Friday 15 December 2023

ஆடி அமாவாசை, ஆடிப் பூரம்

  

சூரியனின் தென்திசைப்  பயணமான தக்ஷிணாயன புண்ய காலத்தின்   அதிபதிகளாகத் திகழும் 'தென்புலத்தார்' என போற்றப்படும் நம் மூதாதையர்களுக்கு 'திதி' கொடுத்து அவர்களை மகிழ்வித்து ஆசி பெறக் கூடிய ஆடி அமாவாசை. தினமாகும். இப்படி ஆடி அமாவாசையில் திதி  கொடுக்க நம் வாழ்வும் கேடில்லாமல் நலமாகும் என்பது நம்பிக்கை.



அம்பிகைக்கு உகந்த பூர நக்ஷத்திரம். 

இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்தாகவும், மற்றும்   பூமாதேவி ஆண்டாளாக அவதரித்ததாகவும் புராணங்கள் உரைக்கின்றன. இதனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பெறும். இதில் தேர் வீதி உலா, ஐந்தாம் நாள் கருட சேவை, ஏழாம் நாள் பெருமாள் ஆண்டாள் மடியில் 'சயனத் திருக்கோலம்' என விமரிசையாக நடைபெறும்.


அவ்வண்ணமே, அம்பிகைக்கும் ,  பத்து நாட்கள் விழாவாக காலை மாலை இருவேளையும்  அபிஷேகம், அலங்காரம் இவற்றோடு பூரம் கழித்தல் எனும் ''ருது சாந்தி விழா, திருமணம், வளைகாப்பு மற்றும் சீமந்தம்   என  


கோலாகலமாக பக்தர்களின் வாழ்விலும் இது போன்ற மங்கல நிகழ்வுகளோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற வேண்டுதலோடு கொண்டாடப்படுகிறது.



No comments:

Post a Comment