கிருஷ்ணரையும் பலராமனையும் முதன்முதலாக இந்த கார்த்திகை மாத சுக்லபக்ஷ அதாவது வளர்பிறை அஷ்டமி திதியில் பசுக்களை மேய்த்து பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். 
  
  ஜீவகாருண்யத்தை போற்றும் விதமாக,நாம் கோபூஜை செய்தும், பசுக்களை அலங்கரித்து, வலம் வந்து வழிபடுதல் நலம் பயக்கும். 
image.png

                            காலபைரவாஷ்டமி.



 பௌர்ணமிக்கு பின் வரும் எட்டாவது நாளான தேய்பிறை அஷ்டமி  "பைரவருக்கு" உகந்த தினமாகும். 'பீரு' என்ற வேர் சொல்லில் இருந்து உருவானதே "பைரவர்". பீரு என்றால் பயம் எனப் பொருள் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்குபவர் என்பதனால் பைரவர் என காரணப் பெயராயிற்று.இவர் சிவபெருமானின் அம்சம் ஆவார்.
  
ஒருமுறை 'அந்தகாசுரன்" எனும் அசுரனின் அட்டகாசத்தினால் தேவர்கள்,முனிவர்கள், மக்கள் அனைவரும் அவதியுற, கோபங்கொண்ட சிவபெருமான் தன் ஐந்து திருமுகங்களில் ஒன்றான "தத்புருஷ முகத்திலிருந்து" காலபைரவரை உருவாக்கினார். இந்த காலபைரவர் அசுரனை அழித்து அனைவரையும் காத்தருளினார்.
    
 தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் அழகிய 'பிட்சாடனார்' வடிவம் எடுத்தார். அதனால் தங்களுக்கு அவமானம் நேர்ந்ததாகக் கருதிய முனிவர்கள் சிவனையே அழிக்க முற்பட, காலாக்னியால் தாருகாவனத்தையே அழித்தார் எம்பெருமான். இதனால் சூரியனும் மறைந்து உலகமே இருளில் மூழ்க, எட்டு திசைகளிலும் பைரவர்கள் தோன்றி உலகுக்கு ஒளியூட்டினர். இப்படி எட்டு விதமாக காட்சியளித்த அஷ்ட பைரவர்களும் இப்பூவுலகில் போற்றப்படுகிறார்கள். 

image.png  Image result for ashta bhairavar imagesஅனைத்து சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி அமையப் பெற்றிருக்கும். நாய் வாகனத்துடன் 'திகம்பர ஸ்வரூபமாய்' காட்சியளிப்பார்.  19 . 11. 2019 ந்தேதி செவ்வாய் கிழமை அன்று "காலபைரவாஷ்டமி".

                                முடவன் முழுக்கு .


ஐப்பசி மாதம் துலா மாதம் எனவும் அழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரியில் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதாகவும், அதனால் ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடினால் அனைத்து நதியிலும் நீராடிய பலன் கிட்டும் என பக்தர்கள் புனித நீராடுவர்.
              
முன் நாளில் இவ்விஷயம் கேள்வியுற்ற கால் ஊனமுற்ற பக்தர் ஒருவர், தன் ஊரிலிருந்து வெகு தொலைவிலுள்ள மயிலாடுதுறைக்கு கால் நடையாகப் புறப்பட்டார்.இவர் சென்றடைவதற்குள் துலாமாதத்தின் கடைசி நாளின் இரவு நேரம் ஆகிவிட்டது. தன் முயற்சி ஆவல் வீணாகியதே என மனம் வருந்தி இறைவனை நினைந்தவாறே அன்றிரவு குளக்கரையிலேயே அயற்சியால் தூங்கிவிட்டார். கருணையுள்ளம் கொண்ட இறைவன், அவர்தம் கனவில் தோன்றி அடுத்த நாள் கார்த்திகை முத்ல் நாளில் புனித நீராடி, துலா மாதம் முழுவதும் மூழ்கிய பலனைப் பெறுவாய் என வாழ்த்தியருளினார்.அவ்வண்ணமே அந்த பக்தரும் இறைவனின் கருணையில் மனமுருகி  காவிரியில் நீராடி முக்தியடைந்தார்.
 
இதனால் துலா மாதம் காவிரியில் புனித நீராட இயலாமல் போன பக்தர்கள் அனைவரும் கார்த்திகை முதல் நாளில் முடவனை நினைத்து தனக்கும் அப்படியொரு அருட்பேறு கிடைக்க காவிரி நதியில் மூழ்குவர். அதுவே .இந்த வருடம் நவம்பர் 17 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை  கார்த்திகை முதல் நாளான "முடவன் முழுக்கு" தினமாகும்.
image.png

ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் கடை முழுக்கு


          கல்லினுள் இருக்கும் தேரை முதல் எல்லா உயிர்களுக்கும் உணவை படியளக்கின்றனர் ஈசனும் அன்ன்பூரணியாக உமையம்மையும். ஆகையால், அத்ற்கு நன்றி கூறும் விதமாக ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் எம்பெருமான் லிங்கத்  திருமேனி முழுவதும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொண்டு அன்னம் சமைத்து லிங்கத்தின் மேல் சாற்றி, அத்துடன் காய், கனிகளையும் வைத்து அழகு பார்க்கின்றனர்.  

   அம்மையும் அப்பனும் கலந்த அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் அன்னாபிஷேகத் திருநாளே ஐப்பசி பௌர்ணமி திதி.  12.11.2019 செவ்வாய்கிழமை அன்று 'மஹா அன்னாபிஷேகம்'. 
 
     அபிஷேகப் பிரியரான சிவனுக்கு 70 வ்து வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வர். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. ஆகையால், ரிஷிகள் ஐப்பசி மாதத்தில் லோக க்ஷேமத்தை கருத்தில் கொண்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதை நடைமுறைபடுத்தினர். இப்படி லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிப்பதோடு, மீதம் உள்ளதை பறவை விலங்கினங்களுக்கும் அளித்தும் நீர்நிலைகளில் கரைத்து நீர்வாழ் உயிரினங்களும் இறை பிரசாதத்தை உண்ண வகை செய்கிறார்கள்
image.png     இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில், சாபத்தினால் தேய்ந்து வளர்கின்ற சந்திரன் இந்த   ஐப்பசி பௌர்ணமியின் போது தனது சாபம் முழுமையாக நீங்கப் பெற்றவனாக பதினாறு கலைகளுடன் சிவலிங்கத்தின் மேல் நன்றியுடன் தன் 'அமிர்த கலையை' பொழிந்து பூரண நிலவாக காட்சியளிக்கிறான்.
       இந்த ஐப்பசி பௌர்ணமியின் போது தான் சந்திரன் பூமிக்கு அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியின் மீது பொழிகிறது என்று இக்கருத்தை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
       ஐப்பசி மாதம் துலா ஸ்நானத்திற்கு பெயர் போனது. அகத்திய முனிவரின் மனைவியான 'லோபாமுத்ரா" தான் அன்னை காவிரியாக புனித நதியாக தென்னகத்தை வளம் கொழிக்கச் செய்கிறாள்.

 காவேரன் என்ற அரசன் புத்ர பாக்கியத்திற்காக பிரம்மாவை வேண்ட, அவனுக்கு புத்ரபாக்கியம் இல்லாவிடினும் அவன் தவத்தின் பலனாய் மானசீகமாய் பெண் குழந்தையை உருவாக்கி, அரசனுக்கு அளித்தார். காவேரன் மகளானதால் "காவேரி" என பெயர் பெற்றாள்.பின் லோபாமுத்ரா என்ற பெயருடன் அகத்தியரை மணந்தாள்.
லோபாமுத்ராவின் புனிதத் தன்மை உலகுக்கு பயனாக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அகத்திய முனி' அன்னையை காவிரி நதியாக வலம் வரச் செய்தார்.
 இந்த ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். அதனால் இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுதல் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.  நவம்பர் 16 ந்தேதி சனிக்கிழமை துலாமாதம் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு' தினமாகும்.
image.png

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் ப்ரஹ்ம்மோற்சவம்.

 





தேவகுருவான பிரஹஸ்பதியின் மகன் 'ப்ரஹ்மரிஷி குசத்வஜன்". இவருக்கு தங்கப்பதுமை போன்று அழகே உருவாக பெண் குழந்தை பிறந்தது. வேதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால் தன் குழந்தைக்கு "வேதவதி" என பெயர் சூட்டினார். தன் மகளுக்கு ஏற்ற கணவன் அந்த மஹாவிஷ்ணுவே என இளம் வயதிலேயே அவள் மனதில் விதைத்து அவரை குறித்து தவம் செய்வதற்க்கும் ஊக்குவித்தார். வேதவதி பருவ வயதை அடைந்ததும், விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டாள்.
image.png    



அச்சமயம், வானவீதியில் தற்செயலாக அவ்வழியே சென்ற இராவணன், அழகே உருவாக தவக்கோலம் கொண்ட வேதவதியை அணுகி, அவளை மணக்க விரும்புவதாகக் கூறினான். ஆனால் வேதவதி, தான் தவம் செய்யும் நோக்கத்தை அவனிடம் பக்குவமாக எடுத்துக் கூறினாள். ஆனால், ராவணனோ அகந்தையுடன் அவளது நீண்ட நெடுங்கூந்தலைப் பற்றி தன் வயம் இழுக்க முற்படவும், கோபம் கொண்ட வேதவதி, தன் கூந்தலை அறுத்து தன்னை விடுவித்து கொண்டு, அவன் அழிவு தன பொருட்டே  நிகழும் என சாபம் கொடுத்து 'தீ' வளர்த்து அதில் தஞ்சம் புகுந்தாள்.  
  பின்னாளில், ராவணன் சீதையைக் கவர முற்படும் பொழுது, அக்னி தேவனிடமிருந்த வேதவதி, சீதையாகவும் சீதாதேவி அக்னி தேவனிடத்திலும் மாற்றப்பட்டார்கள். ராவண வதத்திற்குப் பின், தன் சீதையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக தீ மூட்டச் செய்தார் ராமர். அப்பொழுது சீதையாக இருந்த வேதவதி தன்னையும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டவே, ராமபிரான் இந்த ராமாவதாரத்தில் தான், "ஏகபத்னி விரதனாக" இருக்கின்றபடியால் அடுத்த பிறவியில் அவளுக்காகவே மனமுருகி தானே தேடி வந்து மணம் முடிப்பதாக வாக்களித்தார். 
        அவ்வண்ணமே, வேதவதி 'ஆகாச ராஜனின்" மகளாக பிறக்க, எம்பெருமான் 'ஸ்ரீனிவாசனாக' அவதரித்து, பத்மாவதியின் மேல் காதல் கொண்டு, அவளுக்காகவே உருகி, ஆகாசராஜன் இட்ட நிபந்தனையின் பேரில், குபேரனிடமிருந்து பொன்னும் பொருளும் கடன் வாங்கி, வரதட்சிணையாக அளித்து, பத்மாவதி தாயாரை மணமுடித்தார்.   
image.png       திருவேங்கடனின் உள்ளம் கவர்ந்த திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயாரின் ப்ரஹ்ம்மோற்சவ விழா 23.11.2019 சனிக்கிழமை அன்று 'கொடியேற்றத்துடன்' துவங்கியுள்ளது. இன்றைய தினத்திலிருந்து, தாயாருக்கு காலையும் மாலையும் ''சேஷ வாஹனம், ஹம்ஸ வாஹனம்'', ''முத்து பந்தல் வாஹனம், சிம்ஹ வாஹனம்'', ''கல்ப விருக்ஷ வாஹனம், ஹனுமன் வாஹனம்'', ''பல்லக்கு உற்சவம், கஜ வாஹனம்'','' ஸர்வ பூபால வாஹனம், தங்க ரதம் கருட வாஹனம்'', ''சூரிய பிரபா, சந்திர பிரபா வாஹனம்'' மற்றும் ''ரதோத்ஸவம் அஸ்வ வாஹனம்" என்ற வரிசையில் 30.11.2019 சனிக்கிழமை வரை விமரிசையாக  நடந்தேறியது  

அவ்வண்ணமே இந்த 2021 டிசம்பர் 1ந்தேதி 
முதல் திருச்சானார் பத்மாவதி தாயாரின் 
ப்ரஹ்ம்மோற்சவ விழா துவங்கிய நிலையில்,




டிச. 8 ஆந்தேதி புதனன்று தாயாருக்கு 'பஞ்சமி தீர்த்தம்" விசேஷமாக நடைபெறும். அதுசமயம் ஏழுமலையான் திருப்பதி கோயிலில் இருந்து, தாயாருக்கு மங்கல சீர்வரிசைகள்     ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.


அடுத்த நாள் டிச. 9 ஆம்தேதி,வியாழனன்று, தயாருக்கு புஷ்ப யாகம் நடத்தப் பெறும்.





  ரோஜா, மல்லிகை, கனகாம்பரம்,  சம்பங்கி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூ 

இன்ன பிற மலர்களாலும் 

மருக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி இலைகளாலும்  

நடத்தப்படும் புஷ்ப யாக அர்ச்சனை  விசேஷமானதாகும். 

இதில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலிருந்தும் 'டன்' கணக்கில் புஷ்பங்கள் அனுப்பி வைக்கப்படும்..

Friday 20 December 2019

சூரிய சந்திர கிரஹணம்.

      
               
                       சூரிய, சந்திர கிரஹணம் பீடிப்பதற்க்கான பின்னணி கதை

       டிசம்பர் 26 2019அன்று " சூரிய கிரஹணம்' பீடிக்க இருக்கிறது. சூரிய சந்திர கிரஹணம் நிகழ்வதற்கான புராணக் கதை .     தேவர்கள் அசுரர்களின் துணை கொண்டு பாற்கடலை 
கடைந்து அமுதத்தினை எடுத்தபின், 



தேவர்களும் அசுரர்களும் அமுதத்தின் பொருட்டு போரிட்டனர்.

   
 அப்பொழுது, மஹாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் தாங்கி, தேவ அசுரர்கள் முன் தோன்றி, தான் இருவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறி தேவர்களை ஒரு பக்கமாகவும், அசுரர்களை மற்றொரு பக்கமாகவும் பிரித்து அமர வைத்தார். 

அசுரர்கள் அமிர்தத்தை பருகி திவ்ய தேஜசை அடைந்து விட்டால், அனைவரையும் துன்புறுத்துவார்கள். அவர்களது அட்டகாசம் தாங்கமுடியாததாக ஆகிவிடும். அதனால் உலகிற்கே கேடு தான் நிகழும். அதனால்  முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பதாகக் கூறி, இரண்டாவது முறையும் உலக நலன் கருதி தேவர்களுக்கே வழங்கலானார்.
 அசுரர்கள் அனைவரும் மோஹினியின் திவ்ய அழகில் கட்டுண்டு இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு அசுரனுக்கு மட்டும் மோஹிணி தங்களை ஏமாற்றுவதாக சந்தேகம் மேலோங்கியது. அதனால் அவன்  தேவர்களின் உருவெடுத்து தேவர்களின் வரிசையில் அமர்ந்து மோகினியிடமிருந்து அமிர்தம் வாங்கிப் பருக, சந்திரனும் சூரியனும் அவனை காட்டி கொடுத்தனர். உடன் மஹாவிஷ்ணுவும் சக்கராயுதத்தை ஏவி, அசுரனின் சிரத்தை வெட்டினார். ஆயினும், அமிர்தத்தின் பலனாய் தலை துண்டானாலும் அந்த அசுரன் இறக்கவில்லை. அவனே 'ராகு, கேது' என நவகிரகங்களில் போற்றப்படுகிறார். காட்டிக் கொடுத்ததற்கு தண்டனையாக சந்திரனையும், சூரியனையும் விழுங்கி, பின் விடுவதனால் சூரிய, சந்திர கிரகணம் நிகழ்வதாக புராணக் கதைகள் கூறுகின்றன.image.png

Tuesday 13 August 2019

மஹாகணேச பஞ்சரத்னம் Maha Ganesa Pancha Ratnam tamil meaning.

  இன்றைய தினம் 25.8.2021           புதன்கிழமை 
மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு 15 நாட்கள் முன்பு, அதாவது ஆவணி தேய்பிறையில் வரும் சதுர்த்தியை 'மஹா சங்கடஹர சதுர்த்தி' என அழைப்பர். ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வெவ்வேறுவித  வடிவம் அதன்திரு நாமம் மற்றும் பீடம் என வினாயகரின் வழிபாட்டு முறை மாறுபடும். 
  இந்த மஹாசங்கடஹர சதுர்த்தியில் அவர் "ஹேரம்ப கணபதியாக" ஐந்து தலை, பத்து கரங்கள் மற்றும் அவர் பீடமாக சிம்ம வாஹனமும் இடம் பெறும். நான்கு தலைகள் நாற்றிசை நோக்கியும், இவைகளுக்கு மேல் ஐந்தாவது தலை மேல் நோக்கியும் அமைந்திருக்கும். 'ஹே' என்றால் பயம் அதனால் வரும் துன்பம். 'ரம்ப' என்றால் அறுப்பவர். பக்தர்களின் துயரத்தைக் களைந்து ஞானத்தைத் தருபவர் இந்த ஹேரம்ப வினாயகர். இந்த தோற்றம் தந்தையான சிவனின் அம்சமாகவும், தாய் பார்வதியின்  சிம்ம வாஹனத்திலும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. 
image.png
இத்திருநாளில் ரத்னத்தி
கணேச பஞ்சரத்னம் தமிழ் அர்த்த விளக்கம்.
मुदा करात्त मोदकं सदा विमुक्ति साधकं
कलाधरावतंसकं विलासि लोक रक्षकम् .
अनायकैक नायकं विनाशितेभ दैत्यकं
नताशुभाशु नाशकं नमामि तं विनायकम् .. १.
Image result for vinayagar images
  Mudakaratha Modakam Sada Vimukthi Sadhakam Kaladaravathamskam Vilasi Lokarakshakam
Anaayakaik Nayakam Vinashithebha Dhyathakam 
Natha shubhashu Nashakam Namami Tham Vinayakam 1
கையில் மோதகத்தை (கொழுக்கட்டை) வைத்திருப்பவரும்,அவரை வணங்குபவருக்கு முக்தியை தருபவரும், முன் நெற்றியில் பிறைச் சந்திரனை தாங்கியவரும், இவ்வுலகத்தின் தலைவனும், தனக்கு மேல் தலைவன் இல்லாதவரும், யானை முகம் கொண்ட 'கஜாசுரனை' அழித்தவரும், அவர்தம் அடியார்களின் பாவங்களை விரைவில் நாசம் செய்பவரும் ஆகிய வினாயகரை நான் வணங்குகிறேன். 

Image result for gajamukha suran image

  नतेतराति भीकरं नवोदितार्क भास्वरं 
  नमत् सुरारि निर्जरं नताधिकापदुद्धरम् . 
  सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
  महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् .. २..
Nathetharathi Bheekaram Namodhitharka Bhaswaram
Namathsurari Nirjaram Nathadikaa Paduddaram 
Sureswaram   Nidhishwaram Gajeswaram Ganeswaram
Maheshwaram Thvamashraye Parathparam Nirantharam
நான் தினமும் வணங்கக்கூடிய விநாயகர், அவர்தம் எதிரிகளுக்கு அச்சத்தை விளைவிப்பவரும், உதிக்கின்ற சூரியனைப் போல் ஜொலிப்பவரும், தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் போற்றப்படுபவரும், பக்தர்களின் துயரத்தைப் போக்கி அவர்களுக்கு பேரின்பத்தை அருள்பவராக விளங்குகிறார்.
समस्त लोक शंकरं निरस्त दैत्य कुन्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रं अक्षरम् .
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् .. ३..
Samastha Loka Shankaram Nirastha Dhaithya Kunjaram
Daretharodaram Varam VareBhavakthra Maksharam
Krupakaram Kshamakaram Mudhakaram Yashaskaram
Manaskaram Namskrutham Namskaromi Bhaswaram
இவ்வுலக அனைத்துயிர்க்கும் இன்பத்தை தருபவரும், கஜாசுரனை வதைத்தவரும், பெருத்த வயிறும், அழகிய யானை முகம் கொண்டவரும், பிறப்பற்றவரும், கருணையுடன் நம் குற்றங்களை மன்னித்து, இன்பத்தை தருபவருமான சூரியனைப் போன்ற ஒளிபொருந்திய அவரை உளமார வணங்குகிறேன்.
अकिंचनार्ति मर्जनं चिरन्तनोक्ति भाजनं 
पुरारिपूर्वनन्दनं सुरारि गर्व चर्वणम् .
प्रपञ्चनाश भीषणं धनंजयादि भूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् .. ४..
Akincha narthi marjanam Chirantha Nokthi Bhajanam
Purari Purva Nandanam Surari Gurva Charvanam
Prapancha nasha Bheeshanam Dhananjayadi Bhooshanam
Kapola Danavaranam Bhaje Purana Varanam
Image result for god vinayaka images
வறியவர்களின் துயரங்களை (ஏழைகள்) துடைப்பவனும், 'ஓம்' கார நாதனும், பரமசிவனின் தலைமகனும், தேவர்களின் கர்வத்தை களைந்தவரும், அல்லது தீய குணங்களை வேரறுப்பவரும், கொடிய நச்சுத் தன்மைவாய்ந்த 'தனஞ்ஜயன்' முதலான நாகத்தினை இடுப்பில் ஆபரணமாக அணிந்திருப்பவரும், வேதங்களால் புகழப்பெறுபவனுமாகிய ஆனைமுகனை வணங்குகிறேன்.
Image result for god vinayaka images
नितान्त कान्त दन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तराय  कृन्तनम् 
 हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेकमेव चिन्तयामि सन्ततम् .. ५..
Nithantha Kantha Dhantha Khanthi Mantha Kantha Kathmajam
Achinthya Roopa Manthaheena Mantharaya Krunthanam
Hrudanthare Nirantharam Vasanthameva Yoginam
Thamekadantha Mevatham Vichintha Yami Santhatham
Image result for god vinayaka images
உடைந்த தந்தத்தினை உடையவரும், பளபளக்கும் காந்தியுடைய தும்பிக்கையையுடையவரும், சிவனுக்கு பிரியமானவரும், நம் தீய சிந்தனையை களைந்து, அறிவு, ஞானத்தை வழங்குபவரும்,யோகிகளின் ஹ்ருதயத்தில் நிரந்தரமாய் குடியிருந்து வசந்தத்தை அருள்பவரும், ஏக தந்தம் உடைய வினாயகரை எப்பொழுதும் மனதில் சிந்தித்திருப்பேன்.

Image result for god vinayaka images
                    ..फल श्रुती ..
महागणेश पञ्चरत्नं आदरेण योन्ऽवहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन्ं गणेश्वरम् .
अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्ट भूतिमभ्युपैति सोऽचिरत् ..
…Phala Shruti …
Maha Ganesha Pancharathna Madarena Yonvaham
Prjalpathi Prabhathake Hrudismaram Ganeswaram
Arogathaam Dhoshathaam Susahitheem Suputhratham
Samahithaayu rashta Bhoothi mabhu paithi Sochiraath
இந்த மஹாகணேசரது பஞ்சரத்னத்தை தினமும் காலையில் முழு மனதொடு பாராயணம் செய்தால் அடையக் கூடிய நன்மை என்னவெனில், பலவித தோஷங்களிலிருந்து விடுபடுவதோடு, உடல், மன ஆரோக்கியம் பெறுவர்.மேலும் நல்ல கல்வி, மேன்மை, நல்ல குழந்தைகள், மன நிம்மதி இவற்றோடு மறுமையில் முக்தி பேறும் பெறுவர்.