Sunday 1 October 2023

அக்னி நக்ஷத்திர நிவர்த்தி

 கொளுத்தும் உக்ர வெயிலான அக்னி நக்ஷத்திரத்தின் நிவர்த்தி அதாவது கடைசி நாள் வருகிற மே மாதம் 29 ஆம் தேதி புதன் கிழமை. அக்னி நக்ஷத்திரம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை முக்கியமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 12 ராசிகளின்  தலைவரான சூரியதேவன்  சித்திரை மாதம் மேஷ ராசியில் அனேகமாக கார்த்திகை நக்ஷத்திரத்தின் போது உச்சமடைகிறார். அதாவது அவரது சக்தி பன்மடங்கு பெருகுகிறது. 

முதல் மாதமான சித்திரையின்   ராசி மேஷம். ராசிகளில் மேஷம் நெருப்ப ராசி,அந்த மேஷ  ராசியின் அதிபதியான செவ்வாய் அதுவும் நெருப்பு கிரகம்  கார்த்திகையின் அதிபதி சூரியன். அதிதேவதை அக்னி. அதனால் இந்த மாதத்திய அனைத்து அதிபதிகளும் நெருப்பாக இருந்தால், இந்த ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனின் கத்திரி வெயில் நம்மை ஏன்? சுட்டுப் பொசுக்காது?.
      சூரியனின் மனைவியான 'சக்ஞா தேவி' சூரியனின் கடும் வெப்பம் தாளாமல், சூரியனை விட்டு அகன்று காட்டில் வாழச் சென்றுவிட்டாள். தான் சூரியனை விட்டு அகன்றது அவருக்குத் தெரியாமல் இருக்க, தன் நிழலை விடுத்துச் சென்றாள். அந்த நிழல் தான் சாயா சுவர்ச்சலா தேவி.சாயா என்றால் நிழல்.  
    இந்த அக்னி  நக்ஷத்திர நாளில் கோயில்களில் "சூரிய நாராயண ஹோமம்" தோஷ நிவர்த்திக்காக செய்வார்கள். கிராமங்களில் அம்மன் கோயிலில் "கோடை விழா" எடுத்து, பொங்கல் இட்டு வழிபடுவார்கள்.
  இந்த நகர்ப்புற வாழ்க்கையில் மக்கள் தங்கள் வீட்டு பூஜையறையில் சூரியனுக்குண்டான கோலத்தைப் போட்டு, சூரிய காயத்ரி மந்திரம் சொல்லியோ அல்லது ஆதித்ய ஹ்ருதயம் வாசிக்கலாம்.
சூரிய காயத்ரி மந்திரம் : -
  ஓம் பாஸ்கராய வித்மஹே மஹா தேஜாய தீமஹி
  தன்னோ சூர்ய: ப்ரசோதயாத்.
        ஆதித்ய ஹ்ருதயம் முழுவதும் சொல்ல முடியாவிட்டாலும், கீழுள்ள த்யான மந்திரத்தை மட்டும் கூறலாம்.
  " சூர்யம் சுந்தர லோக நாதம் அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்                 ஞான ப்ரஹ்ம்ம மயம் சுரேசமமலம் லோகைக சித்தஸ்வயம்
      இந்திராதித்ய நராதிபம் சுரகுரும் த்ரைலோக்ய சூடாமணிம்
  ப்ரஹ்மா விஷ்ணு சிவஸ்வரூப ஹ்ருதயம் வந்தே ஸதா பாஸ்கரம்
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஷ்மி திவாகர:
ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஸ்ரியம் புத்ராம்ஸ் ச வித்யாம் ச தேஹி மே".

No comments:

Post a Comment