Saturday 2 December 2023

பகவத்கீதா சாராம்சம் -17. அத்தியாபயம் 15. -புருஷோத்தமயோகம்.

 

  •      இந்த அத்தியாயத்தில் பகவான் உபநிஷதத்தின் சாரத்தை பிழிஞ்சு நமக்குத் தருகிறார். அகில பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழித்து பின் தம்முள் ஒடுக்கியும்,  ஸர்வ வல்லமையுடன் அடக்கி ஆண்டும், எங்கும் நிறைந்த பரம்பொருளாய்  அந்தர்யாமியாய் அனைத்திண்க்கும் ஆதாரமாய் விளங்கும் புருஷோத்தமனுமான பகவானுடைய குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம் போன்றவை வர்ணிக்கப்படுகின்றன. க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன், பரமாத்மா இம்மூன்றையும் வர்ணித்து,புருஷோத்தமனை அறிவதன் சிறப்பு, அவரை அடையும் வழி போன்ற பல விஷயம்ஹளைப் பற்றி நன்கு விவரிக்கப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'புருஷோத்தமயோகம்' என பெயரிடப்பட்டுள்ளது. 
  •                   இதன் ஆரம்பமே சம்சாரத்தை வர்ணிப்பது தான். மரங்களில் சிறந்ததான ஒரு பெரிய அஷ்வத்த மரத்தை (அரச மரம்) உருவகமாகக் கொண்டு, இந்த உலகியல் வாழ்வானது இம்மரத்தினைப் போல் ஆரம்பமும், முடிவும், அதன் இருப்பும் எது காண்பதற்கு அகப்படாதது என்று இரண்டுக்கும் பொதுவான குணங்களைச் சொல்கிறார். ஜீவராசிகள் - மரத்தின் கிளைகள். இது மேலே, கீழே என பரவி இருக்கின்றன. மரத்தில் இருக்கும் பழத்தை ஜீவன் சாப்பிடுகிறான். சில பழம் புளிக்கும், சிலது இனிக்கும். இது சுக, துக்கத்தைக் காட்டுகின்றது. ஜீவன் தொடர்ந்து சுகதுக்கத்தை அனுபவித்துத் தான் தீரவேண்டும். சுகத்தை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அப்படியே துக்கத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கவேண்டும். அல்லது உலகிலுள்ள அத்தனை சுகங்களையும் துறப்பதன் மூலம் துக்கத்தைத் தவிர்க்கலாம். ஆனால் இதற்கு மனம் மிகவும் பலமானதாக இருக்கவேண்டும். மனம் மட்டும் தான் பந்தம்அல்லது மோக்ஷத்திற்கு காரணம்.  பலகீன மனம் பந்தப்படுகிறது. திடமான மனம் மோக்ஷத்தை அடைகிறது என சம்சாரத்தைப் பற்றி விளக்குகிறார்.
  • No comments:

    Post a Comment