Monday 2 October 2023

வர சதுர்த்தி

 


வரசதுர்த்தி'. வளர்பிறை சதுர்த்தி திதி செவ்வாயன்று அமைவது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், செவ்வாய் எனும் அங்காரகன் வினாயகப் பெருமானைக் குறித்து தவம் இயற்றி, அதன் பலனாய் உன்னத நிலை அடைந்து சிறப்பு பெற்றார். அதனால், செவ்வாயன்று சுக்லபட்ச சதுர்த்தி திதியை 'வரசதுர்த்தி' என்று அழைக்கப்படுகின்றது. 

  வர கணபதி என்பது இல்லை எனாது வரத்தை அருள்பவர்  எனப் பொருள். இவர் கணபதியின் முக்கிய 32 வடிவங்களில் 18 ஆவது வடிவம் ஆவார். திருவனந்தபுரம் மற்றும் மைசூர் கோயில்களில் இந்த 32 வடிவ கணபதிகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 
கார்த்திகை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம் என இன்னபிற விசேஷ தினங்களில் பலரும்  'விரதம்' மேற்கொள்வர்.


என்னவகையான விரதமாக இருந்தாலும் முதலில் சதுர்த்தி விரதம் கடைபிடித்த பின்பே மற்றவற்றை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதி உண்டு. அப்பொழுது தான் அவைகள் பலிதமாகும்.
 விநாயகப் பெருமான் வழிபடுவதற்கும் எளிமையானவர். கடுமையான விரதங்கள் மேற்கொள்ள இயலாவிடினும், விக்ன விநாயகனை நினைத்துக் கொண்டு, ஒரு சிற்றெறும்புக்கு, 'வெல்லம்' ஆகாரமாக எடுத்துச் செல்ல கொடுத்தாலும்,    மலையளவு அன்னதான புண்ணிய பலனைத் தருபவர் வினாயகப் பெருமான்.


No comments:

Post a Comment