Tuesday 24 December 2019

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் ப்ரஹ்ம்மோற்சவம்.

 





தேவகுருவான பிரஹஸ்பதியின் மகன் 'ப்ரஹ்மரிஷி குசத்வஜன்". இவருக்கு தங்கப்பதுமை போன்று அழகே உருவாக பெண் குழந்தை பிறந்தது. வேதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால் தன் குழந்தைக்கு "வேதவதி" என பெயர் சூட்டினார். தன் மகளுக்கு ஏற்ற கணவன் அந்த மஹாவிஷ்ணுவே என இளம் வயதிலேயே அவள் மனதில் விதைத்து அவரை குறித்து தவம் செய்வதற்க்கும் ஊக்குவித்தார். வேதவதி பருவ வயதை அடைந்ததும், விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டாள்.
image.png    



அச்சமயம், வானவீதியில் தற்செயலாக அவ்வழியே சென்ற இராவணன், அழகே உருவாக தவக்கோலம் கொண்ட வேதவதியை அணுகி, அவளை மணக்க விரும்புவதாகக் கூறினான். ஆனால் வேதவதி, தான் தவம் செய்யும் நோக்கத்தை அவனிடம் பக்குவமாக எடுத்துக் கூறினாள். ஆனால், ராவணனோ அகந்தையுடன் அவளது நீண்ட நெடுங்கூந்தலைப் பற்றி தன் வயம் இழுக்க முற்படவும், கோபம் கொண்ட வேதவதி, தன் கூந்தலை அறுத்து தன்னை விடுவித்து கொண்டு, அவன் அழிவு தன பொருட்டே  நிகழும் என சாபம் கொடுத்து 'தீ' வளர்த்து அதில் தஞ்சம் புகுந்தாள்.  
  பின்னாளில், ராவணன் சீதையைக் கவர முற்படும் பொழுது, அக்னி தேவனிடமிருந்த வேதவதி, சீதையாகவும் சீதாதேவி அக்னி தேவனிடத்திலும் மாற்றப்பட்டார்கள். ராவண வதத்திற்குப் பின், தன் சீதையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக தீ மூட்டச் செய்தார் ராமர். அப்பொழுது சீதையாக இருந்த வேதவதி தன்னையும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டவே, ராமபிரான் இந்த ராமாவதாரத்தில் தான், "ஏகபத்னி விரதனாக" இருக்கின்றபடியால் அடுத்த பிறவியில் அவளுக்காகவே மனமுருகி தானே தேடி வந்து மணம் முடிப்பதாக வாக்களித்தார். 
        அவ்வண்ணமே, வேதவதி 'ஆகாச ராஜனின்" மகளாக பிறக்க, எம்பெருமான் 'ஸ்ரீனிவாசனாக' அவதரித்து, பத்மாவதியின் மேல் காதல் கொண்டு, அவளுக்காகவே உருகி, ஆகாசராஜன் இட்ட நிபந்தனையின் பேரில், குபேரனிடமிருந்து பொன்னும் பொருளும் கடன் வாங்கி, வரதட்சிணையாக அளித்து, பத்மாவதி தாயாரை மணமுடித்தார்.   
image.png       திருவேங்கடனின் உள்ளம் கவர்ந்த திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயாரின் ப்ரஹ்ம்மோற்சவ விழா 23.11.2019 சனிக்கிழமை அன்று 'கொடியேற்றத்துடன்' துவங்கியுள்ளது. இன்றைய தினத்திலிருந்து, தாயாருக்கு காலையும் மாலையும் ''சேஷ வாஹனம், ஹம்ஸ வாஹனம்'', ''முத்து பந்தல் வாஹனம், சிம்ஹ வாஹனம்'', ''கல்ப விருக்ஷ வாஹனம், ஹனுமன் வாஹனம்'', ''பல்லக்கு உற்சவம், கஜ வாஹனம்'','' ஸர்வ பூபால வாஹனம், தங்க ரதம் கருட வாஹனம்'', ''சூரிய பிரபா, சந்திர பிரபா வாஹனம்'' மற்றும் ''ரதோத்ஸவம் அஸ்வ வாஹனம்" என்ற வரிசையில் 30.11.2019 சனிக்கிழமை வரை விமரிசையாக  நடந்தேறியது  

அவ்வண்ணமே இந்த 2021 டிசம்பர் 1ந்தேதி 
முதல் திருச்சானார் பத்மாவதி தாயாரின் 
ப்ரஹ்ம்மோற்சவ விழா துவங்கிய நிலையில்,




டிச. 8 ஆந்தேதி புதனன்று தாயாருக்கு 'பஞ்சமி தீர்த்தம்" விசேஷமாக நடைபெறும். அதுசமயம் ஏழுமலையான் திருப்பதி கோயிலில் இருந்து, தாயாருக்கு மங்கல சீர்வரிசைகள்     ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.


அடுத்த நாள் டிச. 9 ஆம்தேதி,வியாழனன்று, தயாருக்கு புஷ்ப யாகம் நடத்தப் பெறும்.





  ரோஜா, மல்லிகை, கனகாம்பரம்,  சம்பங்கி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூ 

இன்ன பிற மலர்களாலும் 

மருக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி இலைகளாலும்  

நடத்தப்படும் புஷ்ப யாக அர்ச்சனை  விசேஷமானதாகும். 

இதில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலிருந்தும் 'டன்' கணக்கில் புஷ்பங்கள் அனுப்பி வைக்கப்படும்..

5 comments:

  1. திருமதி வசந்தி பாலு மேடம்

    தேவகுரு பிரகஸ்பதி அவர்களின் பேத்தியான வேதவதி விஷ்ணுவை தன் மணாளனாக்க, தவம் இருந்து,
    அது இராவணனால் முடிவுராமல் போகவே வேதவதி இராவணனுக்கு சாபம் கொடுத்து தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டு தன் அடுத்த பிறவியில் பத்மாவதி தாயாராக அவதரித்ததையும்
    ராமரும் வேதவ்திக்கு கொடுத்த வாக்கின்படி, அடுத்த பிறவியில்

    ஶ்ரீனிவாச பெருமாளாக அவதரித்து பத்மாவதி தாயாரை தேடி அவருடைய தந்தை ஆகாசராஜனின் நிபந்தனைக்கு இணங்க, குபேரனிடம் ஸ்ரீநிவாசப்பெருமாள் பொன்னும் பொருளும் கடன் வாங்கி வரதட்சணை கொடுத்து பத்மாவதி தாயாரை மணமுடித்த வரலாற்றை அறிந்தோம்

    தற்போது அங்கு நடக்கும் / நடக்க இருக்கும் பிரம்மோற்சவ விழா பற்றியும் அறிந்தோம்

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

    - V. Sugavanam

    ReplyDelete
  2. பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் பற்றிய தெரியாத புராண வரலாற்றை இன்று உங்களின் கட்டுரை மூலமாக தெரிந்து கொண்டேன்.அதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🤩🤩🤩

    ReplyDelete
  4. Padmavathitayarin kadaiyum seetha deviyin Agni prevesathin karanamum terindu kondom. Padivittadarku nandri.

    ReplyDelete