Friday 15 December 2023

புன்னை நல்லூர் முத்து பல்லக்கு

 




தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட காவல் சக்திகளை நிறுவி வழிபட்டார்கள். தஞ்சையின் கிழக்குப் பகுதியில் அமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் புன்னைநல்லூர் மாரியம்மன்.

 கடல் கடந்து சோழ சாம்ராஜ்யம் எங்கெல்லாம் கொடி நாட்டியதோ? அங்கெல்லாம் மாரியம்மனின் அருட்கொடி பரவியிருந்தது என்றால் அது மிகையல்ல. 






சோழர்களால் இந்த அம்மன் ஸ்தாபிக்கப்பட்டாலும், பின்னால் வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அம்மனின் மஹிமையை உணர்ந்து, பல திருப்பணிகள் செய்துள்ளனர்.


 புன்னைவனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இந்த அம்மனைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் என பெயரிட்டு, அரும்பணி தொடங்கி வைத்த மராட்டிய மன்னர் வெங்கோஜி' மகாராஜா முதல், பல ஆங்கிலேய அதிகாரிகள், கடைசியாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இன்றளவிலும் பல பக்தகோடிகள்   மாரியம்மனின்   சக்தியை  உணர்ந்து வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம். 


சரபோஜி மன்னர் தன் ஆட்சிக் காலத்தில், மகாமண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் இரண்டாவது பெரிய சுற்றுச் சுவர் என விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளார். 


இந்த அம்மனிடம் அம்மை நோய் முதல் தங்களது பலவித கஷ்டங்களுக்கும் தீர்க்க வேண்டியபடி பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்வோடு அம்மனைக் கொண்டாடி, நேர்த்திக் கடன்   செலுத்தி   செல்லுகின்றனர்.  




ஆகஸ்ட் 15 இன்றைய தினம் ஆடி மாத கடைசி ஞாயிறு. இத்தினத்தில் அம்மனை அலங்கரித்து 'முத்துப் பல்லக்கில்' வீதி உலா வரும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் சாலையின் இரு புறங்களிலும் ஆவலோடு கூடியிருப்பர்.


No comments:

Post a Comment