Tuesday 24 December 2019

                       ஸ்ரீயாக்ஞவல்கியர் ஜயந்தி


       9.11.2019 ஆம் தேதி சனிக்கிழமையன்று "யாக்ஞவல்கியர் ஜயந்தி".
      
  யாக்ஞவல்கியர், தலைசிறந்த பழம்பெருமை வாய்ந்த "ரிஷி முனிவர்" ஆவார்.இவர், மஹாபாரதம் இயற்றிய "வியாச முனிவரின் சீடரான "வைசம்பாயனரை" தம் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து "யஜுர் வேதத்தை" கற்றுக் கொண்டார்.அச்சமயம் வைசம்பாயனர் யஜுர் வேதத்தில் சிற்சில மாற்றங்களை செய்தார். ஆனால் சீடரான யாக்ஞவல்கியர் அதை கடுமையாக எதிர்த்தார். 

இவர்களது வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாட்டினால் கோபங்கொண்ட வைசம்பாயனர், தன்னிடம் கற்ற யஜுர் வேதத்தையும் அதனால் பெற்ற அறிவையும் திருப்பித் தருமாறு கூறினார். யாக்ஞவல்கியரும் அதுவே சரியென்று,யஜுர்வேதத்தை தன் தபோபலத்தால் திரட்டி உமிழ்ந்து விட்டார்.
   
  அதன்பின், சூரிய தேவனைத் தன் குருவாகக் கொண்டு, வைசம்பாயனரும் அறியாத யஜுர்வேதத்தை அறிந்து கொண்டார். இதனால் சூரியனிடமிருந்து பெறப்பட்டது 'சுக்ல யஜுர்; எனவும் வைசம்பாயனரது கிருஷ்ண யஜுர்"எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
 
  இந்த யாக்ஞவல்கியரே சீதாதேவியின் தந்தையான 'ஜனக மஹாராஜனின்" குருவும் ஆவார்.

image.png

No comments:

Post a Comment