Friday 15 December 2023

சிவன் பார்வதியின் மகள்கள்.

 




சிவன், பார்வதி இவர்களுக்கு விநாயகர், முருகன் தவிர  மூன்று பெண் குழந்தைகளும் உண்டு. அவர்கள் அசோக சுந்தரி, ஜோதி மற்றும் மானஸா.

அதில் முதல் பெண் குழந்தையாக, வினாயகருக்கும்  மூத்தவளாக, 'அசோகசுந்தரி' என்ற பெண் மகவை பார்வதி  பெற்ற கதையை அறிவோமா? 


    ஒருமுறை, சிவபிரான் போருக்காக சென்றிருந்த சமயம் பார்வதி தேவி, நீண்ட நாட்கள் தனித்திருக்கும் நிலையைப் பொறுக்கமாட்டாமல், தனக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால், தன் பேச்சுத் துணைக்கும், அக்குழந்தையை வளர்ப்பதிலும் தன் நேரப் பொழுது, இனிமையானதாக இருந்திருக்கும் என ஏங்கி சோகத்தில் தவித்தாள்.. உடன் பார்வதிக்கு, தேவலோகத்தில் இருக்கும் கேட்டதைக் கொடுக்கும், 'கற்பக மரம்' நினைவுக்கு வந்தது. சிறிதும் தாமதியாமல், கற்பக மரத்திடம் சென்று தனக்கு ஒரு பெண் குழந்தையை வேண்டினாள்.


 உடன் பார்வதி தேவியின் கைகளில் அழகிய பெண் குழந்தை தவழ்ந்தது. தன் பெரும் சோகம் நீங்கப் பெற்றவளாய், அகமகிழ்ந்தாள் தேவி.


 'அ' எனற சொல் நேர்மறை எண்ணம் கொண்டது. சோகம் என்ற எதிர்மறை சொல்லுக்கு முன் 'அ' சொல்லைச் சேர்த்தும்,  ;சோகத்தைப் போக்கியவள்] மிகுந்த பேரழகுடன் குழந்தை இருந்ததால்' சுந்தரி' என சேர்த்து குழந்தைக்கு 'அசோகசுந்தரி' என பெயர் சூட்டினாள். 




பார்வதியால் உருவாக்கப்பட்ட கணபதியை யார்? என அறியாமல் சிவபிரான் போரிட்டு அவர் தலையைக் கொய்த போது, பயந்து அதிர்ந்த  அசோகசுந்தரி உப்புக் குவியலில்    மறைந்திருந்ததாக 'புராணக் கதை கூறுகிறது.இந்த பாலாம்பிகையே துர்க்கையின் மஹிஷாசுர வதத்தின் போது 'பண்டாசுரனின்' முப்பது புதல்வர்களோடு போரிட்டு வென்றாள் என லலிதா சஹஸ்ரநாமம் இவள் புகழைச் சிறப்பித்துக் கூறுகிறது.


அசோகசுந்தரி பருவ வயதை அடைந்ததும், இந்திரனுக்கு இணையான செவ்வாக்கு பெற்ற, 'நகுஷன்' என்பவனுக்கு திருமணம் முடித்தார் சிவபிரான்.. இவர்களது மகனே புகழ் பெற்ற 'யயாதி' ஆவான்.


அசோக சுந்தரி வழிபாடு வட மாநிலங்களில் பிரபலம்.  நம் தென்னகத்தில் அவ்வளவாக பிரபலம் இல்லை என்றாலும்  ' பாலா' என்ற நாமத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது . .



 பாலாம்பிகை கோயில் காஞ்சிபுரம் அருகே ' நெமிலி' என்ற ஊரிலும், திருநெல்வேலியிலும் திருக்கோயில் அமைந்துள்ளது.   

சிவபிரான் மற்றும் பார்வதியின் ஒளிவட்டத்திலிருந்து உதித்தவள் 'ஜோதி' . இவள் வெளிச்சத்தின் உருவகமாகக் கருதப்படுகிறாள். கத்ரு என்ற நாகதேவதை செதுக்கிய சிலையில் சிவனின் அம்சமாக உருவாகியவள்.அதனால், இவள் பெயர் 'மானஸா' எம்றும், இவள் பாம்புக் கடிக்கு தீர்வளிக்கும், கருணையுள்ளம் கொண்டவ்ள் என வட நாட்டு கிராமங்களில் மானஸாவை கொண்டாடுகின்றனர்.

    




No comments:

Post a Comment