Saturday 16 December 2023

கிருஷ்ண லீலை தாத்பர்யம்.

 




கிருஷ்ணாஷ்டமி  கோகுல கண்ணனின்  ஜன்மாஷ்டமியை நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். காரணம் : கிருஷ்ணனின் வசீகரத்தோற்றமும், குறும்பு லீலைகளும், கள்ளங்கபடமற்ற அன்பு நெஞ்சமும் அனைவரையும் அவன்பால் கவர்கிறது என்பது உண்மை. 

       ஆம்! நாம் எப்படி பக்தி செலுத்துகிறோமோ/ அப்படியே நம்மிடத்தில் காட்சியளித்து ஒட்டி உறவாடி விளையாடி மகிழ்விப்பான் கண்ணபிரான்.  பல மகான்களும் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதை பாரதியாரின் பாடல் மூலம் நன்கு உணரமுடியும்.
  "எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" 
என்று சேவகனாக, தோழனாக, தோழியாக, அன்னை, தந்தையாக  காதலன் , காதலி என பலவடிவங்களில் கற்பனையில் வடித்துப் பாடியிருப்பார்.
         கிருஷ்ண ஜன்மாஷ்டமியைத் தொடர்ந்து அடுத்த நாள் "உறியடி" நிகழ்ச்சி நாடெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். எதனால் இது கொண்டாடப்படுகிறது என்று இதன் பின்னணியை ஆராய்ந்தால், 
கோகுல மக்களிடத்தில் மன்னன் கம்சன் கொடுங்கோலனாக அதிக வரி விதித்தும், அவர்களது மூல வாழ்வாதாரமான தயிர், வெண்ணெய் போன்றவற்றில் பெரும்பகுதியை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மிகவும் துன்பமிழைத்தான்.           

       அதனால், கோகுலத்தில் கோபியர்கள் வெண்ணெயை கடைந்து விற்பனைக்காக சேமித்து மேலே கயிறு கட்டி உறியில் பத்திரப்படுத்தி இருப்பார்கள். அதை தன் நண்பர்களுடன் சென்று பானையை எடுத்து கவர்ந்து உண்டு வாரி
 இறைப்பான். தன் குறும்பாலும் அன்பான பேச்சாலும்


தன் மக்கள் மனதில் தேவையற்ற பயத்தை    போக்குவதற்காகவும்,  தவறை தைரியமாக தட்டிக் கேட்கவேண்டுமென்றும்  உழைப்பின் உரிமையை அவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற உண்மையை அவர்களுக்கு புரிய வைத்ததோடு, இதன்மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் கம்சனுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். 
  இதை கருத்தில் கொண்டே, பின்னாளில் உறியடி நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உயரத்தில் பானையில் 'பரிசுத் தொகையை வைத்து அதை கம்பால் அடித்து உடைத்து எடுக்கும் படியும், அப்படி உடைக்க முற்படும் சமயம் ,அவர்களது முயற்சியை தடுக்கும் வண்ணம் பானையை இன்னும் உயரத் தூக்கியும் போட்டியாளர் மீது தண்ணீரை இறைத்தும் விடுவர். 
           இதுவே வட இந்திய மக்கள் வழுக்கு மரத்தின் உயரே உள்ள பானையை அடைவதற்கு, குழுவாக நான்கு பேர் மற்றவர் தோள்மேல் கையை கட்டி கூம்பு போல் நிற்க, அவர்களின் மேல் அடுத்தடுத்து நபர்கள் உயரே ஏறி பானையை கைப்பற்றுவர். அவர்கள் வழுக்கு மரத்தில் அவர்கள் ஏற முடியாமல் தடுக்கும் வண்ணம் தண்ணீரை அவர்கள் மீது வாரி இறைப்பர்.
    இதையும் மீறி பரிசுப் பொருளை எட்டிப் பறிப்பர் இளைஞர் குழாம். பெருமக்கள் கூட்டம் இதை ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தி மகிழ்வர். 




No comments:

Post a Comment