Sunday 1 October 2023

பாஞ்சஜன்யம் சங்கு

 


கிருஷ்ணரிடம் இருக்கும் சங்கின் பெயர் "பாஞ்சஜன்யம்". மஹாவிஷ்ணுவிற்கு உகந்த புரட்டாசி புண்ணிய மாதத்தில் இந்த பாஞ்சஜன்யம் சங்கு அவரிடம் வந்த கதையை அறிவோம்.!


 கிருஷ்ணரும் பலராமரும் சாந்தீபனி முனிவரது ஆசிரமத்தில் தங்களது குருகுல கல்வியை முடித்ததும், குருதக்ஷிணையாக அவர் விரும்புவதை தாங்கள் தருவதாகக் கூறினர்.


  அப்பொழுது, குருவின் மனைவி, க்ருஷ்ணா எங்கள் குழந்தையை 'பஞ்சஜனன்' என்ற அரக்கன் கடத்திச் சென்று கடலில் ஒளித்து வைத்துள்ளான். அவனை மீட்டுத் தருவதே நீங்கள் தரவேண்டிய குரு தட்சணையாகும் என கண்ணீர் மல்க கதறினாள்.



கிருஷ்ணரும், பலராமரும் அவர்களைத் தேற்றி, தாங்கள் குழந்தையுடன் வருவதாகக் கூறிச் சென்றனர். பின் கடல் அரசனை வணங்கி, அவரிடமிருந்து கடல் அரக்கன் இருக்கும் இடம் அறிந்து அவனுடன் போரிட்டனர். முடிவில் பாஞ்சஜனன் கிருஷ்ணனின் மஹிமை உணர்ந்து தன்னை ஆட்கொள்ளும் படி பாதங்களில் பணிந்தான்.


பின், அவனது சாம்பலை ஒன்று திரட்ட, அது சங்காக வடிவெடுத்தது. அச்சங்கினை ஊதி, வெற்றி பெற்றதை அறிவித்து தன்னிடத்திலேயே வைத்துக் கொண்டார். பின் தங்களது குருவின் குழந்தையை அவரிடம் ஒப்படைத்து அவரது ஆசியுடன் குருகுலவாசம் நிறைவுற்று விடைபெற்றனர். 


இப்படியாக, அரக்கன் பாஞ்சஜன்யம் எனும் சங்காய் எம்பெருமானின் கையில் நித்யம் வாசம் செய்யும் பேறு பெற்றான்.



No comments:

Post a Comment