Thursday 28 December 2023

நான் கண்ட குஜராத்.


மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்
மொதேரா  குஜராத்.

சூரியன் கோயில்





மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்
மஹாவிஷ்ணு அனந்தசயனம்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்
படிக் கிணறு
மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்


மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்
மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்


மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா  குஜராத்.
சூரியன் கோயில்

மொதேரா -  குஜராத்.
சூரியன் கோயில்



Hutheesingh jain temple
ஹுதீஸிங் சமணக் கோயில்
 .
மஹாவீர் தீர்த்தங்கரர் & பாதுகை


தங்கத்தேர் 




                               சபர்மதி ஆஸ்ரமம்


  அதாலஜ் & ரூடாபாய் படிக்கிணறு.


















               Hutheesingh jain temple 
 









Sunday 17 December 2023

ராமநாம மஹிமை & பரதனின் பக்தி

 


  • இராமாயண காவிய கதாபாத்திரங்கள் அனைத்துமே பற்பல வாழ்வியல் நீதிகளை தானே வாழ்ந்து காட்டியுள்ளது   என்றே  கூறலாம். 
  •    அதில் எளியாரை இகழேல்!. அவ்வாறு   இகழ்தலால்  உண்டாகும் விளைவின் வாழ்வின் நியதியாக பரதனே ஒரு எடுத்துக் காட்டு. :
  •     வைகுண்டத்தில் இருந்து தன் பக்தரைக் காக்கும் பொருட்டு ஒருமுறை எம்பெருமான் மஹாவிஷ்ணு சங்கு சக்கரம் பாதுகைகள் என எதுவும் இன்றி, விரைந்து பூவுலகம் சென்றுவிட்டார். பாதுகைகள் அணியக் கூடிய நேரம் கூட தாமதம் ஏற்படுத்தி விடும் என்பதால், பாதுகைகளை கையில் எடுத்தவர் அதை அவசரமாக தலைமாட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். 
  •      எம்பெருமானின் கைகளில் தங்களைத் தாங்கியிருக்கும் பெருமையில், சங்கு சக்கரம் இரண்டும்,கால்மாட்டில் இருக்கவேண்டிய பாதுகை தலை மாட்டிற்கு இடம் பெயர்ந்தது அவைகளுக்குப் பிடிக்கவில்லை. அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தான் இருக்கவேண்டும் என எம்பெருமானது பாதுகைகளை பலவாறாக இகழ்ந்தன. 
  •        எம்பெருமான் வைகுண்டம் திரும்பியதும், அங்கு நிலவிய ஒருவித அமைதியில் நடந்ததை ஊகித்து அறிந்தார். காயப்பட்ட நிலையிலும், தன் பாதுகைகள் காட்டிக் கொடுக்காமல் பொறுமையுடன் இருந்ததைக் கண்டு, அதன் பால் மேலும் அன்பு பெருக, அதன் பெருமையை, சங்கு சக்கரத்திற்கு மட்டுமின்றி, இவ்வுலகுக்கே உணர்த்த திருவுளம் கொண்டார். 
  •     அதன்படி, சங்கு சக்கரமே ராமாவதாரத்தில், பரத சத்ருக்னனாக அவதரித்தனர். ராமர் மணிமுடி துறந்து, ஜடாமுடி தரித்து கானகம் சென்றதை அறிந்து , அவரை எப்படியாவது அரியணையில் ஏற்றியே தீருவேன் என பெரும் பிரயத்தனம் செய்த பரதனின் முயற்சிகள் தோல்வியுறவே , வேறு வழியின்றி, தாங்கள் இல்லாத அந்த அயோத்தி நகருக்குள் நானும் நுழையமாட்டேன், தங்களின் பாதுகைகளை அரியணையில் வைத்து பூஜித்து வருவேன். தங்களின் பாதுகைகளே இந்த 14 ஆண்டுகளும் ராஜ்ஜியத்தை வழி நடத்தும் என, உறுதிபடக் கூறி பாதுகைகளை தன் தலையில் சுமந்தவாறே அயோத்தியின் உள்ளே செல்லாமல் எல்லையில் உள்ள நந்திகிராமத்தில்  இருந்தவாறே 'பாதுகா பட்டாபிஷேகம்' செய்து அவ்வண்ணமே நடந்தான். 

அண்ணனுக்கு உறுதுணையாக சத்ருக்னன் பரதனுக்கும் ராமபாதுகைக்கும் பணிவிடை செய்தான் பாதுகைகளை துச்சமாக எண்ணி இகழ்ந்தவர்களே அதன் மஹிமை உணர்ந்து அதை பூஜித்ததன் மூலம் கர்வம் அழிந்து புனிதமடைந்தனர். வாயிலில் இருக்கவேண்டிய பாதுகை என இகழ்ந்தவர்கள், அப்பாதுகைகளைத் தன் தலையில் சுமந்தனர். அத்துடன்,  நகரத்திற்க்குள் செல்லாமல் 
நகர வாயிலிலேயே இருந்து 'திருவடிச் சேவை' புரிந்து தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதனால் பரதனின் பழி நீங்கியதோடு, ராமனைக் காட்டிலும் பெரிதும் போற்றப்பட்டான். 

 எம்பெருமானின் பாதங்களைப் பணிவதாலேயே நம் உள்ளத்து அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து நம் மனமும் பேரின்ப நிலையடைகிறது.  

    பரதனின் பக்தியின் சிறப்பை ராமனே உணர்ந்து   வியக்கும்படியானதொரு நிகழ்வு! 

        ராமபிரான்,சீதையை இலங்கையில் இருந்து மீட்பதற்காக கடலில் அணை கட்ட முனைந்தார் அல்லவா?. அதற்காக சமுத்திர ராஜனான வருணனை நினைத்து  அணைகட்ட வழிவிட்டு அனுமதி தருமாறு வேண்டித் தவமிருந்தார்.   ஆனால் மூன்று நாட்களாகியும் வருணன் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்ததைக் கண்டு பொறுமை இழந்து கோபத்துடன், இந்தக் கடலையே வற்றச் செய்துவிடுகிறேன் என தன் ராம பாணத்தை ஏவினார். 


      ஆனால், கடல் பேரிரைச்சலுடன் கொந்தளித்ததே தவிர, வற்றவில்லை. வருணனும் ராமனின் கோபங்கண்டு பயந்து, ஓடோடி வந்து பணிந்து மன்னிப்புக் கோரி வேண்டிய உதவிகளைச் செய்தான்.



ஆயினும் ராமபிரானுக்கு ஆச்சரியம் தாளாமல், ஏன்? எனது பானத்திற்கு கடல் வற்றவில்லை?  எப்படி?  என்ன காரணம்? என வருணதேவனிடம்    கேட்டார்.   

 அதற்கு வருண பகவான் ராமரைப் பார்த்து, தங்களது தம்பியான பரதன், தினமும் தங்களை சிந்தையில் நிறுத்தி,   தங்கள் நாமத்தை இடையறாது உச்சரித்தவண்ணம் தங்களது பாதுகைக்கு சரயு நதியிலிருந்து நீர் எடுத்து திருமஞ்சனம் (அபிஷேகம்)   செய்கிறான். அந்த புனிதமான திருமஞ்சன நீர் கடலில் கலந்துள்ளது  இந்த தீர்த்தத்தின்  புனிதம்  காரணமாகவே  ராமபாணத்திற்க்கும் கடல் நீர் வற்றவில்லை என்று வருண பகவான் விளக்கினார்.

ஆக, ராமனை விட ராம பாணமும், ராமபாணத்தை விட ராம நாமமும் ராம பக்திசிந்தனையும் உயர்ந்ததாகவும் போற்றப்படுகிறது. 




சித்ரா பௌர்ணமி 26.4.2021 திங்கட்கிழமை

 நாளைய தினம் திங்கட்கிழமை 26.4.2021 சித்ரா பௌர்ணமி. . முழு நிலவை பார்ப்பது என்பது கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வையும் புத்துணர்வையும்  அளிக்கக்கூடியது.  ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி வருகிறது என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில், வருடத்தில் ஒரு முறை மட்டுமே  இந்த சித்திரை மாதத்தில் மட்டுமே முழு நிலவாக களங்கங்கள் இல்லாமல் சூரியன் மறையும் பொழுது, பிரகாசமான ஒளிக்   கிரணங்களுடன்  காட்சி அளிப்பதே இதன் சிறப்பு. 


  இந்த நாளில் நம் பண்டைய தமிழ் மக்கள் தன் உற்றார், உறவினருடன் நதி நிலைகளில் பௌர்ணமி ஒளியில், அமர்ந்து உணவருந்தி, ஆடிப் பாடி மகிழ்வர்.


இந்த சித்ரா பௌர்ணமி நாளில், 'சித்ரகுப்த பூஜை' விசேஷமானது. இதையே பண்டைய நாட்களில் சித்திர புத்திர நயினார் நோன்பு' என நம் தமிழக மக்கள் பூஜித்தனர். யார் இந்த சித்திர குப்தர்? அவரது சரிதத்தை அறிவோம்!



சித்திரகுப்தர் நம் பாவ, புண்ணிய கணக்குகளை, குறித்து வைத்துக் கொண்டு உயிர்களது வாழும் காலம் நிறைவுற்றதும் எமதர்மனிடம், அவ்வுயிர்களது நற்பலன் அல்லது தண்டனை அதாவது, சொர்க்கமா? நரகமா? என்பது பற்றி எடுத்துக் கூறுவாராம்.
   சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமி கூடிய சுபதினத்தில் அவதரித்தவர். 'குப்தர்' என்றால் இரகசியம். நம்மைப் பற்றிய இரகசியங்கள்,நாம் மனத்தால் நினைக்ககூடிய நன்மை தீமைகளைக் கூட இவரிடமிருந்து மறைக்க இயலாது.அதனால் இவர் 'சித்திரகுப்தர்' என அழைக்கப்படுகிறார்
       இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகளிலிருந்து ஒன்று:
           ஒருமுறை, அஷ்ட திக் பாலகர்கள் ( 8 திசைகளின் தலைவர்கள்) சிவன் பார்வதியை சந்திக்கச் சென்றனர். அனைவரும் மகிழ்வுடன் இருக்க, யமதர்மன் மட்டும் சோர்வுடன் இருந்தார். அது பற்றி எம்பெருமான் வினவ, ஐயனே! நான், தனி ஒருவனாக அனைத்து உயிர்களின் காலக் கெடு, அவற்றின்பாவ புண்ணிய கணக்குகள் குறித்து, அதற்கான பலன்கள் வழங்குவது என எனது வேலைப் பளு மிகுதியாக உள்ளது. அதனால் நம்பத் தகுந்த உதவியாளன் இருந்தால், என் வேலை எளிதில் நிறைவுறும். அதற்கு தாங்கள் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டினார்.
  சிவபிரானும், காலம் கனியும் பொழுது, உனக்குத் தகுந்த உதவியாளன் கிடைப்பான் என உறுதி கூறி , அதற்கான  பொறுப்பை பிரம்மனிடம் ஒப்படைத்தார். முதலில் அப்பொறுப்பை நினைத்து திணறி பிரம்மன் தவித்தாலும், சூரிய தேவனைக் கண்டதும் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. அகில உலகையும் சுற்றி வரக் கூடிய இவனால் உருவாக்கப்படும் குழந்தையே இதற்குச் சரியான ஆள்  என நினைத்து மகிழ்ந்தார். 
   உடன், வானவில்லை அழகிய பெண்ணாக உருமாற்றி, அவளுக்கு 'நீளாதேவி' என பெயரிட்டு, சூரிய தேவனின் மனதில் தன் மாயையால் காதல் எண்ணத்தை உருவாக்கி, நீளாதேவியை மணமுடித்தார். 
 இவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு 'சித்திர புத்திரன் எனப் பெயரிட்டனர். சூரியனே அவருக்கு குருவாகவும் இருந்து பல கலைகளைப் பயில்வித்ததோடு, சிவபிரானைக் குறித்து தவம் இயற்றி அரிய பல வரங்கள் பெறும் படியும் அறிவுறுத்தினார். அவ்வண்ணமே அவரும், தவமியற்றி, சிவனாரிடமிருந்து, அறிவாற்றலும், அனைத்து சித்திகளையும் கைவரப் பெற்றார்.
 உடன் அதனை சோதிக்க எண்ணி, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இதனை அறிந்து பிரம்மன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பிரம்மன், சூரியனிடம் இதுபற்றி முறையிட, அவரும் சித்திர புத்திரனை அழைத்து, மகனே! 
உயிர்களின் இரவு பகலைக் கணக்கிட்டு,  ஒவ்வொரு உயிர்களின் வாழ்க்கையையும் நெறிபடுத்துபவன். எனவே, நீ அவர்களது பாவ, புண்ணியத்தை கணக்கெடுத்து, உனது அண்ணனான யமதர்மனுக்கு உதவியாக பணி செய்வாயாக! இதற்காகவே நீ படைக்கப்பட்டவன். படைப்புத் தொழில் உனக்கானதன்று. அது பிரம்மனது பணி. என வாழ்த்து கூறி எழுத எழுத தீராத ஏட்டுப் புத்தகத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். 
      மற்றவர்களின் இரகசியத்தை அறிபவராகவும், அந்த இரகசியத்தை யாரும் அறியாதபடி இரகசியமாகக் குறித்து தக்க சமயத்தில் அதை வெளிபடுத்தி பலன்களை அளிப்பதனாலும் 'சித்திர குப்தர்' என பெயர் காரணமாயிற்று.
 ஆயினும் கிராமப்புறங்களில் இவருக்கு 'சித்திர புத்திரன் பூஜை' என்றே கொண்டாடுகின்றனர்.  இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தன் படம் வரைந்து, பூஜை திரவியங்களுடன் ஓலைச் சுவடி எழுத்தாணி இவற்றையும் வரைந்து, சக்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பாயசம் இன்னபிற இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து, பூஜையின் இறுதியில் ஊர் பெரியவர் சித்திர குப்தனின் வரலாற்றை படிக்க, தங்களது பாவச் சுமையைக் குறைத்து, புண்ணிய பலனை அதிகரிக்கவும், நல்ல வாழ்வை அளிப்பதோடு, யமராஜனிடம் தனக்காக பரிந்துரைக்கவும் வேண்டிக் கொள்வர்.   இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது. 




திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்.

 




கேணி என்றால் குளம். அல்லிப் பூக்கள் நிறைந்த குளமாக விளங்கியதால் உயர்வு கருதி 'திருவல்லிக்கேணி' என அழைக்கப்படுகிறது. திருவல்லிகேணி என்றாலே பார்த்தசாரதி கோயில் தான் நினைவுக்கு வரும். 


ஆம்! மஹாபாரதத்தில் பார்த்தன் என போற்றப்பட்ட அர்ஜுனனுக்கு சாரதியாக தேரோட்டியாக விளங்கியதால், 'பார்த்தசாரதி' என கண்ணபிரான் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். பாரதப் போரில் கண்ணன் ஈடுபடாமல், போர் முழக்கம் அறிவிக்க மட்டும் சங்கை கையில் ஏந்தியிருப்பார். அவ்வ்வண்ணமே இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமனும் சங்கு மட்டுமே கையில் தாங்கியுள்ளார். போரில் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டு அவனைக் குறி வைத்து வந்த பாணங்களை எல்லாம் தன் திருமேனியில் தாங்கிய வடுக்களுடன் இங்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது. தேரோட்டிக்குரிய லட்சணமாக 'மீசை'யுடன் காணப்படுவதும் சிறப்பு. இதனால் இப்பெருமான் 'பார்த்தசாரதி' என்ற பெயர்க் காரணமாயிற்று. அது மட்டுமின்றி தன் மனைவி ருக்மிணி, சகோதரர் பலராமர் சாத்தகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என மூன்று தலைமுறையுடன் குடும்பமாக காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்புடையதாகும்.


     பரம பக்தனான பல்லவ மன்னன் 'தொண்டைமான் சக்கரவர்த்தி'யின் வேண்டுகோளுக்கிணங்கி திருப்பதி வேங்கடவன் இத்தலத்தில்  எழுந்தருளியிருப்பதாக  ஐதீகம். அதனால் இவருக்கு 'வேங்கட கிருஷ்ணன்' என்ற திரு நாமமும் உண்டு.



பொதுவாக கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால், இத்திருக் கோயிலில் பார்த்தசாரதி தவிர 'வேதவல்லித் தாயாருடன் அரங்க நாதனும்', கருடன் மீதேறியவாறு வரதராஜ பெருமாளும், அழகிய ச்ருங்கராக, யோக நரசிம்மரும், ஐந்தாவதாக, ராமர் லக்ஷ்மணன், பரதன் சத்ருக்னன் மற்றும் அனுமனுடன் என ஐந்து மூலவர்கள் சன்னதிகள் இடம் பெற்றுள்ளதால், இது 'பஞ்சமூர்த்தித் தலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது. 



Saturday 16 December 2023

கிருஷ்ண லீலை தாத்பர்யம்.

 




கிருஷ்ணாஷ்டமி  கோகுல கண்ணனின்  ஜன்மாஷ்டமியை நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். காரணம் : கிருஷ்ணனின் வசீகரத்தோற்றமும், குறும்பு லீலைகளும், கள்ளங்கபடமற்ற அன்பு நெஞ்சமும் அனைவரையும் அவன்பால் கவர்கிறது என்பது உண்மை. 

       ஆம்! நாம் எப்படி பக்தி செலுத்துகிறோமோ/ அப்படியே நம்மிடத்தில் காட்சியளித்து ஒட்டி உறவாடி விளையாடி மகிழ்விப்பான் கண்ணபிரான்.  பல மகான்களும் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதை பாரதியாரின் பாடல் மூலம் நன்கு உணரமுடியும்.
  "எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" 
என்று சேவகனாக, தோழனாக, தோழியாக, அன்னை, தந்தையாக  காதலன் , காதலி என பலவடிவங்களில் கற்பனையில் வடித்துப் பாடியிருப்பார்.
         கிருஷ்ண ஜன்மாஷ்டமியைத் தொடர்ந்து அடுத்த நாள் "உறியடி" நிகழ்ச்சி நாடெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். எதனால் இது கொண்டாடப்படுகிறது என்று இதன் பின்னணியை ஆராய்ந்தால், 
கோகுல மக்களிடத்தில் மன்னன் கம்சன் கொடுங்கோலனாக அதிக வரி விதித்தும், அவர்களது மூல வாழ்வாதாரமான தயிர், வெண்ணெய் போன்றவற்றில் பெரும்பகுதியை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மிகவும் துன்பமிழைத்தான்.           

       அதனால், கோகுலத்தில் கோபியர்கள் வெண்ணெயை கடைந்து விற்பனைக்காக சேமித்து மேலே கயிறு கட்டி உறியில் பத்திரப்படுத்தி இருப்பார்கள். அதை தன் நண்பர்களுடன் சென்று பானையை எடுத்து கவர்ந்து உண்டு வாரி
 இறைப்பான். தன் குறும்பாலும் அன்பான பேச்சாலும்


தன் மக்கள் மனதில் தேவையற்ற பயத்தை    போக்குவதற்காகவும்,  தவறை தைரியமாக தட்டிக் கேட்கவேண்டுமென்றும்  உழைப்பின் உரிமையை அவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற உண்மையை அவர்களுக்கு புரிய வைத்ததோடு, இதன்மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் கம்சனுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். 
  இதை கருத்தில் கொண்டே, பின்னாளில் உறியடி நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உயரத்தில் பானையில் 'பரிசுத் தொகையை வைத்து அதை கம்பால் அடித்து உடைத்து எடுக்கும் படியும், அப்படி உடைக்க முற்படும் சமயம் ,அவர்களது முயற்சியை தடுக்கும் வண்ணம் பானையை இன்னும் உயரத் தூக்கியும் போட்டியாளர் மீது தண்ணீரை இறைத்தும் விடுவர். 
           இதுவே வட இந்திய மக்கள் வழுக்கு மரத்தின் உயரே உள்ள பானையை அடைவதற்கு, குழுவாக நான்கு பேர் மற்றவர் தோள்மேல் கையை கட்டி கூம்பு போல் நிற்க, அவர்களின் மேல் அடுத்தடுத்து நபர்கள் உயரே ஏறி பானையை கைப்பற்றுவர். அவர்கள் வழுக்கு மரத்தில் அவர்கள் ஏற முடியாமல் தடுக்கும் வண்ணம் தண்ணீரை அவர்கள் மீது வாரி இறைப்பர்.
    இதையும் மீறி பரிசுப் பொருளை எட்டிப் பறிப்பர் இளைஞர் குழாம். பெருமக்கள் கூட்டம் இதை ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தி மகிழ்வர். 




ஆடி கிருத்திகை.

 


சூரபத்மனை வென்றதனால், இந்திரன் தன்   மகளான  தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்வித்ததோடு முருகனை 'தேவசேனாதிபதியாகவும்" கொண்டாடினார். 


     அத்துடன் குறத்தி மகளான 'வள்ளியை' தானே நாடி விரும்பி மணம் புரிந்து கொண்டார் முருகப்பெருமான். 


   இதன் தாத்பர்யம் என்னவெனில்,  பரம் பொருளாம் முருகனின் பாத கமலத்தை அடைய இச்சா சக்தி ஞான சக்தி இரண்டுமே முயல்கிறது. 


தேவசேனை ஞான சக்தி வடிவம். ஞானிகள் தாங்கள் புரியும் அனைத்து செயல்களிலும் இறை சிந்தனை ஒன்றையே கருத்தில் நிறுத்தி, முக்தி பெறுவர். 


    வள்ளி இச்சா சக்தி வடிவம்.  உலக மாயையில் சிக்கிச் சுழலும்


சாமான்ய மக்களும் இறை சிந்தனையில் மூழ்கி முக்தி பெறவேண்டும் என்று தாமே அவர்களை ஆட்கொள்ளும் கருத்தாக வள்ளித் திருமணம் கதையின் உட்பொருளாக உள்ளது. 



முப்புரி நூல் ஆவணி அவிட்டம்.

 ருக்,யஜுர் , ஸாமவேத உபாகர்மா மற்றும் காயத்ரி ஜபம்  இது பூணூல் அணியும் சடங்காகும். இளம் பிராயத்தில் அணிவிக்கப்படும் பூணூல் வாழ்நாள் முழுவதும் கழற்றாமல் அணிந்திருக்கவேண்டும் என்பது நியமவிதி. ஒவ்வொரு ஆவ்ணி அவிட்டத்தின் போதும் பழைய பூணூலை கழற்றி புதியது அணியவேண்டும். 



ஒரு பூணூலில் மூன்று பிரிகள் இருக்கும். வாழ் நாளில் மூன்று பூணூல்கள் அணிவிக்கப்படுகின்றன.சிறுவனின் உபநயனத்தின் போது ஒன்றும், திருமணத்தின் போது இரண்டாவதும், குழந்தை பிறந்தவுடன் மூன்றாவதும் அணிவிக்கப்படுகின்றது. வாழ் நாளில் அவரது கடைமைகளை நினைவுறுத்துவதற்காக அணியப்படுவதாக   ஐதீகம்.