Sunday 3 December 2023

நவராத்திரி 2020

 



இந்த வருடம் புரட்டாசி மாதத்தின் ஆரம்பம்,முடிவு என இரண்டு அமாவாசைகளாக அமைந்து விட்டன. ஆரம்பத்தில் வந்தது மாஹாளய அமாவாசை. பொதுவாக மஹாளய பக்ஷ அமாவாசை அடுத்த நாளிலிருந்து "நவராத்திரி" தொடங்கும். ஆனால் இவ்வருடம் வருகின்ற வெள்ளிக்கிழமை அக். 16 ந்தேதி புரட்டாசி கடைசி 30 ந்தேதி அமாவாசைக்கு அடுத்த நாள் ஐப்பசி 1 ந்தேதியில் நவராத்திரி ஆரம்பிக்க இருக்கிறது.ஏனெனில், சாந்திரமானத்தின் அடிப்படையில், "ஆஸ்வீன   மாதத்தில்" வருகின்ற அமாவாசைக்கு அடுத்த நாளை தான் கணக்கில்  எடுத்துக் கொள்வார்கள்.           வெள்ளிகிழமை அமாவாசை மற்றும் அடுத்த நாள் சனிக்கிழமை ஐப்பசி மாதப் பிறப்பு என இரண்டு நாட்களும் 'தர்ப்பணம்' செய்யவேண்டும்.       

   ஐப்பசி 1 அக்.17.சனிக்கிழமை அன்று அனைத்திற்கும் மூலசக்தியாக விளங்குவதோடு தானே 'சிவமும், சக்தியுமாய் ' அதாவது சுடரும் அதன் ஒளியுமாய் அர்த்தநாரியாக இருக்கும் அன்னைஆதிபராசக்தியை வழிபாடு செய்யக்கூடிய திரு நாட்களான சாரதா நவராத்திரி. 
அகில அண்டத்திற்க்கும் நாயகியாய், மும்மூர்த்திக ள், முப்பெருந்தேவியரான மலைமகள்,அலைமகள் மற்றும் கலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே கருதப்படுகிறார்கள்.
   தக்ஷன் கடுந்தவம் செய்து ஆதிபராசக்தியே தனக்கு மகளாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க, அவருக்கு மகளாக'தாட்சாயணியாக அவதரித்தாள் அன்னை. ஆனால், தக்ஷனின் தந்தையான பிரம்மாவின் தவறுக்காக அவரது ஐந்து தலையில் ஒரு தலையை சிவன் கிள்ளி எறிந்ததால் அவரிடம் விரோதம் கொண்டான். இந்நிலையில்   தாட்சாயணி சிவபெருமானை விரும்பி மணந்து கொண்டதால், மகள் மாப்பிள்ளை இருவரையும் தவிர்த்து, தேவர்களுக்கு அவிர்பாகம் வழங்கும் யாகத்தை நடத்தினான் தக்ஷன்.
இதற்கு நியாயம் கேட்கச் சென்ற தன் மகளையும் அலட்சியம் செய்து அவமானப்படுத்தினான் தக்ஷன்.






இதனால், கோபங்கொண்ட அன்னை தாட்சாயணி  அந்த வேள்வியை தடுக்கும் நோக்கத்தோடு உன்னால் பெறப்பட்ட என் இன்னுயிரும் தேவையில்லை என தானே அந்தத் தீயில் விழுந்து உயிரைத் துறந்தாள். மஹா பதிவிரதையான அன்னையின் உடலை அக்னி பகவானால் சுட்டு எரிக்க முடியாததால், அன்னையின் உடலை ஈசனிடம் ஒப்படைத்தான். இதனால், மிகுந்த கோபங்கொண்ட சிவன் அன்னையின் உடலை தன் தோளில் தாங்கியவாறு 'ருத்ர தாண்டவம்' ஆடத் தொடங்கினார்.


 இதனால் அகில உலகமும் நிலைகுலைந்தது. உடனே, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் அன்னையின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவியெங்கும் விழச் செய்தார். அவைகளே 108 சக்தி பீடங்களாயின. அவற்றில் 51 மிக பிரசித்தி பெற்றவை.
         இந்த நவராத்திரி திருவிழாவில் அன்னையின் திருவருளை பெறுவோம்
ஐப்பசி மாதம் காவிரியில் துலா ஸ்நானம் செய்வது சிறப்பு. அகத்திய முனிவரின் தர்ம பத்தினியான 'லோபாமுத்ரா தேவியே'  உலக நலனுக்காக காவிரி நதியாக பரந்து விரிந்து வளம் சேர்க்கின்றாள்.  ஐப்பசியில் காவிரி போன்ற புண்ணிய நதியில் நீராடுவது பல ஜன்ம வினை பாபங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment