Tuesday 24 December 2019

                            காலபைரவாஷ்டமி.



 பௌர்ணமிக்கு பின் வரும் எட்டாவது நாளான தேய்பிறை அஷ்டமி  "பைரவருக்கு" உகந்த தினமாகும். 'பீரு' என்ற வேர் சொல்லில் இருந்து உருவானதே "பைரவர்". பீரு என்றால் பயம் எனப் பொருள் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்குபவர் என்பதனால் பைரவர் என காரணப் பெயராயிற்று.இவர் சிவபெருமானின் அம்சம் ஆவார்.
  
ஒருமுறை 'அந்தகாசுரன்" எனும் அசுரனின் அட்டகாசத்தினால் தேவர்கள்,முனிவர்கள், மக்கள் அனைவரும் அவதியுற, கோபங்கொண்ட சிவபெருமான் தன் ஐந்து திருமுகங்களில் ஒன்றான "தத்புருஷ முகத்திலிருந்து" காலபைரவரை உருவாக்கினார். இந்த காலபைரவர் அசுரனை அழித்து அனைவரையும் காத்தருளினார்.
    
 தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் அழகிய 'பிட்சாடனார்' வடிவம் எடுத்தார். அதனால் தங்களுக்கு அவமானம் நேர்ந்ததாகக் கருதிய முனிவர்கள் சிவனையே அழிக்க முற்பட, காலாக்னியால் தாருகாவனத்தையே அழித்தார் எம்பெருமான். இதனால் சூரியனும் மறைந்து உலகமே இருளில் மூழ்க, எட்டு திசைகளிலும் பைரவர்கள் தோன்றி உலகுக்கு ஒளியூட்டினர். இப்படி எட்டு விதமாக காட்சியளித்த அஷ்ட பைரவர்களும் இப்பூவுலகில் போற்றப்படுகிறார்கள். 

image.png  Image result for ashta bhairavar imagesஅனைத்து சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி அமையப் பெற்றிருக்கும். நாய் வாகனத்துடன் 'திகம்பர ஸ்வரூபமாய்' காட்சியளிப்பார்.  19 . 11. 2019 ந்தேதி செவ்வாய் கிழமை அன்று "காலபைரவாஷ்டமி".

No comments:

Post a Comment