Tuesday 24 December 2019

                                முடவன் முழுக்கு .


ஐப்பசி மாதம் துலா மாதம் எனவும் அழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரியில் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதாகவும், அதனால் ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடினால் அனைத்து நதியிலும் நீராடிய பலன் கிட்டும் என பக்தர்கள் புனித நீராடுவர்.
              
முன் நாளில் இவ்விஷயம் கேள்வியுற்ற கால் ஊனமுற்ற பக்தர் ஒருவர், தன் ஊரிலிருந்து வெகு தொலைவிலுள்ள மயிலாடுதுறைக்கு கால் நடையாகப் புறப்பட்டார்.இவர் சென்றடைவதற்குள் துலாமாதத்தின் கடைசி நாளின் இரவு நேரம் ஆகிவிட்டது. தன் முயற்சி ஆவல் வீணாகியதே என மனம் வருந்தி இறைவனை நினைந்தவாறே அன்றிரவு குளக்கரையிலேயே அயற்சியால் தூங்கிவிட்டார். கருணையுள்ளம் கொண்ட இறைவன், அவர்தம் கனவில் தோன்றி அடுத்த நாள் கார்த்திகை முத்ல் நாளில் புனித நீராடி, துலா மாதம் முழுவதும் மூழ்கிய பலனைப் பெறுவாய் என வாழ்த்தியருளினார்.அவ்வண்ணமே அந்த பக்தரும் இறைவனின் கருணையில் மனமுருகி  காவிரியில் நீராடி முக்தியடைந்தார்.
 
இதனால் துலா மாதம் காவிரியில் புனித நீராட இயலாமல் போன பக்தர்கள் அனைவரும் கார்த்திகை முதல் நாளில் முடவனை நினைத்து தனக்கும் அப்படியொரு அருட்பேறு கிடைக்க காவிரி நதியில் மூழ்குவர். அதுவே .இந்த வருடம் நவம்பர் 17 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை  கார்த்திகை முதல் நாளான "முடவன் முழுக்கு" தினமாகும்.
image.png

No comments:

Post a Comment