Friday 15 December 2023

ஸ்ரீரங்கத்தில் ஆடிப் பெருக்கு.

 ஆடி மாதம் 18 ஆம் தேதியான நாளைய தினம் {2.8.2020} ஞாயிறன்று ஆடிபெருக்கு. தேதியை வைத்துக் கொண்டாடப்படும் ஒரே விழாவான ஆடி பதினெட்டாம் பெருக்கன்று காவிரி  அன்னை பூம்புனலாய் பெருகி தான் ஓடும் பகுதியெல்லாம் வளமிக்கதாக ஆக்கிச் செல்பவள். நலமருளும் காவிரி அன்னைக்கு மக்கள் நன்றி செலுத்தி வழிபடுவது ஒருபுறம் இருக்க, ஸ்ரீரங்க நாதர்  ஆடிபெருக்கன்று காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.


ஆம்! ஸ்ரீரங்கத்தில், ஆடிப்பெருக்கன்று காலையிலேயே பெருமாள் உற்சவ மூர்த்தி வீதி உலாவாக வந்து 'காவிரி அம்மா மண்டபத்தில்" எழுந்தருளுவார். பின்,அங்கு நம்பெருமாளுக்கு காவிரி தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அதன்பின், பெருமாளின் சீதனமாக 'தாலி, பட்டு முதலான மங்கலப் பொருட்கள்' ஆற்றில் விடப்படுகிறது. காவிரி அன்னையுடன் அளவளாவுவது போல் மாலைவரை பெருமாள் மண்டபத்திலேயே இருந்து அருள் பாலிக்கிறார். 



No comments:

Post a Comment